STORYMIRROR

Mohan Prasath

Drama Romance

3  

Mohan Prasath

Drama Romance

கடற்கரை ஓரம்

கடற்கரை ஓரம்

1 min
208

தென்றலில் மிதக்கும் இலையாய்  என்முன் வந்தாய்!

காந்த கண்ணினால் கவர்ந்து சென்றாய்!

செவியின் ஓரம் கூந்தலை ஒதுக்கி

என் மனதைக் குழப்பி போகிறாளே ஒருத்தி!

மங்கையை கண்டால் மறைந்துஓடும் நான்;

உன் விழி கண்டு மயங்கி போனேனோ!

இதழில் பூசிய வண்ணம் வெகுவாக கவர்ந்து இழுக்க,

நத்தை போல என் கால்கள் உன் பின்னே நடக்க!

என்னிடம் இதயம் இருப்பதே உன்னால் தான் தெரியும்,

உன்னிடம் நெருங்கும்போது படபடக்கும்போது புரியும்!

உன்இரு விழிகளும் என் உதடை சரணடையச் செய்தனேவே!

நான் பேச நினைத்த வார்த்தைகள் அனைத்தும் மறந்தனவே!

என் காதலை கூற,

நாணத்தில் உன் தலை வாட,

கடல் அலைகள் நம் கால்களை வருட!

நொடிப்பொழுதில் உன் முகத்தில் புன்னகை மலர!

உன் உதடுகள் எனக்கு சாட்சி சொன்னது!

திகைத்துப்போய் என் மனம் நின்றது!

உன்னுடன் கைகோர்த்து நடந்தேனே!

இதழோடு இதழ் பதிக்க முயன்றேனே;

வெட்கத்தில் தள்ளிப் போனாயே!

முத்துக்கள் வெட்கத்தில் சிற்பியினுல் சென்றது!

கடல்நீரோ வெட்கத்தில் உறைந்தது!

இதுபோல் என் வாழ் நாள் முழுக்க!

என்னுடன் வருவாயா கைகளை கோர்த்து நடக்க!



Rate this content
Log in

Similar tamil poem from Drama