STORYMIRROR

Mohan Prasath

Inspirational

4  

Mohan Prasath

Inspirational

வறட்சி

வறட்சி

1 min
261

தாலாட்டி தூங்க வைத்த மரங்கள் எங்கே?

இன்னிசையால் மயங்க வைத்த புள்கள் எங்கே?

ஏரி ,குளம் , ஆறுகள் எங்கே போனது?

செடிகொடிகள் மண்ணோடு மண்ணாய் மடிந்து போனது!

ஏர் உழுத நிலங்கள் எல்லாம் எங்கே போனது?

சேற்றில் விளையாடிய இடங்களும் காணாமல்போனது!

பெரிதுபெரிதாய் நீர் உறிஞ்சிகளை வைத்துக் கொண்டனர்!

வற்றவற்ற நீரை எடுத்துச் சென்றனர்!

அன்றோ மண்ணைத் தொட்டால் கை முழுவதும் ஈரமானது

இன்று ஆயிரம்அடி தோண்டினாலும் நீர் காணாமல் போனது!

பசியும்பஞ்சமும் ஊரெங்கும் படர்ந்து இருக்குது!

முற்செடிகள் மட்டுமே விளைந்து நிக்குது!

தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் இல்லை!

பசிக்காக இரந்து வாழ்கிறது எங்கள் பிள்ளை!

அடிமை வாழ்வில் இருந்து நாம் எப்போது மீண்டோம்!

இன்று ஒரு துளி தண்ணீர் இன்றி நாங்கள் மாண்டோம்!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational