யார் பெரியவர்?
யார் பெரியவர்?
இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு நம்ம பேராசிரியரைப் பார்க்கப் போறோம்! ஏதாவது வாங்குவோமா! கனகசபை.
அவங்க யார்கிட்டேயும் ஒண்ணும் வாங்க ாட்டாங்கன்னு தெரியும்தானே! என்றார் அரசியல்வாதி ஜெபராஜ்.
கனகசபை இவர்கள் இரண்டுபேரும் பேசுவதைக் கேட்டபடி வெள்ளைக்கோட்டை மடித்து வைப்பதிலேயே குறியாக இருந்தார்.
காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த சுகா ஜட்ஜ் அவங்களுக்கு உடம்பு ரொம்ப முடியலைன்னு என் அசிஸ்டெண்ட் சொன்னார். வாழ்க்கையில் நீங்க எல்லோரும் சொன்னபடி சாதிச்சிட்டீங்கன்னா என்னைப் பார்க்கவரலாம்னு சொன்னாங்க!.யார் பெரியவர்னு சண்டை போட்டோமே அன்றுதானே!
ஆமாம் டாக்டர் கனகசபை அவர்களே! என பரிகாசமாக ஜெபராஜ் சிரிக்கலானார்.
இப்போதாவது நீ சொல்! ...... யார் உயர்ந்தவர் சுகா?
நம்ம ஆசிரியர்தான் உயர்ந்தவர் என்றாள் சுகா.
எப்படி சுகா?
ஒரு நல்ல நாட்டிற்கு அடிப்படை தூண்கள் காவல்,மருத்துவம்,நீதி,அரசியல்வாதி.இவர்களுக்கெல்லாம் கற்றுக்கொடுத்தவர் ஆசிரியர்தானே!
பியானாமணிபோல காருக்குள் வைத்திருந்த முயல்பொம்மை வாசிக்க ஆரம்பித்தது.