DEENADAYALAN N

Classics Inspirational

4.8  

DEENADAYALAN N

Classics Inspirational

வரலாறு சொல்லும் புகைப்படங்கள்!

வரலாறு சொல்லும் புகைப்படங்கள்!

2 mins
1.0K





நம் குழந்தைகள், பேரன் பேத்திகளின் புகைப் படங்களே, எப்போது பார்த்தாலும் ஒரு நெகிழ்ச்சியை தரும். அப்படியிருக்க அந்தக்கால புகைப்படங்கள் பற்றி சொல்லவா வேண்டும்!


அந்தக் காலத்தில் நாம் எடுத்த முதல் புகைப்படம் பெரும்பாலும் எப்படி இருக்கும்? நான்கு கட்டங்கள் – முதல் கட்டத்தில் நான் – அடுத்த கட்டத்தில் என் அண்ணன் – அதற்கடுத்த கட்டத்தில் இருவரும் – நான்காவது கட்டத்தில் பிறைநிலவில் ஒரு ஒருவர். 


என் திருமண புகைப்படத்தில் என்னைப் பார்த்து நானே வருத்தப்பட்டதுண்டு! – எப்படி இந்த மூஞ்சியை என் மனைவி ஏற்றுக் கொண்டார் என்று. கேட்டால், “எங்க அப்பாப் பார்த்து ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்ட சொன்னாலும் நாங்கெல்லாம் நீட்டி விடுவோம்” என்கிறார்.(கொடுத்து வைத்த கழுதை – தப்பித்து விட்டது!)


சுமார் நூறு பேர் கொண்ட குழுப் படங்களைப் பார்ப்பது ஒரு தனி தமாஷ்

–   இதுதாண்டா நம்ம கின்னி.. நம்ம ராஜீயோட, வீட்டுக்காரரோட, பெரிய மதனியோட, ஒன்னு விட்ட.. (ஸ்.. யப்பா..

இப்பொவே கண்ணக் கட்டுதே!)

–   ஐ இந்த ஆளப்பாரு அப்பிடியே கொரங்கு மாதிரி இருக்காரு – டேய் அது உன் அப்பாடா..

–   இந்த ஆளுதான் விபத்துலே செத்துட்டாறே நம்ம கனிமுத்து.. அதான்பா.. எப்பொ பார்த்தாலும் ‘லொக்கு லொக்கு’ன்னு

இருமிகிட்டே இருப்பாறே.. – ஓ.. அவரா. ஆமா ஆமா’ – ஆங்.. அவுருதான்.. அவரோட மொதல் பெண்டாட்டி யோட

ரெண்டாவது பையன்

– டேய் இவனத் தெரியுதா.. இவந்தான்டா நம்ம அறைப்பல்லு அங்குதேவு.. இப்பொ கடைவீதிலே பொரிக் கடை

வெச்சிருக்கானே..


பின்னொரு சமயம் எடுக்கப்பட்ட கருப்பு-வெள்ளை புகைப் படங்களில் – நானும் மனைவியும் அப்பழுக்கில்லாத முகங்களுடன் ‘பளிச்’ என்று மிகவும் களையாக இருப்போம். பின்னாளில்தான் தெரிந்தது அவையெல்லாம் ஃபோட்டோஷாப் மென்பொருள் இல்லாத அந்த நாளிலேயே திருத்திய (edited) புகைப்படங்கள் என்று.


தாய் மாமன்கள் இருவரின் புகைப்படம். சுமார் எழுபது வருடத்திற்கு முந்தியது. இருவரும் அரசாங்க காக்கி சீருடையில் இருந்தனர். அரை ட்ரவுசர்தான். முழங்கால் வரை காலுறை-கருப்பு ‘பூடீஸ்’. சின்ன மாமா ஒரு கையில் வட்டத்தொப்பியும் மறு கையில் ரூல் தடி போல் ஒரு தடியும் வைத்துக் கொண்டு நிற்கிறார். பெரிய மாமா அமர்ந்திருக்கிறார். அவர் கையில் நேரு குல்லா போல் ஒரு குல்லாய்! பார்க்க மிகவும் கம்பீரமாய் இருந்தது. நம் முன்னவர்கள் இப்படியெல்லாம் இருந்தார்களா என்று பெருமையாகவும் இருந்தது.


என் தாய் வழித் தாத்தா புகைப் படம் கிடைத்தது. அவரும் மேற்சொன்னதைப் போலவே சீருடையுடன் நிற்கிறார். அருகில் நன்கு துடைக்கப்பட்ட புது மெருகுடன் ஒரு மிதிவண்டி ‘ஸ்டான்ட்’ போட்டு நிற்கிறது. அவருக்குப் பின்னால் வெள்ளை வேட்டி சட்டையில் முண்டாசு கட்டிக் கொண்டு உதவியாளர் போல் ஒருவர் நிற்கிறார். பிற்காலத்தில் என் தாத்தா எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்ததாகவும் திடீரென ஒரு நாள் ‘ஜபல்பூரி’லிருந்து ஒரு பெட்டியும் ஒரு கடிதமும் வந்ததாகவும் அதில் அவர் ஜபல்பூரிலேயே இறந்து விட்டதாகவும் தெரிந்ததாம். அந்தப் பெட்டியில் அவருடய ‘அஸ்தி’ இருந்ததாகவும் அதை நம் நீர் நிலை ஒன்றில் கரைத்ததாகவும் என் தாயார் சொல்லுவார்.


பார்க்கப் பார்க்க ஒன்று தோன்றியது. பழைய புகைப்படங்கள் வெறும் புகைப்படங்கள் அல்ல. ஒரு தருணத்தில், அவை ஒரு வரலாற்றையே சொல்லும் காலப் பெட்டகங்களாகவும் திகழ்கின்றன!


நன்றி எஸ்.எம்!





Rate this content
Log in

Similar tamil story from Classics