STORYMIRROR

Saravanan P

Drama Action

4  

Saravanan P

Drama Action

வந்தியத்தேவன் வருகிறான்

வந்தியத்தேவன் வருகிறான்

1 min
293

பொன் தீபங்கள் ஒளி வீச சோழ அரண்மனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அருள்மொழியின் மனைவி,சோழத்தின் குலவது வானதியின் வளைகாப்பு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடந்தை சோதிடர் ஏனோ அங்கு வரவில்லை.இது குந்தவை மட்டும் அல்ல வானர்குலத்து வந்தியத்தேவனையும் சற்று யோசிக்க வைத்தது.

வந்தியத்தேவன் குந்தவையிடம் ஏன் அன்பே உனக்கு இந்த சோதிடம் மீது நம்பிக்கை உண்டா?

குந்தவை ஆம் அய்யனே , குடந்தை சோதிடர் கணித்து அனைத்தும் நடந்துள்ளது ஆனால் அவர் ஏன் விழாவுக்கு வரவில்லை.

வந்தியத்தேவன் நான் அவரை பார்த்து கேட்டு வருகிறேன் என புறப்படுகிறான்.

அங்கு வந்தியத்தேவன் குடந்தை சோதிடரை சந்தித்து சில உண்மைகளை அறிகிறான்.

அரண்மனையில் வானதி தனது கருவிலுள்ள குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறாள்.

கருவிலுள்ள கண்மணி கண்இமைகள் பிரிய மறுத்து உறக்கமா?

உன் தன் தாயின் வலியை கண்டு வருத்தமா?

உன்னில் நான் என்னை கண்டேன் 

உன்னை விட்டு நான் எங்கே செல்வேன்.

அங்கு வந்த குந்தவை என்ன வானதி? இப்பொழுதே தாலாட்டா, சிறிது பாடல்களை பாடாமல் வைக்கவும்.குழந்தை பிறந்த பிறகு பாட வேண்டாமா? என்று கூறி நினைத்தாள்.

வானதி கண்களில் நீர் ததும்ப நான் இருப்பேனோ இல்லையோ என கூறினாள்.

குந்தவைக்கு தூக்கிவாரிப் போட்டது. வானதி என்ன வார்த்தை பேசுகிறாய், கருவுற்றுள்ள பெண்கள் நல்ல எண்ணங்களை மனதில் நினைக்க வேண்டும்,அது மட்டுமல்ல உன் குழந்தைக்கு தாய் வேண்டாம் என முடிவு கட்டி விட்டாயா? 

வானதி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றாள்.

நாட்கள் நகர்ந்தன 

வானதிக்கு பிரசவ வலி எடுத்த நாள், ஒற்றர்கள் அவசர செய்தி எடுத்து வந்தார்கள் 

நாட்டில் விவசாயிகள் விளைச்சல் இன்றி அவதியுறும் நிலையில் அவர்கள் போராட்டத்தை பயன்படுத்தி சோழ அரச குடும்ப எதிரிகள் படையேடுத்து வருகின்றனர்.

அருள்மொழி நானே சென்று படையை வழிநடத்துக்கிறேன் என கூறியவுடன் வந்தியத்தேவன் இல்லை தோழரே தாங்கள் இன்று வானதியுடன் இருந்தாக வேண்டும் என கூறி போருக்கு புறப்படுகிறான்.

பிரசவத்தில் வானதிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது ஆனால் வானதி குழந்தைக்கு உயிர் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல புறப்பட்டு விட்டாள்.

போரில் வந்தியத்தேவன் வெற்றிவாகை சூடி திரும்புகிறான்.

சில‌ வருடங்கள் கழித்து பாசறையில் ஒரு குரல் ஒலிக்கிறது

அருள்மொழிவர்மன் அரசரின் புதல்வன் ராசேந்திர சோழன் வருகிறார்.



Rate this content
Log in

Similar tamil story from Drama