வீர இருவர் அத்தியாயம் 1
வீர இருவர் அத்தியாயம் 1
மலைக்கோட்டையின் படிக்கட்டுகளில் ஏறி செல்லும் போது விக்னங்களை தீர்ப்பாய் கணநாதா என்று மனதில் சொல்லி கொண்டு சென்றாள்.
அவளுக்கு கணபதி கடவுள் அல்ல சமயோசித புத்தியை பயன்படுத்த ஊக்கம் குடுத்த ஆசான் ஆவார்.
பின்பு தரிசனம் முடித்து குன்றின் மேல் அமர்ந்து பொன்னி நதியை நோக்கினாள்.
பொன்னி நதியோ ஆக்ரோசத்தில் பிரவாகமாக பாய்ந்து சென்றது.
நதியின் அருகே அப்பொழுது ஒரு குரல் ஒலித்தது
நிலவின் குளிரை நிலத்தில் தந்தாய்
வளைந்து நெளிந்து என்னை கடந்து சென்றாய்
பொன்னி பொன்னி ஒருமுறை பாரு என்னை எண்ணி
பிறந்த இடம் விட்டு புகுந்த இடம் செல்லும் பெண்ணே
கோபம் குறைத்தால் பயணம் பிடிக்கும் கண்ணே
பிறகு அந்த இளைஞன் தனது உணவு பொட்டலத்தை பிரித்து உண்ண ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் அவனது நண்பன் வேலன் வந்தான். பிறகு இருவரும் தத்தம் தனது குதிரையில் ஏறி வேதமாநகரம் நோக்கி பிரயாணத்தை தொடங்கினர்.
வேலன் மன்னரின் யானைகள் படையின் முக்கிய பொறுப்பை வகித்தான். வேதமாநகரத்தில் நடைபெறும் ஆலய உற்சவத்திற்கு அவனை அழைத்துச் செல்ல வேலன் வந்தான்.
அவர்கள் வேதமாநகரம் வந்தடைந்த பொழுது மக்கள் கூட்டம் அலை மோதியது. பின்னர் அவர்கள் இளைப்பாற அரச மாளிகையை அடைந்தனர்.
அங்கோ குன்றில் அமர்ந்திருந்த பெண்ணின் அண்ணன் அங்கு வந்து தனிமையை விரும்பும் என் தங்கை பொன்னி எப்பொழுது வீட்டுக்கு வருவதாய் உத்தேசம் என்றபடி அவளை அழைத்துச் சென்றான்.
அந்தி மங்கும் நேரத்தில் ஒரு கிராமத்தில் ஒரு நெடிந்த உருவம் குதிரையை அழைத்து கொண்டு வந்து ஏரியை அடைந்தது.
பின்பு தனது கூட்டாளிகளை அழைத்து கொண்டு வேதமாநகரம் நோக்கி பயணத்தை தொடங்கியது.
வீர இருவர் அத்தியாயம் 2 என தொடரும்...
