வேர்கடலை
வேர்கடலை


மழையில் நனைந்தபடி கடலை விற்றுக்கொண்டிருந்த நண்பன் தியாகுவை ஒருகணம் பிரபு உற்றுப்பார்த்தான்.
இன்று தீபாவளிடா! இன்று உனக்கு ஓய்வில்லையா!
இன்றுதான் மெரினாபீச்சுக்கு நிறைய பேர் குடும்பமா வருவாங்க!
அங்கே இன்று கட்சி மீட்டிங்குன்னு சொன்னாங்களே!
அதெல்லாம் மாற்றி வேறு இடத்திற்கு போட்டாச்சு!
பரீட்சைக்கு பணம் கட்டணும்.
அப்பாவுக்கு உடம்பு முடியலை. மருந்து வாங்கணும்.
அம்மா இட்லிகடை அப்பாவைப் பார்த்துக்கறதனால இரண்டுநாள் லீவு….
நான் பணம் தருகிறேன்.
வேண்டாம். எனது குடும்பத்தைப் பார்க்கவேண்டியது என்கடமை.
எனது நண்பனைப் பார்க்கவேண்டியது எங்களது கடமை எனக்கூறி நீ வேர்கடலையை எங்களுக்கும் கொடு! நாங்களும் மகாபலிபுரம் டூர் போகிறோம். அங்கு உனக்கு விற்றுத் தருகிறோம் என்றான் பிரபு.
உடுக்கை இழந்தவன் கைபோல என எங்கோ மீட்டிங்கில் கட்சிக்காரன் பேசியகுரல் தியாகுவின் காதில் விழுந்தது.