வாடகைத் தாய்
வாடகைத் தாய்


எனக்கு அவங்களைப் பார்த்தால் ரொம்ப பிடிக்குது பாட்டி!
ஈசிசேரில் சாய்ந்தபடி படுத்திருந்த கணவனை எட்டிப்பார்த்தாள் காஞ்சனா.
உங்க பேரன் சொல்றதைக் கேட்டீங்களா?
படித்து படித்து சொன்னேன். அவ வேண்டாம்..வேலைக்கு என்று..டாக்டர்தான் அவளை உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
அவள் யாரென்று ரவியிடம் சொல்லவேண்டாம் என்றார்.. இப்போது பார்த்தீர்களா!?என்றாள் விசனத்துடன். வயதான காலத்தில் சரோகசியில் குழந்தை எடுங்கன்னு சொன்னேனா?
ஈசிசேரில் சாய்ந்திருந்த ஈஸ்வர் மெதுவாக உனக்கு என் காலத்திற்குப் பிறகு துணை வேண்டும் என்றுதான் சொன்னேன். ஆனால் நீ என்னவென்றால் இப்படி பேசுகிறாயே!
சொத்தைஎல்லாம் இந்த பிள்ளைபெயரில் எழுதிட்டீங்க! இதுக்கு வயசானப்புறம் இவதான் அம்மான்னு தெரிஞ்சுதுன்னா இழுத்துட்டு ஓடிப்போய்டும்.
அதை எடுக்கிறதுக்கு முன் யோசிச்சிருக்கணும்…..வயிற்றில் வளர்த்த பிள்ளைகளே இன்னைக்கு ஏன்னு கேட்பது கிடையாது. இந்த நேரத்தில் இவனைப்போய் சொல்கிறாயா! வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறதில்லையா?
அப்ப நான் ரோபோவே வாங்கி வைத்திருப்பேனே!
மதுமதி வருகிறாள்…வாயை மூடு……….
ஐயா! நீங்க சொன்னதை நான் கேட்டேன். எனக்கு அவன் பிள்ளை அப்படின்ற விஷயத்தை நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன். எனக்கு யாரும் கிடையாது. இருக்கச்சொன்னால் இருக்கிறேன். இல்லையென்றால் போகிறேன் என சுவரை வெறித்துப் பார்த்தாள்.
தாய்ங்கற உணர்வைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு இந்த பத்துவருஷத்துல உன் பையனை வைத்து பார்த்துட்டேம்மா! தண்ணீர் எப்பவும் அது உறவுகளைத்தேடித்தான் ஓடும். அதுமாதிரிதான் இதுவும்னு புரியுது!
நீயும் தாய் உணர்வுகளை மறைத்து வைத்தாலும் என்னைக்காவது ஒருநாள் வெளியாகும். அப்ப என் நிலையை யோசித்தாயா?
உள்ளே சென்ற மதுமதி பெட்டி, படுக்கையுடன் வாடகைத்தாய்க்குரிய பணத்தைச் சேர்த்து வைத்திருந்ததை எடுத்து ஈஸ்வரிடம் தந்தாள்.
ஐயா! நான் இந்த தொழிலைப் பணத்துக்காகச் செய்யலை. குழந்தை இல்லாமல் ஒரு குடும்பம் மிகுந்த சோகத்தில் இருக்காங்கன்னு டாக்டர் சொன்னாங்க! எனக்கு கணவன் பாக்யம் கல்யாணம் ஆன இரண்டாம் நாளில் இருந்தே கிடையாது. அட்லீஸ்ட் ஒரு தாயாகவாவது ஆகமுடிந்ததே என சந்தோஷப்படுறேன் எனக் கூறியபடி வாசலைக் கடந்து வெளியே சென்று கொண்டிருந்தவளைக் காஞ்சனா கூப்பிடவேயில்லை.