வானம்
வானம்


வானம் எல்லையில்லாமல் அழுது கொண்டிருந்தது.
நிலா நான்கு நாட்களாக வெளியே தலைகாட்டாமல் மறைந்து கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் நிலாவுடன் விளையாட மறந்து வெறுத்துப்போய் வானத்துடன் போராட களத்தில் குதிக்கத் தயாராக இருந்தன.
வானமே! நீ செய்வது சரியா?
நான்கு நாளாக விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறாயே!
பார்! ஓரறிவுமுதல் ஆறறிவுவரை அனைவரும் படும் வேதனையை!
இது ஐப்பசி மாதம்.முன்னெல்லாம் முழுமாதமும் மழை பெய்தால்தான் விவசாயம். இப்ப நாலுநாள் மழைக்கே போராடுறீங்களே
அதிக மக்கள்தொகைப் பெருக்கம் தான்.
இப்ப மழை பெய
்தால்தான் ஏரி,குளம்,கிணறு எல்லாம் நிறையும். அங்கேபார்! சென்னையில் கொட்டும் மழையில் தண்ணீர் குடம் தெருக்குழாயில் அடித்துத் தூக்கி வருவதை…….
தார்ரோடு,சிமெண்ட்ரோடு போட்டு தண்ணீர் எல்லாம் பூமிக்குள்ளே போறதில்லை….
இன்னமும் கிணறெல்லாம் காய்ந்து போய்த்தான் கிடக்கு……
அமைதியா இருங்க..நாலுநாள் கழித்து விளையாடலாம். நிலாவுடன் நானும் விளையாட வர்றேன்னு சொல்லுங்க……
பெய்யுற காலத்துல சேர்த்து வைக்கணும்..அப்பதான் இல்லாத காலத்துல உட்கார்ந்து சாப்பிடமுடியும்..இது எல்லாத்துக்கும் பொருந்தும். அப்பதான் அமைதியா இருக்கும் வாழ்க்கை……….