Amirthavarshini Ravikumar

Inspirational Others

4  

Amirthavarshini Ravikumar

Inspirational Others

வாகை சூடியவள்

வாகை சூடியவள்

2 mins
156


    ஒரு சிறிய பின்தங்கிய பழமையான கலாச்சாரங்கள் நிறைந்த கிராமத்தில் தனம் என்னும் இளங்கலை பட்டம் முடித்த பட்டதாரி பெண் வாழ்ந்து வந்தாள் . விளையாட்டாக இருந்தாலும் சரி கல்வியாக இருந்தாலும் சரி காலையாக இருந்தாலும் சரி அனைத்தையும் சிறப்பாக செய்து வெற்றி அடைவாள். அவளுக்கு சுயமாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவள் வீட்டின் கட்டுப்பாடுகளும் கிராமத்தின் கட்டுப்பாடுகளும் அவளின் ஆசைக்கு தடையாக இருந்தது. அவளைப் போல் பல பெண்களும் அந்த ஊரில் தன் ஆசைகளை தியாகம் செய்துவிட்டு யாரோ ஒருவருக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருந்தனர். 

   தினமும் ஆன்லைனில் ஒரு சிறு நிறுவனத்துடன் சேர்ந்து கைவினைப் பொருட்கள் செய்து விற்க ஆரம்பித்தாள். வரும் வருமானத்தை சேமிக்க ஆரம்பித்தாள். 2, 3 வருடத்திலேயே அந்த தொழில் நல்ல பலனை தனத்திற்கு அளித்தது. முதலில் தனத்தின் பெற்றோர் இத்தொழிலை செய்ய விருப்பம் இல்லாமல் தான் சம்மதித்தனர். ஆனால் இப்பொழுது அந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. தனம் பெற்றோரின் வாங்கிய கடனை தன் வருமானத்தின் மூலம் அடைத்து விட்டாள். இதனால் அவள் பெற்றோரும் அவளைக் கண்டு பெருமை அடைந்தனர். 

     ஒருநாள் அவள் வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது. ஊரார் அனைவரும் வெளியே வந்து பார்த்தனர். தனத்தின் அம்மா வெளிய வந்து பார்த்தாள். அப்பொழுது காரிலிருந்து இறங்கிய ஒரு நபர் இது தனத்தின் வீடு தானே என்று கேட்டார் தன் அம்மாவும் "ஆம், உள்ளே வாருங்கள்" என்றார். தனம் அந்த நபரை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தாள். "சார் நீங்களா... "

 "ஆம் தனம் நான்தான். உன்னால் விருது வாங்கும் இடத்திற்கு வர முடியவில்லை அல்லவா அதனால் நான் ஏன் விருதை எடுத்துவிட்டு உன் வீட்டிற்கு வந்துவிட்டேன்" என்றார்.

 தனத்தின் அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை "யார் இவர்? " என்று கேட்டார். 

" அம்மா இவர் நான் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி" என்றாள். 

"உங்கள் தனம் நன்றாக வேலை செய்ததற்காக இந்த வருடத்தின் சிறந்த உழைப்பாளி கான விருதை தனம் பெறுகிறாள்" எனக் கூறினார்.

 தனத்தின் பெற்றோருக்கு அளவில்லா ஆனந்தம். அந்த விருதை தன் பெற்றோரிடம் கொடுக்கும்படி தனம் தன் முதலாளியிடம் கூறினாள். அவள் பெற்றோர் அந்த விருதைப் பெற்றுக் கொண்டனர். ஊரில் உள்ள அனைவரும் தனத்தை பாராட்டினர்.

 சிறிது நாட்களில் தனம் சொந்தமாக கைவினைப்பொருட்கள் உருவாக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தாள். அது ஒரு வருடத்திலேயே மிகப்பெரிய வெற்றியை தந்தது. தன் அம்மா அப்பாவிற்கும் பெருமை சேர்த்தாள்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational