ஊரடங்கு
ஊரடங்கு


ஒரு மணி வரைதான் கடை இருக்கும். அதுக்குப் பிறகு இவங்கதான் கடை வச்சிருக்காங்க! என்றாள் செங்கரும்பு.
உன் வேலையைப் பார்த்துக்கொண்டு இரு.....என்றான் இனியன்.
எதிர்வீட்டில் இருந்துகொண்டு இதுபோல பேசினால் பெண் என உன்னை அசிங்கமாகப் பேசுவார்கள். நீ வெளியில் வேலைக்குப் போனால் தொல்லை செய்வார்கள். அவர்கள் என்ன விற்றால் உனக்கு என்ன?
போலிசுக்கும் கட்டிங்தொகை போகிறது..அரசியல்வாதி தொடர்பு உள்ளவன் என்ற பேச்சு வேறு உள்ளது.
அப்ப சிகரெட் முதற்கொண்டு உடலுக்கு தீமை தருவது எல்லாம் விற்கலாமா இந்நேரத்தில்?!
வீட்டு வாசலில் சாமி படத்தைத் தொங்கவிடு! வேப்பிலை,மஞ்சள் கலந்த தண்ணீரால் கழுவி விட்டு உள்ளே போ!
>நம்ம குடும்பம் பாதுகாப்பாக இருக்க நாம் இதைத்தான் செய்ய முடியும்...புரிந்ததா! டென்ஷனாக இருந்தால் உள்ளே நிறைய புத்தகங்கள் அலமாரியில் இருக்கிறது.
எடுத்துப்படி! நிறைய கைவேலைப் பொருட்கள் செய்து வை.....! லேப் இருந்தால் வீட்டிலேயே நமது வீட்டு சமையல்பொருள்களிலிருந்து சித்தமருந்து தயாரிப்பதைப் போன்று கரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கலாம் என்ற நினைப்பில் இருக்காதே! காலத்திற்குத் தகுந்த வேஷம் போடணும்.
பக்கத்து கடைக்குக்கூட இனி இயந்திரம்தான் தேவை என்ற காலம் வரும்.சுத்தமாக இருந்தால் எதுவும் வராது. இவர்கள்தான் எச்சில் துப்பியும்,பிளாஸ்டிக்கும் பயன்படுத்தி நாசம் செய்கிறார்களே என முணுமுணுத்தபடி நகர்ந்தாள் செங்கரும்பு.