ஊர் வம்பு
ஊர் வம்பு


காட்டில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. சிங்கனும், ரங்கனும் விவசாயிகள்.
நல்ல மழை பெய்யுதே! இந்த வருடம் விளைச்சல் நல்லா இருக்கும்.
சிங்கா….உன் அண்ணன் இந்த வருஷம் ஊருக்கு வரலையா?
இல்லை!......
ஏன்?
கடலூர் பக்கம் கொஞ்சம் விவசாய நிலம் இருக்கு……..அதுக்கு பக்கத்துல கொஞ்சம் மனை வேற இருக்கு..அதுல குடிசை போட்டு இருக்காரு….
கடலூரில் இருந்து விழுப்புரம் எவ்வளவு தூரம்னு நினைச்சே!
ஏதோ வரணும்னு தோணலை அண்ணனுக்கு!
நான் வேறமாதிரி கேள்விப்பட்டேனே!
எப்படி?
நீ வீட்டுக்கு வந்த அண்ணனை இங்க தங்க வைக்கமுடியாதுன்னு விரட்டினியாமே!
இப்படியே ஊர்கதை அத்தனையும் பேசி என்ன ஆகப்போகுது!
இல்லைப்பா! அது தப்புன்னு தோணலையா!
திரும்பவும் சொல்றேன். இது வீட்டு விஷயம்.நீங்க தலையிடாதீங்க…
முதலில் விவசாயத்தைப் பார்ப்போம். நிறைய விஷயங்கள் எல்லைமீறிப்போகும்போது நிறைய விஷயங்கள் ஊர் நடுவில் பேசமுடியாது.
மாற்றத்தின் விதையாய் நீங்க எல்லோரும் மாறணும்.
அப்படின்னா புரியலையே!
அடுத்த விஷயங்கள் பேசுவதால்தான் கிராமங்கள் இன்னமும் மாறாமல் இருக்கிறது. முன்னேற்றவிதையை விதைத்தால் சமுதாயம் நன்றாக இருக்கும்தானே!
சின்னவயசில்இருந்து தோள்மேலே தூக்கிப்போட்டு வளர்த்த அண்ணனையே அடுத்த தேசத்தில ஒரு பிரச்னையில் இருக்கிறப்ப வெளியே போன்னு துரத்துன ஆளெல்லாம் இருக்காங்கப்பா..இவனுங்க எல்லாம் பெரிய பணக்காரன்னு சொல்லிட்டு அலையறானுங்க!
என் வீட்டுக் கதையைக் குத்திக் காட்டுறியா?
மனுஷனுக்கு பணம்,காசுன்னு வந்துட்டா பாசம் மறைஞ்சு போய்டும் இது உலக இயல்பு. விவசாயத்துக்கு பேச்சு இருந்தா பேசு..ஊர் வம்பு பேசறதா இருந்தா நடையைக் கட்டு..என்றபடி சிங்கன் நடந்தான்.