உற்சாகமூட்டும் வார்த்தைகள்
உற்சாகமூட்டும் வார்த்தைகள்


டேய் குமார்……அந்த டீச்சர் என்னை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார்டா!
அதான் இன்னைக்கு வகுப்பை கட் செய்துட்டியா குரு!..
ஆமாம்!
சியாமளா வரலாற்று ஆசிரியர் வகுப்புக்குப் போகலாம்…ஆன்லைன் வகுப்பு என்பதால் கட் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறாய். உன்னைக் குறை சொன்னால் பிடிக்கமாட்டேன் என்கிறது…நான் தமிழ்மீடியம்.
கிராமத்தில் இருந்துதான் படித்து வந்தேன். அதனால் கொஞ்சம் மெதுவாகத்தான் புரிந்துகொள்ளமுடியும். உற்நாகமூட்டும் வார்த்தைகள் என்ற தலைப்பைக்கொடுத்து பொருள்படி கதை எழுது என்று சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் யோசித்து எழுத என்னை அவர்கள் உற்சாகப்படுத்த வேண்டாமா?
இணையதள பக்கங்களில் இவர்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்டபடி வந்த வரலாற்று ஆசிரியரும், ஆங்கில ஆசிரியரும் ஏண்டா மைக்கை ஆஃப் செய்யாமல் பேசுகிறீர்கள்? உங்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக இரண்டொரு வார்த்தை கோபமாகத்தான் சொல்வோம்!
உற்சாகப்படுத்தாமலா ஆசிரியர்கள் வேலை செய்வார்கள்! இனி கேட்டமாதிரியே செய்கிறோம்… நாங்கள் வகுப்பறை கட்டெல்லாம் வேண்டாம்…..என்றார்கள்