Amirthavarshini Ravikumar

Inspirational Others

3  

Amirthavarshini Ravikumar

Inspirational Others

உழைப்பாளி

உழைப்பாளி

1 min
205


" குப்பைகளை இங்கே போடவும்" என பெயர் கொண்ட பச்சை தொட்டி. அதனருகே ஒரு கை இழந்த முதியவர் நின்று கொண்டிருந்தார். குப்பைகளை தொட்டியை தவிர பிற இடங்களில் போடுவதில் தான் நம் மக்கள் சிறந்தவர்களே. கீழே கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்து குப்பை தொட்டியில் போட்டு கொண்டு இருந்தார் அந்த முதியவர். அவ்வழியே நடந்து செல்லும் மக்கள் முதியவரின் நிலையை பார்த்துவிட்டு சென்றனர். ஒரு பிச்சைக்காரன் "அய்யா கை ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்" என்றான். அதற்கு அவர் "கை இருந்தும் நீ ஏன் அவமான படுகிறாய்" என்றார். இவரைப் பார்த்துக்கொண்டே ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தான் பிச்சைக்காரன். முதியவர் குப்பைத்தொட்டியை மாநகராட்சியில் கொடுத்து விட்டு அதற்கான ஊதியத்தை வாங்கி வந்தார். தான் பெற்ற ஊதியத்தில் தனக்குப் பிடித்த உணவை வாங்கி உண்டார். இதைக்கண்ட பிச்சைக்காரன் திகைத்தான். 

"ஐயா இவ்வளவு மோசமான வேலையை செய்ய வேண்டுமா" என்றான். அதற்கு அந்த முதியவர் "உழைத்து உண்டு சாவேன்" என்றார். உடனே பிச்சைக்காரன் "ஐயா நீங்களோ முதியவர் உங்களுக்கு பணம் தர மறுத்து விட்டால் என்ன செய்வீர்கள்?" என்றான். அதற்கு அவர் நான் "உழைப்பாளி ஏமாளி இல்லை" என கூறினார். "என் உழைப்பு என் ஊதியம் என் உரிமை" என கம்பீரக் குரலில் கூறிவிட்டு கடந்து சென்றார்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational