உலக உருண்டை
உலக உருண்டை


கனிமொழி! எனக்கு படத்துல காட்டி இருக்கிற உலக உருண்டை வேண்டும். அது ஹெல்த்மினிஸ்டர் போட்டோ எடுக்கறதுக்காக வச்சிருக்கார். நீங்க அதைப்போய் கேட்டா எப்படி?
கஜாகுண்டு எல்லாம் இப்படித்தான் வைத்து விளையாடுறான்.
எப்படி? சிவப்பு கொடி,பச்சைகொடி,மஞ்சள்கொடி குத்தியா விளையாடுறான்.
ஆமாம்! டீவில எந்த நாட்டுல கரோனா அதிகமாக இருக்குதோ அந்த இடத்தை உலக உருண்டைல தேடி சிவப்பு கொடி குத்தணும்,கம்மியா இருக்குற இடத்துக்கு பச்சை கொடி குத்தணும்.இப்படித்தான் விளையாடுறான்.
அது அவன் பேரனுடன் விளையாடுறான். வோர்ட் வொகபுலரி வளரணும்னு செய்யறான். உங்களுக்கெதுக்கு அதெல்லாம்!
எனக்கும் பொழுது போக வேண்டாமா!
தோட்டத்துல இருக்கிற கீரை விதையெல்லாம் எடுத்து விதைப்பந்து செய்து வைங்க! கத்தரி,வெண்டை விதை தர்றேன்.அதையும் சேர்த்து வைங்க! ஒரு டிரம் தர்றேன். காய்கறி கழிவு எல்லாம் அதிலே போட்டு பக்கத்துவீட்டு மாமிகிட்டே கொஞ்சம் எரு வாங்கிப் போடுங்க என சொல்லி விட்டு குப்புசாமியைத் தேடினார். குப்புசாமி சுக்குகாபியைக் குடித்தபடி கட்டிலில் தூங்க ஆரம்பித்தார்.