Chriseeda Shinny

Horror Tragedy Thriller

4.5  

Chriseeda Shinny

Horror Tragedy Thriller

தவறாக உச்சரிக்கபட்ட மந்திரம்

தவறாக உச்சரிக்கபட்ட மந்திரம்

5 mins
256


       ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடம் இருந்தது. அது மற்ற பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. அதிகப்படியான தாவரங்கள் நுழைவுவாயிலின் முற்பகுதியில் வளர்ந்திருந்தன. அந்த இடத்தைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் அமைதி நிலைத்திருந்தது. இது சாத்தியமான ஆபத்தை எச்சரிக்கிறது மற்றும் நம்மை போர்க்குணத்துடன் தொடரச் செய்கிறது. ஏதேனும் மோசமான நிகழ்வு நடந்தால் கூட , தகவல்தொடர்புகள் சாத்தியமாக இருந்தாலும் உதவிக்கு நீண்ட நேரம் எடுக்கும்.


       வளர்ந்த தாவரங்களின் மையத்தில் ஒரு அழகான மாளிகை இருந்தது. மாளிகை அழகாக இருந்தாலும் அது பேய் பிடித்த வீடாக காட்சியளித்தது. இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறதா ? இல்லையா ? என்பதை ஒருவராலும் அடையாளம் காண முடியாததால் அது அவ்வாறு காட்சியளித்தது. இந்த நிச்சயமற்ற தன்மை அனைவரையும் உறைந்துபோய், அமைதியடையச் செய்தது. இந்த மாளிகை போதுமான அளவு பெரியது, இருண்டது, ரகசிய அறைகள், படிக்கட்டுகளின் கீழ் மறைவுகள், அறைகள், ரகசிய அடித்தளம் போன்ற வியக்கத்தக்க கட்டடக்கலை அம்சங்கள் நிறைந்தது. பூச்சிகள், சிலந்தி வலைகள், எலிகள், வெளவால்கள் மற்றும் சில தவழும் கணுக்காலிகள் இல்லாமல் பேய் வீட்டின் அம்சங்கள் முழுமையடையுமா என்ன?


      குழப்பமான தளவமைப்பு மனநலிவு உணர்வுகளை ஏற்படுத்தியது. அங்கே இருந்த இருளோ எல்லோரும் தொலைந்து போகச் செய்தது மற்றும் பீதியை உருவாக்கியது. தப்பிப் போக நனைத்தாலும் வேலிகள், பதர் வெளிகள் அல்லது இடிந்து விழுந்த படிக்கட்டுகளால் மேலும் எதிர்க்கப்படலாம். ஒருவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றை உணர முடியும்.


      அந்த மாளிகையில் , கறுப்பு ஆடையும் , கூர்மையான தொப்பியும் அணிந்து , பல மந்திர சக்திகளைக் கொண்ட ஒரு பெண்மணி வசித்து வந்தாள். ஆம்! அநேகமாக அவள் ஒரு சூனியக்காரியாக இருக்க வேண்டும். அடிப்படையில் எல்லா சூனியக்காரிகளும் மோசமானவர்கள் மற்றும் தீயவர்கள் ஆக இருப்பர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த சூனியக்காரி மோசமானவள் அல்ல, அவள் நேசமானவள், கனிவானவள், அன்பு நிறைந்தவள் , அவள் குழந்தைகளை நேசித்தாள். அவளுக்கும் ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்குமே என்று அவள் விரும்பினாள். அவளுடைய தோற்றம் வித்தியாசமாக இருப்பதால் எல்லோரும் அவளை புறக்கணித்தனர் . அதனால்தான் அவள் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மாளிகையில் வசித்து வந்தாள்.


        இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அருகில், ஒரு பரபரப்பான கிராமம் இருந்தது. மக்கள் சாலையோரம் நடந்து கொண்டிருப்பர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக வேலை செய்வதில் மும்முரமாக இருந்தனர். முதியவர்கள் பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். ஆலமரத்தின் கிளைகளில் குழந்தைகள் ஆடிக்கொண்டிருந்தார்கள். அங்குள்ள மக்களுக்கு சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகள் மீது வலுவான நம்பிக்கை இருந்தது.


      அங்கே, ஒரு ஏழைக் குடும்பத்தில் ஒரு தாய், தந்தை 3 குழந்தைகளுடன் வாழ்ந்தனர். ஒரு மந்திரவாதி அவர்களிடம் அவர்களுடைய முதல் பெண் குழந்தையைக் கொன்றால், அவர்கள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்று கூறினார். எனவே , அவர்கள் சிறுமியைக் கொல்லத் துணிந்தார்கள். அவர்கள் தியாகத்திற்கு தயாராகி கொண்டிருந்தனர். ஆனால் சிறுமியோ பரிதாபமாக இருந்தாள் . அவளுடைய சொந்த பெற்றோர்களே தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் இருந்தாள். அவள் அழுது கொண்டிருந்தாள். அவர்கள் விறகுகளில் தீ வைத்தனர் மற்றும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள், சிறுமியை நெருப்பிற்குள் தள்ளவிருந்தனர்.


      அதே நேரத்தில், சூனியக்காரி தனது பிழைப்புக்கு தேவையான சில பொருட்களை சேகரிக்க கிராமத்திற்குள் நுழைந்துவிட்டாள். மக்கள் சூனியக்காரியைப் பார்த்தவுடன் அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள். சூனியக்காரியால் கிராமத்திற்கு ஏதேனும் அபாயம் நடக்கப்போகிறது என்று அவர்கள் நினைத்தார்கள். சூனியக்காரி அழுதுகொண்டிருந்த சிறுமியைக் கண்டாள் . பின்பு, சிறுமியை நெருப்பிற்குள் தள்ளுவதைப் பார்த்து அவர்கள் இருந்த இடத்திற்கு ஓடினாள்.


     சூனியக்காரி மந்திரத்தை உச்சரித்தாள் உடனே , இருள் அந்த இடத்தை நிரப்பியது. சூனியக்காரி ஏதோ பேரழிவை ஏற்படுத்தியதாக கிராம மக்கள் நினைத்தார்கள். அவள் கிராமத்தை சபித்ததாக அவர்கள் நினைத்தார்கள். எனவே எல்லோரும் தங்கள் வீட்டிற்குச் சென்று கதவுகளை மூடினர். திடீரென்று பலத்த மழை பெய்தது, அது நெருப்பை‌ அணைத்தது. சிறுமியின் பெற்றோரும் மந்திரவாதியும் குழந்தையை தனியாக விட்டுவிட்டு ஓடிவிட்டனர், ஏனென்றால் சூனியக்காரி தங்கள் குழந்தையை கொன்றுவிடுவாள் மேலும் , அவர்கள் பணக்காரர்களாக மாறப் போகிறார்கள் என்று நினைத்தார்கள்.


     சிறுமியைத் தவிர அனைவரும் ஓடினார்கள். அவள் சூனியக்காரியை பரிதாபமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சூனியக்காரி அந்த சிறுமியிடம் ஏன் அவளைக் கொல்ல முயற்சிக்கிறீர்கள் என்று கேட்டாள் . அவள் கடந்த காலத்தை சொன்னாள். பின்னர் சூனியக்காரி கவலைப்பட வேண்டாம் என்றும் அவளைப் பின்தொடர வேண்டும் என்றும் சொன்னாள் .இப்போது, சூனியக்காரி தனது ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை கிடைத்தது என்று.


     சிறுமி அவளைப் பின்தொடர்ந்தாள். ஆனால் பயத்துடன். வளர்ந்த தாவரங்கள் அவளை விட உயரமாக இருந்தன. அவள் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு சூனியக்கரியைப் பின்தொடர்ந்தாள். அவர்கள் மாளிகையை அடைந்தவுடனேயே முன் கதவு ஒரு சத்தத்துடன் மூடப்பட்டது. அந்த சிறுமியின் இதயத் துடிப்பைக் கூட கேட்க முடிந்தது. பின்னர், சிறுமி மாயை பற்றி ஆர்வமாக இருந்தாள். சூரியனை மீண்டும் எவ்வாறு கொண்டு வருவது என்று சூனியக்காரரிடம் கேட்டாள். அவளது மாய சக்திகள் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் பல மாதங்கள் ஆகும் என்று சூனியக்காரி அவளிடம் சொன்னாள். அந்த சிறுமி மாய சக்தியைப் பற்றி கேட்கிறாள். மந்திரவாதி புத்தகத்திலிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று சூனியக்காரி அவளுக்கு பதிலளித்தாள்.


      அடுத்த நாள், சூனியக்காரி அந்த சிறுமியிடம் வீட்டை சுத்தமாக வைத்திருக்கச் சொன்னாள் .பின்பு , அவள் மாய சக்திகளுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவருவதற்காக அருகிலுள்ள காட்டுக்குச் சென்றாள். சிறுமி மிகவும் ஆர்வமாக இருந்ததாள் , அவள் மிக வேகமாக மாளிகையை சுத்தம் செய்து மாய புத்தகத்தைப் படித்தாள். சூரியனை மீண்டும் கொண்டுவருவதற்காக அவள் மாய மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தாள். அவள் பொருட்களைக் கலக்கிக் கொண்டிருந்தாள், துரதிர்ஷ்டவசமாக அவளுக்கு இதயம் இல்லை, ஆம், சிலந்தியின் இதயம்...... சிலந்தியிலிருந்து இதயத்தை எவ்வாறு பிரிப்பது என்று அவளுக்குத் தெரியாது, அதனால் , முழு சிலந்தியையும் வைக்க முடிவு செய்தாள். ஆனால் இப்போது, அடடா! அவள் எங்கே படித்தாள் என்பதை மறந்துவிட்டாள்... ஏழை சிறுமி!.... சூனியக்காரி வர வேண்டிய நேரம் வந்துவிட்டது & அவள் மந்திரத்தை மிக வேகமாக படித்துக்கொண்டிருந்தாள், பின்னர் அவள் வார்த்தைகளை தவறாக உச்சரித்துவிட்டாள், எப்படியோ அவள் முடித்துவிட்டாள். திடீரென்று சூரிய ஒளியைப் பார்க்க முடிந்தது, அவளுடைய மந்திரம் வேலை செய்ததால் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்.


     சூனியக்காரி வீட்டிற்குள் நுழைந்தாள், அவளுடைய மந்திரங்களுக்கு என்ன நடந்தது என்று அவள் யோசித்துக்கொண்டிருந்தாள். சூரியன் எப்படி தோன்றியது என்று வியந்தாள். அவள் தனது மந்திர சக்திகளை இழக்கிறாள் என்று நினைத்தாள் . நீல நிலவு வரும் நாளில் தனது சக்தியை அதிகரிக்க முடிவு செய்தாள்.

     அடுத்த நாளில் சூரியனின் தீவிரம் முன்பை விட மிக அதிகமாக இருந்தது. வானிலை ஆய்வாளர் இதை "அக்கினி கோடை" என்று அறிவித்தார். ஆனால் சூனியக்காரியோ இன்னும் கோடை, ஆரம்பத்தில் எப்படி தோன்றியது என்று யோசித்துக்கொண்டிருந்தாள். ஏதோ ஆபத்து வர இருப்பதாக அவள் கணித்தாள்.


     கிராமத்தில் உள்ளவர்களால் சாலையோரம் நடக்க முடியவில்லை. அவர்களில் பெரும்பாலோர் மயக்கம் அடைந்தனர். எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் தாகம் ஏற்பட்டது. குழந்தைகள் விளையாடுவதில்லை. சூரியன் அதிகாலையில் உயர்ந்தது , மிகவும் தாமதமாக அமைந்தது. நாட்கள் மிக நீளமாகவும், இரவுகள் மிகக் குறுகியதாகவும் இருந்தன. அக்கினி கோடை மூலம் சூனியக்காரி கிராமத்தை சபித்ததாக மக்கள் நினைத்தார்கள். நீர் நிகைகள் நாளுக்கு நாள் வற்றி கொண்டிருந்தன. மரங்களின் இலைகள் தண்ணீர் இல்லாமல் உதிர்ந்துக்கொண்டிருந்தது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டிருந்தது. மக்களால் வெப்பத்தைத் தக்கவைக்க முடியவில்லை. எனவே, அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அநேகமாக, எறும்புகள் எல்லா இடங்களிலும் சுற்றித்திரிந்து , உணவை அனுபவிக்கவும் செய்கின்றன.


       எறும்புகள் சூனியக்காரியின் மாளிகையை கூட விடவில்லை. எறும்புகள் எல்லா இடங்களையும் ஆட்சி செய்தன, மேலும் அவை பலவகையான உணவுகளை சேகரித்து மகிழ்ந்தன. எனவே, சூனியக்கரி அந்த எறும்புகளுக்கு எதிராக மந்திரத்தை உச்சரித்தாள். அவை எலிகளாக மாறியது ............. இந்த நேரத்தில் அவள் அதை அர்த்தப்படுத்தவில்லை. இப்போது எல்லாம் தவறாக நடக்க தொடங்கியது . சூனியக்காரிக்கு பித்து பிடிப்பது போல இருந்தது. அவளுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஒவ்வொரு மாய சக்தியும் இந்த முறை தவறாக நடக்கிறது. மீண்டும் அவள் எலிகள் மீது மந்திரங்களை முழக்கமிட்டாள், இப்போது அவை அன்ன பறவைகள் ஆயின. இவ்வளவு அன்ன பறவைகளா......... ஆனால் எலிகளுக்கு இவை மேல் என்றிருந்தது . கிராமத்தில் அன்ன பறவைகளின் எண்ணிக்கை மக்கள் எண்ணிக்கையைவிட அதிகமாய் இருந்தன.


     இப்போது, ஏழை சிறுமி தனது தவறை உணர்ந்து சூனியக்காரரிடம் சரணடைந்தாள். இப்போது அவர்கள் எங்கு தவறு செய்தார்கள் என்று சூனியக்காரி புரிந்து கொண்டாள். சிறுமியை கிராமத்திற்குச் சென்று மக்களை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கச் சொல்லச் சொன்னாள். சிறுமி உயிருடன் இருப்பதைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், எப்படியோ அவர்கள் வீட்டிற்குள் இருக்க ஒப்புக்கொண்டனர்.


     அது ஒரு நீல நிலவு இரவு, இப்போது சூனியக்காரி மலை உச்சியில் சென்று தனது சக்திகளைத் திரும்பப் பெற மாய மந்திரங்களை முழக்கமிட்டாள். இப்போது அவள் மீண்டும் ஆற்றலுக்கு வந்தாள். இப்போது, அன்ன பறவைகள் மறைந்துவிட்டன . பூக்கள் வானத்திலிருந்து விழுந்தன. நீர்நிலைகள் உயர்ந்தன. மரங்கள் மீண்டும் பச்சை நிறத்தில் வளர்ந்தன. ஆம்! இயற்கையை கட்டுப்படுத்த அவளுக்கு கூடுதல் சக்திகள் கிடைத்தன. அடுத்து என்ன?


     கோடை மீண்டும் குளிர்ச்சியாக இருந்தது. அனைவரும் கோடைகாலத்தை நன்றாக அனுபவித்தனர். அவர்களுக்கு உதவிய சூனியக்காரிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோடைகாலத்தை ரசிக்க இங்கு வந்தனர். முதியவர்கள் அதே ஆல மரத்தின் கீழ் கதைகளைத் தொடர்ந்து பேசினார். குழந்தைகள் சுற்றி விளையாட ஆரம்பித்தனர். சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகளை நம்பிய கிராமவாசிகள் இப்போது மாய மந்திரங்களை நம்பினர்.

மாயம் தொடர்கிறது ....................!


Rate this content
Log in

Similar tamil story from Horror