டயப்பர்
டயப்பர்


என்னங்க! எந்திரிங்க..
என்ன?
இன்னைக்கு பசங்களுக்கு எக்சாம் இருக்கு..டிரெயின் போய்டும். வண்டியில் கொண்டுஸ்டேஷன்வரை விட முடியுமா?
குழந்தையை யார் பள்ளிக்கு விடுவார்கள்? காலையிலேயே பாய்ல உச்சா போய் வச்சிருக்கு
எல்லாம் நீங்க டயப்பர் போட்டிருக்கணும்.
ஆமாம்மா! தூங்கும்போதுகூட டயப்பரைக் கட்டி விட்டா அது உடம்பு என்னத்துக்கு ஆகும்.
ஆயாம்மா நேற்றே திட்டினாங்க..டயப்பர் போட்டு அதுக்கு தொடையெல்லாம் சிவநதுபோயிருக்கு...
அதுக்கு டாக்டர்கிட்டே மருந்து வாங்கி போட்டிருக்கணும்.
ஏன் உன் பள்ளியில்தான் இப்ப பாப்பா பள்ளி வந்துடுச்சில்ல...
கூட கூட்டிட்டுபோய் அதே பள்ளியில் சேர்க்கலாம்ல....
ஏங்க! புரிஞ்சுதான் பேசறீங்களா! நம்ம பொண்ணு படிக்கிற கிளாஸ்ருமைப் பார்த்திருக்கீங்களா! வெளியில் விளையாடப்போட்டிருக்கிற பொருள் எல்லாம் பார்த்திருக்கீங்களா? அதுலபோய் சேர்க்கசொல்றீங்க? நம்ம ஒண்ணுவிட்ட சித்தப்பா பசங்க எல்லாம் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்குதுங்க..
நான் ஏதோ அரசு பள்ளியில் சம்பளம் வாங்கி இதுக்கு கட்டறேன். உங்க விவசாய வேலைங்கறதுனால நீங்க பிள்ளையை கொண்டு வந்து விட்டு பார்த்துக்கறீங்க.....
அப்ப உன் நாட்டுக்கு உன்னுடைய பங்க என்ன?
ஏன்?
அந்த பொம்மை உன் சம்பளப் பணத்துல வாங்கிப் போட முடியாதா?
ஏன் வாங்கிப்போடணும்? எத்தனையோ வங்கிகள் அதைச் செய்யலாமே! இப்படியே எல்லாரும் கையைக் கழுவி ஊத்திக்கிட்டே இருந்தா போட்டோவுல மட்டும்தான் காமராசர் இருப்பார் என்றபடி பிள்ளை படுத்த விரிப்பினை அலச கிணற்றடிக்குச் சென்றான்.