தடை செய்யா
தடை செய்யா


இரவு பத்துமணிவரை கோவிந்து வீட்டிற்கு வராமல் இருக்கவும் வீணா பயப்பட ஆரம்பித்தாள். காய் வாங்கிட்டுவர்றேன்னு போய்ட்டு இவ்வளவு நேரம் என்ன செய்கிறார் என மனதிற்குள் திட்டிக்கொண்டே போட்டு வைத்த பூரிகளை ஆறிப் போகாமல் இருக்க ஹாட்பாக்சில் பதப்படுத்தி வைத்தாள்.
முந்திரி போட்ட குருமான்னா பிடிக்கும்னு சூடா வச்சிருந்தாலே இதேமாதிரிதான் செய்யறது..அங்கே யார்கிட்டே சோஷியல்சர்வீஸ் வேலை பார்த்திட்டிருக்காரோ! என நினைத்துக்கொண்டே படுக்கையைத் தட்டிப்போட்டு தூங்கத் தொடங்கினாள்.
கதவு இலேசாகத் தள்ளும் சத்தம் கேட்டு விழித்தாள். பை நிறைய காய்கறிகளுடன், பழங்களும் வாங்கி வந்திருந்த கோவிந்தை ஏறிட்டாள்.
இது என்ன! இவ்வளவு காய்கறி?
கடை மூடற நேரமாயிடுச்சு..அதனால் வீட்டிற்கு காய் வாங்கி வந்தேன். அத்தோட நிறைய காய், பழங்கள் எல்லாம் வேஸ்டா
கீழே கொட்ட போனாங்க! அதான் பக்கத்துல இருக்கிற முதியோர் இல்லத்திற்கு ஆகும்னு வாங்கிட்டு வந்தேன். டெய்லி இதே டயத்திற்கு வாங்க சார்னு பத்து கடைக்காரங்க சொல்லி இருக்காங்க!
நான் எவ்வளவு பயந்து போய் இங்கே உட்கார்ந்திருந்தேன். நீங்க என்னடான்னா! என கோபப்பட்டாள்.
இதான்! உன்னிடம் இருக்கும் கெட்டபழக்கம்!
நல்ல காரியம் செய்யும்போது தடை செய்யக்கூடாதுன்னு தெரியாதா!
துணிப்பை நீ வேஸ்டா வைத்திருந்த புடவையில் தைத்து வச்சிருந்தேன். அதை எடு! அதில் போட்டு கொடுத்துவிடலாம்!
நம்மளால பணம்கொடுத்து வாங்கித் தரமுடியலைன்னாலும் இந்த காய்கறிகளைக் கொண்டுபோய் கொடுக்கிற அளவு ஆண்டவன் நமக்கு பலத்தைக் கொடுத்திருக்கான் இல்லையா!
அதைக்கேட்ட விணா மௌனமாகி கண்ணில் துளிர்த்த ஆனந்த கண்ணீரை மறைத்தபடி இடத்தை விட்டு அகன்றாள்.