டீச்சர்
டீச்சர்


கணேஷ்! கரோனா ஊரடங்கு உத்தரவை நீக்கினாலும் ஒரு வருடத்திற்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.இல்லையா!
ஆமாம்! டீச்சர்.
அப்ப பாடம் படிக்க என்ன வழி?
உங்கள் வீட்டில் டிவி இருக்கா?
இருக்கு...ஆனா அதை பாட்டி தர மாட்டாங்க..சீரியல் பார்ப்பார்கள்.
ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் நீ டேப்லட் பார்ப்பாய்?
நீங்கள் சொல்லியபடி அரைமணி நேரம்தான் பார்ப்பேன்.
வீடியோக்களை எத்தனை மணி நேரம் பார்வையிடுவாய்?
மௌனமாக இருந்தான் வினோத்.
ஆறாம் வகுப்பு படிக்கிற எனக்கு வீடியோ பார்க்க அனுமதி கிடையாது. அதில் நிறைய வயதுக்கு மீறியதெல்லாம் வரும்னு அப்பா திட்டுவார்.
ரொம்ப போரடிக்குது டீச்சர்! இந்த மொபைல் மட்டும் இப்ப இல்லையென்றால் ரொம்ப கஷ்டம். வீட்டில் உள்ள பழைய பொருட்கள் எல்லாம் பயன்படுத்தி பிராஜெக்ட் செய்தாயிற்
று...அப்பா,அம்மாவுடன் விளையாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்க்கைக்கு அறிவு தேவை இல்லையா டீச்சர்?
இப்ப கரோனா வந்த நேரத்தில் சந்தோஷமாக இருப்பதும், போதுமான சத்து உணவுகளையும் உண்பது போதும். அடிப்படை அறிவு ஆங்கிலம்,தாய்மொழி,கணிதம் இதர பாடங்களில் இருந்தால் போதும்.
நான் எனது மொபைலில் ஆடியோவாக பாடம் நடத்தி அனுப்புகிறேன். உன்னிடம் உள்ள புத்தகத்தை வைத்து படி!
இப்படியே சென்றால் என்னாவது டீச்சர்?
வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும் என்று நீ படித்ததில்லையா? உலகில் அறிவியலை ஆக்க வழிகளுக்கே பயன்படுத்தவேண்டும். மீறினால் இப்படித்தான் நடக்கும்.
அப்ப கெட்டவர்களை மட்டும்தானே கடவுள் எமனிடம் அழைக்கவேண்டும்..நல்லவர்களையும் ஏன் அழைக்கவேண்டும் டீச்சர்!
பதில்பேசாது மௌனமாக கண்ணீருடன் டீச்சர் மொபைலை ஆஃப் செய்தார்.