தந்திர வலை
தந்திர வலை


காலையில் சிகரெட் குடிப்பதை விட மாட்டியா?
விடமுடியலைடா முகமது!………..
ஒருநாள் புற்றுநோய் வந்துதான் சாகப்போறே! நீ ஊதறது இல்லாமல் எதிரில் இருப்பவர்களுக்கும் இந்த நோயைத் தருகிறாய் என்பது தெரிந்தும் இப்படி செய்ய உனக்கு அவமானமாக இல்லையா?
வாழ்க்கையில் இந்தமாதிரி வாழ கொடுத்து வச்சிருக்கணும்! எனக்கு என்ன குடும்பமா!
அதுக்காக உன்னை நீயே சாகடிச்சுக்கணுமா?
அப்படியே சாவு விரைந்து வந்து தழுவாதா என்றுதான் இப்படி செய்கிறேன்.
எல்லா தொலைக்காட்சிக்கும் நீதான் விளம்பரம் தரும் துறையில் மாடலிங்காக நடிக்கிறாய். இதில் சிகரெட்பிடித்தால் உடல் நலத்திற்கு கெடுதல் என்ற போஸ்வேறு தருகிறாய் ரகு.
அது பணத்திற்காக ….இது சுகத்திற்காக…………
ஊடகங்கள் மக்கள் மனதிற்கு ஆசையைத்தூண்டி விடவைப்பதற்காகத்தான் இருக்கிறது. இதனால்தான் சிகரெட் விளம்பரம் வருவது கிடையாது.
அதுக்காக சினிமாவில் வரவில்லையா? ஊடகமே ஒரு போலி மாயைடா! எல்லாமே மக்களை ஏமாற்றும் மாய தந்திர வலை!
நீ திருந்த மாட்டாயா ரகு?
மக்களைத் திருந்தச் சொல்! பொது இடங்களில் சிகரெட் பிடிக்காதிருக்கச் சொல்….நான் திருந்துகிறேன்….
இவனைத் திருத்த முடியாது என வெறுத்துப்போய் முகமது வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.