தண்ணீர்
தண்ணீர்


பசு தண்ணீர் தேடி தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது. இன்னமும் அதன் கண்ணில் தண்ணீர் இருக்கும் இடம் தென்படாததால் சாலையின் ஓரமாக மலை இருக்கும் பக்கத்தில் ஒதுங்கியது. அப்போது ஒரு இடத்தில் சலசலவென சத்தம் கேட்டது. அதற்கு ஒரே சந்தோஷமாகப் போய் விட்டது.
கடவுள் நமக்கு கருணை புரிந்து பூமி பிளந்து பூமிமாதா தண்ணீர் தருகிறாள் என நினைத்து தண்ணீரின் அருகில் வேகமாகச் சென்றது. தண்ணீர் வேகமாக பசுவை உள்ளிழுத்துக் கொண்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பட்ட மரம் வேகமாக பூமியிடம் சென்று ஏன் அந்த பசுவை உள்ளிழுத்தாய்? எனக் கேட்டது. உனக்கு இந்த பசு தண்ணீர் ஊற்றி இருந்தால் நான் ஏன் பிளந்து வரப் போகிறேன் என்றது.
மனிதர்களுக்கே அறிவில்லை! பார்! என்னைச் சுற்றி எத்தனை அனல் மின் நிலையங்கள்,அணு உலைகள். மின்சாரம் இல்லாமல் வாழலாம்,தண்ணீரில்லாமல் வாழ முடியுமா? பசுவை விட்டு விடு என்று கேட்டது.
உனது ஆயுளே இன்னமும் சிறிதுகாலம்தான்! உன்னை விறகுக்காக சுயநலத்திற்காக ஒடித்துச் சென்றுவிடுவர்..நீ பசுவிற்காக பேசுகிறாயே! என்று சொல்லியபடி காணாமல் போனது.