தனி
தனி


தனிமை
ஒரு நாள் பப்பாளி மரம் ஒன்று காற்றில் வேகமாக அசைந்தாடியது.
அதில் பழுத்திருந்த பப்பாளிகள் அம்மா!…காற்று என்னமா அடிக்குது! குளிர் வேற உதறுது!
பயப்படாதே..என் பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன். அப்படி நீங்கள் கீழே விழுந்தாலும் எனதருகில்தானே முளைப்பீர்கள்.
எங்களைப் பறித்து வேறு இடத்திற்குக் கொண்டுசென்றுவிட்டால் நீங்கள் தனிமரமாகிவிடுவீர்கள்.
நீங்க என்னை விட்டுட்டு போயிட்டீங்கன்னா மனசுல நிம்மதி இல்லாமல் இறந்துடுவேன்னு நினைக்கிறேன்.
அதற்கு என்ன செய்வது?
காய்க்கின்ற மரத்திற்குத்தான் மதிப்பு. எனது ஒவ்வொரு பகுதியும் மருந்துதான். பறவைகள்,மனிதர்கள் என எடுத்துச் செல்கின்றனர். எனதருகில் நீளமாகக் கிளைவிட்டு பூ பூத்தது. அது அருகில் இருந்திருந்தால் எனக்குத் துணை.ஆனால், அது காய் காய்க்காதுன்னு வெட்டிட்டாங்க!
முட்டாள்சனங்க..பணம் இருந்தால்தான் மதிக்கும். அதான் எனக்கும்.காய்க்கிறேன்னு விட்டு வச்சிருக்காங்க!!