saravanan Periannan

Abstract Drama

4.7  

saravanan Periannan

Abstract Drama

தீவினை அகற்று

தீவினை அகற்று

2 mins
225


சார்மதி‌‌ தூங்கி கொண்டிருக்கிறாள் அப்பொழுது அவளது பெற்றோர் அவளை பார்த்து கொண்டு நிற்கின்றனர்.

அவள் கண் முழித்துவுடன் அவளது அம்மா அவள் தலையை கோத‌,அவளது தந்தை பிரஷ் எடுத்து வருகிறார்.

தீடீரென பஸ் மேடில் ஏறி இறங்க,அவள் முழிக்கிறாள்.

அவளது பாட்டி அவள் முகத்தை பார்த்து கண்ணீர் வடிக்கிறாள்.

இதே நேரம்,ரோட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒரு‌ பெரியவர் மயங்கி கீழே விழுகிறார்‌.

இன்னொரு‌ முதியவர் அந்த வழியே‌ சென்று கொண்டிருக்கும் ஒரு‌‌ சிலரை அழைத்து அந்த நபரை தூக்க சொல்கிறார்.

அவர்கள் ஏன்‌ சார் வம்பு,எதாவது ஆச்சுனா யார் போலீஸ்,கேஸ் னு அழையுறது.

அந்த முதியவர்‌ பின்பு அங்கே நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்களை அழைத்து உதவி கேட்கிறார்.

அவர்கள் இவரை தூக்கி மரத்தின் கீழே உட்கார வைத்து விட்டு பிரிண்டிங் பிரஸ் செல்கின்றனர்.

அந்த இன்னொரு முதியவரிடம் நன்றி சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார்.

மயங்கி விழுந்தவரின் பெயர் வேல்,அவரது மனம் முழுக்க அவரது மகன் பற்றிய சோகம் மட்டுமே உள்ளது.

அவரது ‌மகன் ஒரு குடிகாரன்.

அவன் குடிப்பதை கண்டு கண்டு வேல் மனதளவில் வேதனை அடைந்தார்.

அந்த மன வேதனை அவரை உடலளவில் பாதிக்க தொடங்கியது.

கல்லூரி மாணவர்கள் அவர்கள் பகுதியில் இருந்த மதுக்கடைகளை மூட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் யாரும் அதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை சிலரை தவிர.

பஸ்ஸில் இருந்து பாட்டி ஞானம்பாளுடன் சார்மதி இறங்குகிறாள்.

அவளது மாமா வீட்டில் தங்குகிறாள் சார்மதி.

அவளை தொடர்ந்து படிக்க வைக்கலாம் என அவளது மாமா சொல்ல 

வீட்டுல தங்க வைச்சு சோறு போடுவதை பெரிசு,இதுல இது வேறயா.

இதை கேட்ட ஞானாம்பாள் எழுந்து வந்து சொந்தம் எதுக்கு னா கஷ்டத்தில் ஆறுதல் சொல்ல தான்.

இப்படி காசு விஷயத்துல கணக்கு பண்றத்துக்கு இல்ல.

ஞானாம்பாள் சார்மதியை அழைத்து கொண்டு சார்மதியின் தந்தை வீட்டுக்கு செல்கிறாள்.

அங்கு கலந்து பேசி அவளை தத்து கொடுக்க முடிவு செய்கின்றனர்.

சார்மதி அவள் பாட்டியிடம் 

ஏன் ‌பாட்டி என்னை வேறு யாருகிட்ட‌யோ கொடுக்குறீங்க.

நீங்க பாத்துக்க மாட்டிங்களா.

பாட்டி அவளை மடியில் உட்கார‌ வைத்து 

செல்லம்,பாட்டிகிட்ட அவளோ பணம் இல்லடா.

உனக்கு தேவையான எல்லாத்தையும் என்னால செய்ய முடியாது.

பாட்டிய மன்னிச்சிடுமா 

என பாட்டி அழுகிறாள்.

சார்மதி பாட்டியின் கண்ணீரை தொடைத்து விடுகிறாள்.

வேலின் மகன் தனது நண்பர்களுடன் குடித்து விட்டு வண்டியில் செல்கிறான்.

அப்பொழுது கல்லூரி மாணவன் ஒருவனின் வண்டியை இடிக்கிறான்.

அந்த மாணவன் என்ன என கேட்க வர அவனது மண்டையை உடைக்கிறான் வேலின் ‌மகன்.

அடுத்த நாள் அந்த மது கடையின் முன் பெரும் போராட்டம் மாணவர்களால் நடத்தப்படுகிறது.

அப்போழுது அந்த கடையில் வேலை செய்பவர் 

குடிக்கிறவன் கவலைப்படல 

அவன் குடிக்கிறான்,நாங்க விக்கிறோம்.

நாங்க வித்தாக அவன் எதுக்கு குடிக்கிறான் 

அவன்கிட்ட போய் குடிக்க வேண்டாம் னு சொல்லுங்க

என கூறுகிறான்.

அதற்கு ஒரு கல்லூரி மாணவன் எழுந்து 

அவன் தப்பு பண்ணா நாங்களும் தப்பு பண்ணுவோம் னு ஒவ்வொருத்தரும் கிளம்புனா 

யாரும் நிம்மதியா இருக்க முடியாது.

சரியா சார் 

என சொல்லி முடிக்க அந்த கூட்டத்தில் ஆரவாரம் ‌எழுந்தது.

சார்மதியின் தற்பொழுது படிக்கும் பள்ளியில் ஆண்டு விழா நடக்கிறது.

அவள் அதில் ஒரு தலைப்பை பற்றி பேச வேண்டும் 

அவள் வந்தவுடன்‌ அவளின் பின்னால் உள்ள ஸ்கிரீனில் சில பாட்டில்களில் ஒவியம் வரைய‌ பட்டிருந்தது.

அவள் தனது உரையை தொடங்கினாள்.

என்னோட

பிரசவத்திலேயே அம்மா என்ன விட்டு போய்டாங்க 

அப்பா மட்டும் இருந்தார் 

அவரும் மது குடிக்க ஆரம்பிச்சார் 

இந்த பாட்டில் ‌எல்லாம் அவர் குடிச்சுட்டு போட்டதுதான் .

அவர் குடிச்சு உடம்ப கெடுத்துக் கிட்டு என்ன விட்டுட்டு போய்டார். 

இதை நான் உடைக்கலாம் னு போனேன்.

ஆனா இது எங்க அப்பா உலகத்துக்கு விட்டுட்டு போன பாடம் 

குடி குடிக்கிறவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தையும் சேர்த்து கெடுக்கும்.

பாட்டில்ல நான் வரைஞ்சுருக்கிறது எங்க அப்பா முகத்தை

அதுக்கு கீழ அவர்‌ சொன்ன கடைசி வார்த்தைகள் 

என் மகளுடன் வாழ ஆசை ஆனால் இந்த குடி என் உயிரை‌ குடித்து விட்டது.

இதை சொல்லி முடித்து உணர்ச்சி பொங்க அழுகிறாள்.

யாரும் குடிக்காதீங்க 

எனா உங்களை சில உறவுகள் நேசித்து கொண்டிருக்கிறது.

நன்றி வணக்கம் என‌ சொல்ல கரகோஷம் வருகிறது அரங்கிலிருந்து.

வேலின் மகன் போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கி கொண்டிருக்கிறான்.

அங்கு வரும் வேல் தனது மகனை கை காட்டி 

சார் என் பையன் என‌ சொல்ல 

யோவ் என்னாயா பிள்ளையை வளர்த்து வைச்சுருக்க 

குடிகாரன்,பொறுக்கி இவன் மேல கேஸ் போட்டாச்சு,எதுவா இருந்தாலும் கோர்ட்ல போய்‌ பாத்துக்கோங்க.

இரண்டு மாதத்திற்கு பின் ஜெயிலில் இருந்து வரும்‌ வேலின் மகன் வேலை கட்டி பிடித்து 

மன்னிச்சிருங்க அப்பா என‌ வேலின் காலில் விழுகிறான்.

பின்பு

 மறுவாழ்வு மையத்தில் 

சேர்ந்து குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வருகிறான் வேல்.

மாணவர்களுடன் மக்களும் இணைத்து போராட அந்த மதுக்கடை மூடப்பட்டது.

தீமை பயக்கும் எந்த பொழுதுபோக்கும்,விஷயமும் ஆபத்துதான். 



Rate this content
Log in

Similar tamil story from Abstract