STORYMIRROR

Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

தாய் மண்ணே! வணக்கம் (தொடர்கதை)

தாய் மண்ணே! வணக்கம் (தொடர்கதை)

2 mins
369

"அட, ஆச்சரியமா இருக்கே! உங்கள் கண்ணன் அமெரிக்காவிலிருந்து தமிழில் கடிதம் எழுதுகிறானா ?" மீனாவின் கண்கள் வியப்பால் படபடவென சிமிட்டின.

"அதுவும் ஒவ்வொரு வாரமும்" எனக்குள் உண்டான பெருமித அலைகளை கண்ட்ரோல் செய்ய முடியாமல் அது நிரம்பி வழியத் தொடங்கியது. "ஒவ்வொரு வாரமுமா!" திருமதி மீனாவின் கண்கள் முழுவதும் முழித்துப் பார்த்து தனக்குள் பற்றிக் கொண்ட பொறாமை தீக்குச்சியை மெதுவாக ஊதித் தள்ளி தானாகவே அதை அணைக்கும் முயற்சியில்," வீட்டு நினைப்பு வந்திருக்கும், இல்லையா... பெரியவளே, இங்கேயும் தான் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு.இக்கரைக்கு அக்கரை பச்சையாத்தான் தெரியும். அதனால் தான் லெட்டருக்கு மேல் லெட்டர்.... மன அமைதிக்காக எழுதி இருப்பான்.... ஆனாலும் வாராவாரமாவா ?.... ஆமா, அப்படி என்ன எழுதுகிறான் ?" இப்போதும் நான் மௌனமாக வாய்மூடி இருந்து விட்டேன்; ஆரம்பித்துவிட்டால் அவ்வளவுதான் அத்தனையையும் கொட்டி விடுவேன்.

 என்ன எழுதுகிறான்- உலகில் அங்கங்கே நடக்கும் விஷயங்கள், கிண்டல்கள், புரொபஸர்களின் நடை உடை பாவனைகள், பெண்களின் உலகளாவிய கோபங்கள் (இது தன் தமக்கை 'மல்லிக்கா' என அழைக்கப்படும் மல்லிகாவை வெறுப்பேற்ற) குறும்புகளின் தொடர் வர்ணனைகள்... மேலும் பருப்பு-கறி சமையலில் செய்யும் சோதனைகள் பற்றிய சூடான அறிக்கைகள்.....

 இப்பவும் அதேபோல்.... நாளை கறி சமைக்கும் முறை என்னுடையது என்று சொல்லிவிட்டார்கள். நானும் என் உயிரைக் கொடுத்து எல்லா மசாலாக்களும் போட்டுத்தான் சமைத்தேன். ஆனால் நண்பர்கள் எல்லோரும் அதை நாக்கில் வைத்ததுமே முகத்தைச் சுழித்து சத்தம் போட்டார்கள்-"என்ன குழம்பு வைச்சிருக்க ? கொஞ்சம் நல்லாத்தான் செஞ்சா என்ன ?"

 நான் பேச்சு வராமல் முணுமுணுத்தேன்- "நானும் எல்லா மசாலாவும் போட்டுத்தான் செய்தேன். ஆனால் ருசி வரவே இல்லை"

 அம்மா,...குழம்பு சரியில்லை... சரி... ஆனால் என் பிரண்ட்ஸ் என்னைப் பார்த்து விளம்பரத்தில் வரும் பெண்ணைப் போல நன்றாக மிமிக்ரை செய்கிறாயே என கிண்டல் செய்து போனார்களம்மா... நானும் பதிலுக்கு அவர்களுக்கு முறைப்பாக தேங்க்ஸ் என பதில் தெரிவித்தேன். கடிதத்தின் முடிவில் இதை சேர்க்கிறேன்- இரண்டு மூன்று நண்பர்கள் சேர்ந்து வெங்காயம், தக்காளி வெட்டிக் கொடுக்க ,காய், அப்பளம் ,ஊறுகாய் உதவியோடு சாப்பிட்டபின் தான் சாப்பாடு தொண்டைக்குள் இறங்கியது. இந்த மாதிரி சமயங்களில் அம்மாவின் சமையலை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்பதை சொல்லும் போது அம்மாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

 அடுத்த கடிதம்-" சூப்பர் அம்மா! நீ அனுப்பிய உன் கைமணம் ....என்ன மாதிரியான வாசனை! அப்பார்ட்மெண்ட் பூராவும் ஓமம், பெருங்காயம் மற்றும் ரிபைண்ட் ஆயில் வாசனை..

 நூறாண்டுகளாக இங்கே வாழும் இந்த மண் வாசனை மறந்து போன நண்பர்கள்- அவர்களின் நண்பர்கள் என எல்லோரும்," ஆஹா... என்ன ஒரு நறுமண வாசனை!.. நம் நாட்டு மண்வாசனை.." என மூக்கின் மேல் விரலை வைத்து வாசனை பிடித்தபடி இங்கே வந்து விடுகிறார்கள். பாட்டியிடம் சொல்லுங்கள், அவர் சொல்லும் பணியார கதையின் முக்கிய பாத்திரமான பணியாரம் இங்கே உலகம் விரும்பும் பாத்திரமாக மாறிவிட்டது என்று.(பாட்டியின் கதையில் பணியார வாசனையால் இரவில் திருட்டுத்தனமாக ஒருவர் பின் ஒருவராக சமையல் முறைக்குள் நுழைந்து பணியாரத்தைக் காலி செய்து விடுவார்களே) எல்லா பக்கமும் ,"தாய் மண்ணே... வணக்கம்! தாய் மண்ணே.... வணக்கம்!" என்ற பாடல் கேசட்டு தான் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. "வெளிய எடு, நண்பா! பிரண்ட்ஸ் எல்லோரும் எவ்வளவு ஆசையாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கே பார்! ஊறுகாய் பாட்டில் கூட உடன் கொண்டு வந்திருக்கிறார்கள்... கவலைப்படாதே மிச்ச ஊறுகாயை உனக்கும் பரிசாக விட்டுவிட்டுத் தான் போவார்கள்."

 பொய் சொல்ல மாட்டேன் எல்லோருக்கும் கொடுத்தேன். ஆனால் இனிப்பு பலகாரமான பால்கோவா குஜியாவை மட்டும் ஒளித்து வைத்து விட்டேன். எப்பல்லாம் மனம் கவலையில் இருக்குமோ அப்போதெல்லாம் அதை எடுத்து பாதி சாப்பிட்டு மீதியை உடனே மறைத்து வைக்கிறேன். இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் சாப்பிடும் போதும் இந்த முக்கியமான கேள்வி எழத்தான் செய்கிறது-" குஜியா தீர்ந்தபின் என்னவாய் திருட்டுப் பயலே ?"

           - தொடரும் 


Rate this content
Log in

Similar tamil story from Classics