Dr.Padmini Kumar

Classics

5  

Dr.Padmini Kumar

Classics

தாய் மண்ணே வணக்கம் ( பாகம் 5)

தாய் மண்ணே வணக்கம் ( பாகம் 5)

2 mins
411


"பார்த்தீர்களா, அம்மா... சொன்னபடி வந்துவிட்டேன்." கண்ணன் அமெரிக்காவிலிருந்து வந்து விட்டான்." இதுதான் என் ஆராய்ச்சி கட்டுரை." மல்லிகா நம்பவில்லை, "கொஞ்சம் பக்கங்கள் தானே இருக்கிறது!.... இந்த ஆராய்ச்சிக்காகவா அவ்வளவு தூரத்தில் உள்ள ஹார்வர்டு, மச்சாசுசெட்ஸ், பாஸ்டன் வரை பறக்க வேண்டி இருக்கு !...எங்கள் டிபார்ட்மெண்டின் சுகன்யா மேடம் இதைவிட மோட்டாவாக ஒன்பது மாத கர்ப்பம் மாதிரி எழுதி முடித்து இருப்பார்கள்!..." "அம்மா... தாயே... உங்கள் சுகன்யா மேடம் மாதிரி கூரையைப் பொத்துக் கொண்டு செய்கிற கிரியேட்டிவிட்டி எனக்கு இல்லம்மா...." "அப்படின்னா, இந்த பேப்பரை எல்லாம் என்னன்னு சொல்லுவது தம்பி...?"

" இவைகள் எல்லாம் வெத்து காகிதங்கள் அல்ல.... முட்டாள் அக்காவே.... இதெல்லாம் ஆராய்ச்சி கட்டுரைகள்- நம் நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாகி பாராட்டப்பட்ட கட்டுரைகள்... இதைப்பார்... மிகச் சிறந்த தனித்துவம் வாய்ந்த பரிசு ! எனது ஆராய்ச்சியின் வழிகாட்டி டாக்டர். மார்ட்டின் கொடுத்த சர்டிபிகேட் ! என் ஆராய்ச்சி கட்டுரையைப் படித்தபின் பிரமிப்பில் உணர்ச்சி பொங்க இந்த சர்டிபிகேட் எழுதிக் கொடுத்தார். உலகை விட உயர்வாக என்னை உயர்த்தி இருக்கிறார் தெரியுமா..." மல்லிகா சர்டிபிகேட்டை உரக்கப் படிக்க ஆரம்பித்தாள் ,"டாக்டர் கண்ணனின் இந்த ஆராய்ச்சி சைல்ட்- நெஃப்ராலஜி, அதாவது குழந்தைகளின் கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகள், அதன் நிரந்தர தீர்வுகள் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் தனித்துவம் வாய்ந்த உயரிய கண்டுபிடிப்பு. எல்லையில்லா கடின உழைப்பால் உண்மையான சான்றுகளால் நிரூபணம் ஆக்கப்பட்டது. தனது ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளரின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் ஈடு இணையற்றது. உலகம் முழுவதும் இதைத் தீவிரமாக செயல்படுத்த தொடங்கினால் மருத்துவ அறிவியலால் உலகிற்கு வருங்காலத்தில் ஆரோக்கியமான தலைமுறைக் குழந்தைகளை வழங்க முடியும்."

அம்மா சிரித்துக்கொண்டே கேட்டாள்,"மூன்று வருஷமா நீ இதைத்தான் செய்தாயா ? வாயால் தான் வடை சுட்டாயா ?" "என்னம்மா நினைத்தாய்.. உனக்கு சமையலைத் தவிர வேறு நினைப்பே கிடையாதா ..... கிட்னி பற்றி பேசும்போது வடை சுடுவது பற்றி பேசுகிறாயே.... உனக்குத் தெரியுமா.... டாக்டர் மார்ட்டின் என்னைப்போக அனுமதிக்கவே இல்லை; தன்னுடைய அடுத்த புதிய ப்ராஜெக்ட்டுக்காக என்னை அங்கேயே இருக்கச் சொன்னார்." "அப்புறம் எப்படி கிளம்பி வந்தாயாம் !"

" நான் சொன்னேன், சார், அம்மா எனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்று..."

" புரியுது....புரியுது... அம்மாவா ?... அல்லது..

 நீயா?" மல்லிகா கலாய்த்தாள். "உண்மையாகவா !" அம்மா உடனே ஒரு கவரை கண்ணனின் முன் பிரித்து போட்டோக்களைக் காண்பிக்க ஆரம்பித்தார். "இதைப் பார்த்து சொல்லு... இவள் எப்படி இருக்கின்றாள் ?" கண்ணன் தன்னை சுதாரித்துக்கொண்டு சொன்னான்," அழகாக இருக்கிறாள்."

" அப்புறம்.. இது..."

" அட ,இவள் அவளைவிட அழகாக இருக்கிறாளே!" "என்னடா.... நீ..." அம்மா கண்ணனின் மனநிலை புரிந்து போட்டோக்களை மீண்டும் கவரில் திணித்தாள். கண்ணன் பெருமூச்சு விட்டவாறு தன் ஆராய்ச்சி கட்டுரை பேப்பர்களை ஃபைலில் ஒழுங்காக அடுக்கி வைத்தான்.பக்கத்தில் இருந்தாலும் அம்மாவிற்கு கண்ணனை விட்டு தூரத்தில் நிற்பதைப் போன்ற உணர்வில் இருந்தாள்.அவளது விருப்பங்கள் அவனது சாதனைகளின் கட்டுடன் இணைந்து விட்டது. பைத்தியக்காரத்தனமான இந்த உலகின் எல்லைகளைக் கடந்து குழந்தைகளின் கிட்னி ட்ரான்ஸ்பிளான்ட் (சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை) பற்றித் தான் செய்திருந்த ஆராய்ச்சியின் முடிவாக தன் வாழ்க்கையின் இள வயதிலேயே இரவும் பகலும் லேபில் ஆராய்ச்சி செய்து கழித்துக் கொண்டிருந்தான். தன் உயர்ந்த லட்சியத்திற்காக சில சமயங்களில் அதிகப்படியான பேரார்வத்துடன் பரிசோதனைகளுக்கு மேல் பரிசோதனைகள், அதன் முடிவுகள், தோல்விகள், ஏமாற்றங்கள், தீர்வுகள் என அந்த உலகமே தனி உலகம். அங்கு அவனின் அனைத்து உழைப்பின் உச்சகட்டம் தான் இந்த ஆராய்ச்சி கட்டுரை(Thesis).இதை டாக்டர். கண்ணன் உலகம் பூராவும் உள்ள குழந்தைகளுக்காகவே சமர்ப்பித்துள்ளார். ஆனாலும் முக்கியமாக தன் தாய் மண்ணின் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்து வந்திருக்கிறான்.டாக்டர் மார்ட்டினைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண ஆராய்ச்சி புத்தகம் இல்லை ; இது ஒரு சாதாரண தீர்மானம் இல்லை; இது ஒரு உயரிய பணியின் உச்சகட்டம். 

இந்த உச்ச கட்டத்தின் தொடக்கம்.... சிரஞ்சீவியின் மரணத்திலிருந்து...

தொடரும்...


Rate this content
Log in

Similar tamil story from Classics