Vadamalaisamy Lokanathan

Classics

4.2  

Vadamalaisamy Lokanathan

Classics

புராணம்

புராணம்

1 min
227


புராணம்.

புராண காலத்தை பற்றி ராமு நிறைய படித்து இருந்தான்.அதை பற்றி பாட்டி நிறைய கதைகள் சொல்லி இருக்கிறார்கள்.மகாபாரத

கதைகள்.ராமன் காட்டிற்கு போன கதைகள் என்று நிறைய தெரிந்து வைத்து இருந்தான்.ஒவ்வொரு கோவிலுக்கு போகும் போது அதனுடைய புராண வரலாறை தெரிந்து கொள்வான்.அதில் மக்கள் வைக்கும் நம்பிக்கை, பக்தி போன்றவை அவனுக்கு வியப்பை அளிக்கிறது.

இன்றைக்கு ஒரு மருத்துவம் பற்றி தகவல் அறியும் போது,குறிப்பாக மூலிகைகள் பற்றி படிக்கும் போது,அதன் தோற்றம் எவ்வாறு வந்தது, போரில் காயம் பட்ட ஒருவருக்கு இந்த மூலிகை சார் தான் அவரை குணபடுத்தியது என்று அறியும் போது அதை பற்றி அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.


குறிப்பிட்ட பாடலை படித்தால் துன்பம் தீரும்,நோய் குணமாகும் என்று அறிவியல் ரீதியாக சொல்வதை அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

இப்போதுள்ள மக்களுக்கு அதை செய்யவும்,படிக்கவும் நேரமில்லை.

புராண காலத்து மருத்துவம் நோயை குணப்படுத்த முடிந்தது.ஆனால் இந்த விஞ்ஞான வளர்ச்சியில் கண்டு பிடிக்கும் மருந்துகள் நோயை கட்டு படுத்த முடிந்தது. பூர்ண குணம் என்று உறுதி பட கூற முடியவில்லை.

புராண காலத்தில் நோயை வேரோடு அறுத்தார்கள்,இப்போது நோயை மேலாக புடுங்கி எரிந்து விட்டு வேரை பிடுங்காமல் விட்டு விடுவதால்,அது திரும்ப தலை தூக்குகிறது.

ராமு புராணம் கற்பனை என்று ஒதுக்கவில்லை.எதுவும் ஒரு நம்பிக்கை தான்.ராமனும் சீதையும் ஒரு சிறந்த தம்பதிகளாக வாழ்ந்தார்கள் என்று புராணம் சொல்லும் போது,நாமும் அப்படி வாழ முடியாத,வாழ்ந்து காட்டுவோம் என்பது நம்பிக்கை.

முற்றும்..


Rate this content
Log in

Similar tamil story from Classics