Saravanan P

Abstract Drama Inspirational

4.5  

Saravanan P

Abstract Drama Inspirational

பருவங்கள் பலவிதம்

பருவங்கள் பலவிதம்

2 mins
329


கற்பனை கதை

கடினமான சூழ்நிலைகள் எதையும் எதிர்கொள்ளவில்லை என்றால் நீ புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள முடியாது.


மகேந்திரன் தன் வீட்டில் அமர்ந்து அப்பாவுடன் டிவி பார்த்து கொண்டிருந்தான்,அவன் அப்பா அப்பொழுது உலகப்கோப்பை போட்டி ஒன்றை பார்த்து கொண்டிருந்தார் அவரது மகன் மகேந்திரன் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.


மகன் மகேந்திரனுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் வர காரணம் அவன் அப்பா தான்,சிறு வயது முதல் அவனுக்கு கிரிக்கெட் பற்றி சொல்லி அவனுக்கு அதில் ஆர்வம் வர வைத்தது அவர் தான்.


மகேந்திரன் முதலாம் வகுப்பு படிக்கும் போது திருவிழாவில் வாங்கிய பிளாஸ்டிக் பால் வைத்து அவனுடன் கிரிக்கெட் விளையாடுவார் அவர்.


பெட்டி கடையில் இரவு நேரம் முழுக்க கஷ்டப்பட்டாலும்,

மகேந்திரன் நான்காம் வகுப்பு சென்ற போது அவனுக்கு முன்னூற்று ஐம்பது ரூபாய் பேட் ஒன்று,கடின பந்து என வாங்கி லீவு நாட்களில் காலையில் அவனுடன் மைதானம் சென்று இருவரும் விளையாடுவார்கள்.


மகேந்திரன் தீடீரென கிரிக்கெட் கோச்சிங் போகனும் என ஐந்தாம் வகுப்பு தொடக்கத்தில் கூறினான்.


அவன் அம்மா எவ்வளவு தடுத்தும்,அதற்கென பணம் சேர்த்து நல்ல பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார் அவன் அப்பா.


மகேந்திரன் ஆரம்பத்தில் நன்றாக விளையாண்டாலும் அவன் வயது குழந்தைகள் டிவி பார்த்து கொண்டு இருப்பது,நன்றாக காலை கிளம்பி பள்ளிக்கு வருவது,தான் மட்டும் காலை,மாலை இருநேரம் பயிற்சி செய்வது பற்றி வருந்தினான்.


இது அவனது கிரிக்கெட் பயிற்சியை பாதிக்க, கோச் அவனது அப்பாவை அழைத்து மகனிடம் மனம் விட்டு பேச சொல்கிறார்.


மகேந்திரன் தன் அப்பாவுடன் அன்று மாலையை வாக்கிங் சென்றான்.


அவனது அப்பா பேச ஆரம்பித்தார் "அப்பா ஏன் படிக்கல அப்படினு கேப்பில சொல்றேன்,எங்க அப்பா ,உன் தாத்தா என்னை கஷ்டப்பட்டு படிக்க வைச்சாரு,நான் அப்ப அப்ப நம்ம கடைக்கு போய் வேலை செய்வேன்,காசு பார்க்க ஆரம்பிச்சு,செலவு செய்ய செய்ய என் புத்தி படிப்பில இருந்து தடுமாறுச்சு,உங்க தாத்தா,என் பிரண்ட்ஸ் எல்லாரும் எவ்வளவோ சொல்லியும் கேக்காம படிப்பை நிறுத்தினேன்.


இப்போ எனக்கு இருந்த வாய்ப்பை தொலைச்சதை நினைச்சு இன்னும் வேதனைபடுறேன்.


நீ அடுத்தவங்க பண்றத பாக்குற,உனக்கு முன்னாடி இருக்க வாய்ப்பை பாரு,கஷ்டப்படு.


நான் வியாபரத்துல தினம் தினம் போட்டி போடுறேன்,அது என்னை முன்னேத்துது.


நீயும் உன் மனசோட சண்டை போடு,ஈஸி இல்ல,ஆனா முடியும்.


வாய்ப்பு போன அப்பறம் புலம்புறவன் மேல அனுதாபம் தான் பட முடியும், கிரிக்கெட் வேணாமா சொல்லு அப்பா ஒன்னும் சொல்ல மாட்டேன்" என பேசி முடித்தார்.


அப்பா சொல்வது மகேந்திரன்‌ ஒரளவு புரிந்து கொண்டான் அவன் கேட்ட எறும்பு, வெட்டுக்கிளி மழை கால உணவு கதை வாய்ப்பு என்ற வார்த்தையை கேட்டவுடன் அவன் மனதில் வந்து நின்றது.


தான் இனி நன்றாக பயிற்சி செய்வேன் என அப்பாவிடம் கூறி வீட்டிற்கு போகும் வழியில் தோனி ஸ்டிக்கர் ஒன்றை அப்பாவிடம் மன்றாடி வாங்கினான்.


4 வருடங்கள் கழித்து,


மகேந்திரன் அந்த மாவட்டத்தின் 15 வயது சிறுவர் அணியின் கேப்டன்,வீக்கட்கீப்பர் பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடினான்.

தன் அப்பா அன்று கூறிய வார்த்தைகளை நினைத்தபடி அன்று மைதானத்திற்குள் பவுலிங் செய்ய கையில் கிளவஸை மாட்டி கொண்டு அணி வீரர்களிடம் ஹடில் அமைத்து பேசி கொண்டிருந்தான்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract