பொருள் கிடையாது
பொருள் கிடையாது


அப்ப என் வீட்டு கல்யாணத்துக்கு எந்த பொருளும் உங்க கடையில் இருந்து தர மாட்டீங்க! அப்படித்தானே! என்றாள் சீமாட்டி.
அதான்! தெளிவா புரியறமாதிரி லெட்டர்ல எழுதியும் ஏன் தொல்லை செய்கிறீர்கள்?
எல்லார் வீட்டிலேயும் சாவு விழ வச்சிட்டு உன் வீட்டுக் கல்யாணத்திற்கு பொருள் கேட்கறியே! உனக்கு உண்மையிலேயே வெட்கம்,மானம்,சூடு,சுரணைன்னு இருந்தால் உன் வீட்டிலேயே தயார் செய்துக்கோ! ஊரோடு ஒத்து வராதவளுக்கு யாரைக்கூப்பிட்டு பந்தல்ல உட்கார வைக்க இப்ப சாமான் வாங்க வந்தீயளாக்கும்…..நீ போடுற சோத்துல மயங்கி உன்னையே உலகத் தலைவியா நிர்ணயம் பண்ண கூப்பிட்டனுப்ப யாரும் இங்க தயாரில்லை. முதல்ல இடத்தைக் காலி செய்! என்றாள் பரத்வாசினி.
ஏன்தான் இப்படி விஷத்தை விதைத்தோமோ என்று சீமாட்டி முதன்முதலாக கவலைப்பட ஆரம்பித்தாள்.