KANNAN NATRAJAN

Abstract Drama Inspirational

5  

KANNAN NATRAJAN

Abstract Drama Inspirational

பொறுமை! பொறுமை!

பொறுமை! பொறுமை!

3 mins
35.6K


கம்பெனி வேலைக்குப் போகலையா கௌசல்யா!?..........

இல்லை!

ஏன்?

எப்ப எனக்கு கல்யாணம் பண்ணப் போறீங்க? எனக் கேட்டபடி இருமினாள்.

இரும்பு,செம்பு உருக்குற கம்பெனி வேலைக்குன்னு அனுப்பினீங்க! ஆனால் அது என் உடம்புக்கு ஒத்துக்கலைப்பா! கம்பெனி மூடிட்டா நல்லாயிருக்கும்.

அந்த கம்பெனி வந்தததில் இருந்து நம்ம கிராமத்து ஏரித் தண்ணீர் மாறித் தெரியுது! இப்படியே எல்லோரும் கிராமத்துல தண்ணீர் இருக்குதுன்னு வெளிநாட்டு கம்பெனியை முழுவதும் கொண்டு வந்தால் கடைசியில் கட்டாந்தரையும், எலும்புக்கூடு கருகிய மனிதர்கள்தான் இருப்பாங்க!

பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பை மாற்றி எழுதாதவரை ஒன்றும் செய்ய முடியாது.

ஆமாம்! இப்படித்தான் கூல்டிரிங்க்ஸ் கம்பெனி திறந்தாங்க! கடைசியில் அது கெடுதின்னு சொன்னாங்க! இன்னைய தேதிவரைக்கும் கடையில் போய்ட்டுதான் இருக்கு! கேன் தண்ணீர்னா என்னன்னு தெரியாத நம்ம ஊர்ல கேன் தண்ணீர் வாங்கறோம்.

எல்லாம் இலஞ்ச மயம்தான்.

இந்த மொபைல்டவர் வந்ததில் இருந்து சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க! ஊருக்கு ஒதுக்குப்புறமாக மட்டும்தான் வைக்கணும்னு சொல்லியும் அதிக வாடகை கொடுத்து நகர்ப்புற மாடியில் வசசிருக்காங்க! அதையும் அரசு பார்த்துட்டுதான் இருக்கு!

இது போதாதுன்னு சாயப்பட்டறை கழிவெல்லாம் விவசாய நிலத்துல ஓடுது!

அவனவன் விவசாய நிலத்துக்கு மட்டும் பாசன தண்ணீர் திறந்துப்பாங்க!

மக்கள் பாவப்பட்ட ஜன்மங்கள் அம்மா!

இல்லை! சுவாமிநாதன்….உங்களுக்குத்தான் விழிப்புணர்வு இல்லை. எதுவும் ஊருடன் சேர்ந்து போராட்டம் அமைத்தால்தான் வழி கிடைக்கும்.

மரங்கள் இல்லாமல் தண்ணீர் வசதி இனி இருக்காது. மொபைல்டவர் காற்றில் உள்ள ஈரச் சத்தை ஈர்த்து நோய்க்கிருமிகளைப் பெருக்கும். இப்ப ஒரு காஸ் பலூனை ஒரு அறையில் தரையிலிருந்து மேல் நோக்கி பறக்க விட்டால் எத்தனை நாள் பறக்கும்?

ஒருநாள் இருக்கும்? அப்புறம் தரையில் கிடந்து சூம்பி விடும்.அதுபோலத்தான் இந்தக் கிருமிகளும். நாமாக அதற்கு போகப் போக பம்ப் செய்து ஏற்றினால்தான் இன்னமும் நிறைய பலுன்கள் செய்ய தேவையான அளவு காற்று கிடைக்கும்.

 அதேதான்….அதென்ன கையில் புதுசா!

கடையில் ஓடோனில் பாத்ரும் அலமாரி வைக்க வாங்கினேன். அதற்கு இலவசம் என்று இதைக் கொடுத்தார்கள். நல்ல ஸ்ட்ராபெர்ரி வாசனை! அது எப்படி அறை முழுக்க நம்ம சுவாசத்தைப் பரப்புகிறதோ, ஒலி அதைப்போல அலைநீளமாக வரும்….

அதுதான் சிட்டுக்குருவிகளுக்கு எமனாக இருக்கிறது. மரபணு என்பது இடத்திற்கு இடம் மாறுபடும். அதற்கேற்ப நாம் இயற்கைக்கு ஏற்ப உணவு உண்பதுபோலத்தான் எல்லாம் நடக்கிறது.

கௌசல்யா! இந்த வருடம் தம்பிக்கு படிப்புக்கு செலவு பண்ண பணம் வேணும். அதுக்கு நீ வேலைக்குப் போய்த்தான் ஆகணும்.

நீங்கபாட்டுக்கு ஊத்திட்டு வருவீங்க! எனக்கு கல்யாணமும் பண்ணமாட்டீங்க! அவனைத் தனியார் பள்ளியில் படித்து பெரிய ஆளா வருவான். கடைசியில் நான் வயதானபிறகு எந்த குடிகாரன்கிட்டவோ தள்ளி விடுவீங்க! அவன் குடிச்சு குடிச்சு செத்து போய்டுவான். நீங்களும் இருக்கமாட்டீங்க…என்னைக்குத்தான் இந்த பொம்பளை சமுதாயம் நல்லா இருக்க விடுவானுங்களோ! அத்தை அப்படித்தான் விதவையா நிக்குது..கல்யாணம் பண்ணி இரண்டு பசங்க…அரசு பள்ளிதான் கல்யாணம் பண்ணியே 3 வருசம்தான். உங்களுக்கு மட்டும் எப்படிப்பா தாத்தா இரண்டாம் கல்யாணம் செஞ்சு நாங்கள்லாம் பிறந்தோம்? எனச் சொல்லிவிட்டு கௌசல்யா எதிர்வீட்டு ரங்கநாதனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

நீங்க தொடருங்க சார்! என் கஷ்டம் எனக்கு..ஏதோ ஆற்றமாட்டாமல் புலம்பிட்டேன். தப்பா நினைக்காதீங்க சார்!

சுவாமிநாதன் மௌனமாக ஊரு உலகத்துல நடக்கிறதைத்தான் நான் செஞ்சேன். பொட்டைக்கோழி வாயைப் பொத்திட்டு களை பறிச்சுப்போடற வேலை பிடிக்குதுன்னா செய்! எதிர்த்துப் பேசாதே!

உங்கப்பாவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பும்மா! கடை திறந்தாச்சாம்! கொரானா அதுலதான் போவும்னு எவனோ புரளி கிளப்பியிருக்கான்.

கௌசல்யா சாமிபடம் வைத்திருக்கும் உண்டியலை உடைத்து பணத்தை வீசி தரையில் எறிந்தாள். எடுத்துக்கொண்டு சுவாமிநாதன் வெளியேறினார்.

பாரு கௌசல்யா! உலகெங்கும் பிப்ரவரி மாதத்தில் இருந்து முகமூடி போடறோம்! பறவை,மரம்,அணில்,குருவி,காக்கை எதாவது முகமூடி போட்டுச்சா! ஆறறிவு உள்ள மனிதன்மட்டும்தான் போட்டிருக்கான். அதாவது இயல்பாகவே ஓரறிவுடன் ஐந்தறிவுள்ள ஜீவன் அதனுடன் பழகி வந்திருப்பதைக் காற்றில் கலந்தால்தான் இத்தனை மனிதர்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள். பாருங்க நேற்று பத்திரிகை படத்தை! அரசுகிட்டே லாக்டவுன் ஆகிடுச்சு….சாப்பாட்டுக்கு வழியில்லைன்னு சொல்றாங்க…அரை டவுசரைப் போட்டுட்டு அனுமார்வால்மாதிரி நீளமாக புட்டி வாங்க அலையுதுங்க! இதுக்கு மட்டும் பணமிருக்கா!

மக்களுக்கு நல்லா மது குடிக்கணும்! பொம்பளைங்களை அசிங்கமா படம் எடுத்து மேல்நாடு மக்களுக்கு விற்கணும், டிக்டாக் பார்க்கணும், அதுக்கு ஹைஸ்பீட் மொபைல் வேணும்! இல்லையா சார்!

உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை வந்திருக்கான்மா! தோட்டப்பண்ணையில் வேலை செய்யறாம்மா!

விவசாய மாப்பிள்ளைன்னா வேண்டாம் சார்!

ஏம்மா!

மரம் நட்டுக்கிட்டே இருந்தா எங்களுக்கு என்னசார் வசதி கிடைக்கும்? ஃபேனடியில் உட்கார்கின்ற மாப்பிள்ளையாகப் பாருங்கள் சார்!

 நீ நினைக்கிறது தப்பு! மரமில்லாமல் ஒன்றும் பண்ணமுடியாது. தெருவோரம் அசோகர் காலம்போல பழமரங்கள் நட்டிருந்தால் இப்ப தமிழ்நாட்டில் காய், பழங்களுக்கு தட்டுப்பாடு வந்திருக்காது இல்லையா? மாட்டுக்கு, ஆட்டுக்குன்னு புல் வச்சிருக்கலாம்,

தனக்குன்னு மட்டும் வீட்டுக்குள் வச்சுப்பாங்க! ரோடில் வைக்க மாட்டாங்க!

நம்மநாடுன்னு ஒரு தேசபக்தி எல்லா உலக மக்களுக்கும் இருக்கணும்! விதை வங்கி உருாக்கி வைக்கணும். எல்லோரும் இடம் மாறி வரும் நிலை வந்தாலும் பயிரிட விதைப்பண்ணை வாங்கி நம்ம வீட்டுக்குன்னு இருக்கணும். உலக மக்களுக்குள் சகோதரத்துவம் வளரணும்..இல்லைன்னா பூமி மாதா அடுத்தகட்டமா எல்லாரையும் வானத்தில் நட்சத்திரமாக இருக்கக் கூப்பிட்டு போய்டுவா!

பொறுமை! பொறுமை! கடவுள் சோதிச்சுப் பார்ப்பார்…அப்பவாவது திருந்துறாங்களான்னு….அதுதான் இப்படி!


Rate this content
Log in

Similar tamil story from Abstract