பிஸ்கட்
பிஸ்கட்


நகரத்து தூசி கரோனா காரணமாக மிகவும் குறைந்திருந்தது. கடைகளும் இரண்டு மணியளவில் பூட்டப்பட்டு இருந்ததால் தியாகுவிற்கு குடிக்க கூல்டிரிங்க்ஸ் கிடைக்கவில்லை. விஜயா ஆஸ்பிடல் பக்கமாக நுழைந்து சென்றால் சந்தில் எங்கேயாவது தெருக்கடை இருக்கும் எனத் தேடினான்.பசி அவன் வயிற்றைக் கி்ள்ளியது. சாலையில் படுத்து தினக்கூலிக்கு வேலை செய்தாயிற்று! இப்ப தினமும் இப்படி லோல்படவேண்டி இருக்கு! இந்த பஸ்ஸ்டேண்டில் இருந்த பிச்சைக்காரர்கள் என்ன ஆனார்கள் எனத் தேடத் தொடங்கினான்.
அதற்குள் இருட்டத் தொடங்கியதால் கால்போன போக்கில் போகத் தொடங்கினான். ஏற்கனவே போலிஸ் சாலையில் படுத்தால் திட்டுமே என யோசித்துக்கொண்டே ஏதோ ஒற்றையடிப்பாதை வழியாக சென்று கொண்டே இருந்தான். திடீரென ஒரு வீட்டின்முன் தெருவோரத்து பெட்டிக்கடைபோல ஒன்று முளைத்திருந்ததைக் கண்டு வேகமாக ஓடி எனக்கு கூல்டிரிங்க்ஸ் இரண்டு பாட்டில்,பிஸ்கட் இரண்டு பாக்கெட் என்றான். கடையில் அமர்ந்திருந்த சிறுவன் கையில் வைத்திருந்த புத்தகத்தில் நாட்டில் மது,போதை மருந்து ஒழிப்பதற்காக அரசு பல திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது என்பதைப் படித்துக்கொண்டிருந்ததைக் கவனித்துக் கேட்டான் தியாகு.
ஏம்பா! மது,போதை மருந்து ஒழிக்கணும்னு சொல்றியே! அரசு கடை திறக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கும்போது நீ கடை வைப்பது சரியா? சிகரெட் விற்பது சரியா?
உங்களை மாதிரி பசி என்று வருபவர்களுக்கா
க நான் பழம்,பிஸ்கட்,கூல்டிரிங்க்ஸ்,ஸ்னாக்ஸ் விற்கிறேன். காரணம் என்ன தெரியுமா? எனக்கு அடுத்த வருடம் பள்ளிக்கு ஃபீஸ் கட்டணும். எனக்கு அப்பா,அம்மா யாரும் கிடையாது. இந்த போட்டோவில் இருக்கிற வடிவுடையம்மனும்,தியாகேஸ்வரன் கோவில்லதான் நான் வளர்ந்தேன்.இப்ப பதினொன்று படிக்கிறேன்.
ஏற்கனவே தியாகுவிற்கு வடிவுடையம்மனைப் பற்றி கேள்விப்பட்டிருப்பதால் ஒன்றுமே பேசவில்லை. அம்மன் தப்பு செய்தால் கண்டிப்பாகத் தண்டனை தருவாப்பா! நீ இந்த சிகரெட்பாக்கெட் மட்டும் விற்காதேப்பா! அவசரத்திற்கு கடை வைத்திருக்கிறாய். அது தப்புதானே
!
இது என் வீடு.வீட்டிலிருந்து யாருக்கும் சாலையில் துன்பம் தராமல் கடை நாலு டிரேவில் வைத்திருக்கிறேன். என் கடை மெயின்ரோடில் இருக்குது! அதை எனது அத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்.இப்ப அந்த கடை லீவு. இப்ப என் கடையும் இல்லைன்னா எங்க சாப்பாட்டுக்கு போவீங்க! எல்லாத்துலயும் தப்பு பார்த்திட்டு இருந்தால் வயிற்றுக்கு ஈரத்துணிதான் போட்டுக்கணும்.
அப்ப எதுக்குப்பா படிக்கிற? என்னைமாதிரி முகமூடியும் போடலை.சாலையில் இருக்கிற தூசியில் உன் பொருளை இந்த நேரத்துல போட்டிருக்கிறே! எத்தனை பேருக்கு கரோனா வரும் தெரியுமா! எனக்கு அரசு தருகிற அம்மா உணவகம் இருக்கு...இப்படியே நடந்து போனால் காமராஜர் ரோடு வரும். எனக்கு அதுபோதும்பா! காமராஜர் யாருன்னாவது தெரியுமாம்பா! எனக் கேட்டபடி தியாகு வேகமாக நடந்து செல்ல ஆரம்பித்தான்.