பெண்
பெண்


அம்மா! ஒரு கதை சொல்லுங்கள்!
ஏண்டா! மாம்பழம் சாப்பிட்டு தூங்க வேண்டியதுதானே! தேர்வுதான் தள்ளிப் போச்சு இல்லையா! எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு என்றார் கலெக்டர் அன்புநங்கை.
கண்மணி அம்மாவை விடாமல் தொல்லை செய்ய ஆரம்பிக்கவே ஆஃபிஸ் கட்டுகளை ஓரங்கட்டிவிட்டு கண்மணியுடன் பேச ஆரம்பித்தாள். மணி ஒன்பதாகிறது. எதற்கு இந்த கதை கேட்கும் படலம்! .... என்றார்.
இந்த தேர்வு பகுதியில் சொந்தமாக எழுத நிறைய வினாக்கள் வரும். அதற்கு கதைகள் நிறைய தெரிந்திருந்தால் கொடுத்த நேரத்தில் மேற்கோள் காட்டி எழுதி விடலாம் அம்மா. அம்மா சொன்ன கதைதான் நினைவுல இருக்கும்.
என்ன தலைப்பில் கதை வேண்டும்?....
அதெல்லாம் உன் இஷ்டம்..கதை நீதி எல்லா மதமும் சமம் என்று வர வேண்டும். படிக்கிற பாடத்து தமிழ் புக்கிலயே அது இல்லையே! பின் ஏன் கேட்கிறாய்? கண்மணி. நீ ரோடில் கிடந்த அனாதை சிறுமி என்று உனக்குத் தெரியும். நீ எந்த இடத்தில் இருந்து வீசப்பட்டாய் என்றும் உனக்குத் தெரியும். எல்லாம் தெரிந்தும் உலகைத் திருத்த முயற்சிக்காதே! நீ ஒரு பெண். அதை நினைவில் வைத்து செய்!
தெய்வம் மதங்கள் வடிவில் நம்மை வழி நடத்துகிறது என்பதற்காக பிரிவினைகள் பேசுவது எதற்காக அம்மா? மனசாட்சி மட்டும்தானே அம்மா கடவுள். அதைத்தான் நாம் வெவ்வேறு உருவத்தில் கடவுளாக வழிபடுகிறோம்.இந்த உலகமே கடவுள் கொடுத்த கிஃப்ட்.
இதில் ஒருவரை மற்றொருவர் அழிக்க நினைப்பது மடத்தனம் இல்லையா? உன்னுடைய பதினைந்து வயதிற்குப் புரிவதெல்லாம் தோட்டத்தில் வரும் வெள்ளைப்புறா, லாட்டிக்குருவி, காக்கை இவற்றிற்கு மட்டும்தான் புரியும்.சரியா!
ராமகிருஷ்ண விஜயம்னு ஒரு புக் வரும். அந்த புக்ல நிறைய கதை வரும்.எனக்கு இப்ப தூக்கம் வருது..என்று மழுப்பியபடி தரையில் பாய் விரித்து படுக்க ஆரம்பித்தார் கலெக்டர் அன்புநங்கை.