panam
panam


ஏன் எழுதிக்கிட்டே இருக்கீங்க!
உனக்கு எங்கேயாவது வெளியில் போகவேண்டுமா?
இல்லை!
இது ஆராய்ச்சியம்மா!
ஆமா! உங்களுக்குத்தான் பணமுடிப்பு தர்றாங்களாம்! முதல்ல மூட்டையை விரித்து வைங்க!
ஏன் கங்கா இப்படி சலிச்சுக்கறே!
பூர்வீக வீடுன்னு வந்து உட்கார்ந்தாச்சு!
ரிடையர் ஆகிறவரைதான் வயிற்றுக்காக எழுதினீங்க! இப்ப ஜாலியா இருக்கலாமே! யார் படிக்கிறா இதையெல்லாம்!
புத்தகம்தான் நமக்கு பெயர் தரும் பிள்ளைகள். நம்ம பிள்ளைகளே புத்தகத்திற்கு அடுத்துதான்.
நேற்று மெட்ரோ டிரெயினில் போயிருந்தேன். உன் பெயரில் சில பனைவெல்லத்தில் செய்த பலகாரங்களை யுட்யுபில் போட்டேன். அப்ப பக்கத்துல உட்கார்ந்திருந்த பெண் அந்த வீடியோ பத்தி பேசினாள். நன்றாக இருக்கிறதாம் அது.
இந்த தமிழை வைத்து பாராட்டுகளும்,மெடலும்தான் வாங்கிக்கமுடியும். அது பசியை நிரப்புமா?
தினமும் எழுதினால் கப் தர்றேன்னு போட்டிருக்கானேன்னு எழுத ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே வந்திட்டே!
நீங்கவேற! நீங்க ஒவ்வொருமுறை அவர்கள் வலைப்பக்கத்தைப் பார்க்கும்போது அவர்களுக்கு பணம் வரும்.நமக்கு வெறும் கப்தான்….தெரிஞ்சதா என்றாள்