பாதகம் செய்பவரைக் கண்டால்
பாதகம் செய்பவரைக் கண்டால்


கையில் காய்கறிக்கூடையுடன் வந்த கௌரியை ஒருகணம் கணேசன் நிமிர்ந்து பார்த்தான்.
என்ன கௌரி பள்ளிக்கூடம் போறியா?
ஆமாம் அண்ணா! அம்மாவிற்கு உடம்பு முடியலை..அதான் காய் வாங்கி வீட்டுல கொடுத்துட்டு அப்படியே போவேன்.
கொண்டா! நான் கொடுத்துடறேன்.
அவனிடம் தராமல் பையை எடுத்துக்கொண்டு ஒடினாள் கௌரி.
நேற்றே அம்மா திட்டியது நினைவிற்கு அவளுக்கு வந்தது. கௌரி! அப்பா செத்து பத்துமாதம்தான் ஆகுது..கிராமத்தில் கண்ட நாயும் அதை வாங்கித்தர்றேன்னு வீட்டுக்குள்ளே வரப்பார்க்கும்…அதுலயும் நம்மகாலனி ஆளுங்களைப் பார்த்தால் அதுங்களுக்கு இன்னமும் மட்டமாத்தான் நினைக்கும்…அதனால் யாரிடமும் வாய் கொடுக்காதே…அண்ணா என்று சொல்லிப் பழகு என போதித்திருந்ததை நினைவுபடுத்திப்பார்த்தாள்.அம்மா சொல்லியது எவ்வளவு உண்மை என உணர்ந்தாள். கையில் வைத்திருந்த மொபைலில் காவலன் குறுஞ்செயலியை ஆக்டிவேட் செய்தபடி அரசு பள்ளிக்கு ஓடினாள்.