ஓய்வு

ஓய்வு

1 min
371


இன்றிலிருந்து பத்து நாளைக்கு வேலைக்கு ஓய்வு.

ஏன்? எனக் கேட்ட பாரிஜாதத்தைப் பார்த்தான் டாக்டர் ரகு.

இருக்கின்ற வேலையை விட்டு விட்டீர்களா?

ஆமாம்!

எனக்கும் பத்து நாளைக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். மருந்து சரியாக சாப்பிடுங்கள்.

நீயும் சரியாகச் சாப்பிடு! உன் நர்சிங் முடிய ஒரு வருடம் இருக்கிறது.

எத்தனையோ வருஷத்திற்குப் பிறகு ஓய்வு! இல்லையா?

டாக்டரிடம் போக வேண்டும்.

அவர்கள்தான் குழந்தைக்கு வழி இல்லை எனச் சொல்லி விட்டார்களே!

சரி! பத்து நாளைக்கு ஓய்வு கிடைத்ததைப் பயனுள்ள வகையில் செலவிட்டால் என்ன?

இரண்டுபேரும் ரிலாக்சா சிரிச்சு பேசினாலே போதும்!

கடகடவென கரோனா வதந்தி இருபது நாட்களாக நீடித்தது. ஆனால், டாக்டர் ரகு தம்பதிகள் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இயந்திர உலகத்திலிருந்து வாழ்க்கையின் இன்பத் தோட்டத்திற்கு வந்ததுபோல அவர்கள் உடம்பெல்லாம் உற்சாகம் பற்றியிருந்தது.

கடையில் போய் மளிகை சாமான் வாங்கப் போகணும்! ஒரே டயர்டா இருக்கு! நீங்க போய்ட்டு வர்றீங்களா? எனக் கேட்ட பாரிஜாதத்தைக் கவலையுடன் பார்த்தான். நாள் ஓடிப்போனதே தெரியலை! இரண்டு மாதம் ஆய்டுச்சு..இப்படியே வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தா என்னாகறது?


வா! இரண்டுபேரும் வண்டியில் போய்ட்டு வந்துடலாம்.

கோயம்புத்தூர் நகரத்து சாலையில் தொங்கவிட்டிருந்த ஸ்டார் ஃபெர்ட்டிலிட்டி சென்டர் ரிசப்ஷனிஸ்டிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி 4 மணிநேரம் காத்திருந்தார்கள்.

நர்ஸ் வேகமாக ஓடி வந்தாள்.

பாரிஜாதம் நீங்க முதலில் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க!

இப்ப இந்த இருபது நாளில் நிறைய பேருக்கு பாசிடிவ் ரிசல்ட் வந்திருக்கு….

உங்களுக்கும் பாசிடிவ்வாக இருக்கலாம் என்றவுடன் பாரிஜாதம் முகம் மலர்ந்தது.

வண்டியில் வேகமாக அமர்ந்தபடி ரகுவும்,பாரிஜாதமும் நமக்கு குழந்தை பிறந்தா கரோனா பேபின்னு வச்சிடலாமான்னு பேசியபடி சென்றதை அவர்கள் வண்டியில் இருந்த வாயில் வைத்து விரல் சூப்பிய ஸ்டிக்கர் குழந்தை பார்த்தபடி இருந்தது.

இப்படி எல்லோரும் டென்ஷனா இல்லாம இருந்தா ஃபெர்டிலிட்டி சென்டரை இழுத்து மூட வேண்டியதுதான்போ! என சிரித்தான் ரகு. 


Rate this content
Log in

Similar tamil story from Abstract