saravanan Periannan

Action Classics Thriller

4.5  

saravanan Periannan

Action Classics Thriller

ஒண்டிவீரன்

ஒண்டிவீரன்

2 mins
399


வாசகர்கள் மன்னிக்கவும் அட்டைப்படத்தில் ஒண்டிவீரன் அவர்கள்  படத்திற்கு பதில் வெண்ணிக்காலடி படத்தை வைத்துவிட்டேன்.



சாதியின் காரணமாகவும்,வரலாற்று பதிவுகள் இல்லாதனாலும நம் பலருக்கு தெரியாமல் போன ஒண்டிவீரனின் கதை.

நான் இந்த கதையை படித்த புத்தகம் : "விடுதலைப் போரில் தமிழ்ச்சமூகம்"

முதன்முதலில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்தவர் பூலித்தேவர் அவரின் படையில் தளபதியாக இருந்தவர் ஒண்டிவீரன்.

பூலித்தேவர் ஆங்கிலேயருக்கு வரி கட்ட முடியாது என மறுக்கவே வரி வசூலித்துக் கொண்டிருந்த மொகலாயர்களும்,வரி வசூலிக்கும் உரிமையை பெற்ற கிழக்கு இந்திய கம்பெனியாரும் இணைந்து பூலித்தேவர் மீது 1765 ஆம் ஆண்டில் போர் தொடுத்தனர்.

இநத போரில் பாளையத்தின் எல்லையிலேயே அந்த படைளை போரிட்டு விரட்டினார் ஒண்டிவீரன்.

12 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் தோற்ற ஆங்கிலேயன் மிகப் பெரிய படைபலத்துடன் நெற்கட்டும் செவல் மீது படையெடுக்க ஒண்டிவீரன் தன் மக்களோடும்,பூலித்தேவரின் வாரிசுகளோடும் நெற்கட்டும் செவல் பாளையத்திலிருந்து வெளியேறி அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு தயாராகினர்.

இந்த நிலையில் ஆங்கிலேயர்கள் ஒரு சவாலை முன்வைத்தனர் அதாவது உங்களில் யாராவது வீரனாக இருந்தால் எங்கள் முகாமிற்குள் உள்ள பட்டத்து வாள்,பட்டத்து குதிரை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கு கட்டி வைத்துள்ள வெண்கல நகராவை ஒலித்து விட்டால் உங்கள் நெற்கட்டும் செவல் பாளையத்தை உங்களுக்கே தந்து விடுகிறோம் என்பது தான்.

இது தான் நம்முடைய வாய்ப்பு என்று கருதும் ஒண்டிவீரன் ஆங்கிலேயேரின் முகாமிற்குள் சாதாரண தொழிலாளியாக நுழைகிறார்.

அங்கு பட்டத்து வாள்,பட்டத்து குதிரை இருக்கும் இடத்தை அறிந்து கொள்கிறார்.

பின்பு வெண்கல நகரா கட்டி விடப்பட்டிற்கும் இடத்தை பார்க்கிறார் ஒண்டிவீரன்.

வெண்கல நகரா ஒலித்தவுடன் தாக்குவதற்கு தயாராக இருக்கும் பீரங்கிகளை பார்க்கிறார் ஒண்டிவீரன்.

ஆங்கிலேயரின் சவாலை நிறைவேற்ற ஒரு அமாவாசை நாளை தேர்வு செய்கிறார் ஒண்டிவீரன்.

முதலில் பீரங்கிகளை ஆங்கிலேயர்கள் பக்கமே திருப்பி வைக்கிறார் ஒண்டிவீரன் இதை தடுக்க வரும் வீரர்களை குத்திக் கொல்கிறார் ஒண்டிவீரன்.

பின்பு பட்டத்து வாளை இடுப்பில் சொருகிக் கொண்டு ஒண்டிவீரன் பட்டத்து குதிரையை கிளப்ப முயல குதிரை கணைத்து விடுகிறது.

குதிரையின் கணைப்பு சத்தம் கேட்டு ஆங்கிலேயே வீரர்கள் அந்த இடத்திற்கு வருகிறார்கள்.

அவர்கள் கண்ணில் படாமல் இருக்க ஒண்டிவீரன் குதிரைக்கு தீனி போடுகின்ற காடியில் படுத்து கொண்டு தன் மீது புற்களை பரப்பிக் கொள்கிறார்.

இருட்டில் யாரென கண்டுபிடிக்க முடியாத சூழலில் காடிக்கு அருகில் ஒரு ஈட்டியை அறைந்து அதில் குதிரையை கட்டுகின்றனர் ஆங்கிலேய வீரர்கள்.

ஆனால் தரையில் அறைந்த ஈட்டி ஒண்டிவீரனின் கையுடன் சேர்ந்து தரையில் அறைந்தது.

ஒண்டிவீரன் அந்த வலியை பொறுத்துக்கொண்டார்.

வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஈட்டியில் இருந்து கையை எடுக்க முயல ஒண்டிவீரனால் முடியவில்லை.

மீண்டும் குதிரை கணைத்தால் ஆபத்து என உணர்ந்த ஒண்டிவீரன் தனது கையை தன் வாளாலேயே வெட்டிக்கொண்டு வெண்கல நகராவை ஒலித்து விட்டு குதிரையேறி புயல்வேகத்தில் புறப்படுகிறார்.

வெண்கல நகரா ஒலித்த சத்தம் கேட்டு ஆங்கிலேயே வீரர்கள் எதிரிகள் முகாமிற்குள் நுழைந்து விட்டார்கள் என எண்ணி பீரங்கிகளை இயக்க அது அந்த ஆங்கிலேயர்களையே தாக்கி அழித்தது.

அதன்பிறகு,

பூலித்தேவர் மறைந்தபிறகு ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தன் மக்களுடைய படைக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயரை எதிர்த்தார் ஒண்டிவீரன்.

பூலித்தேவரின் குடும்பத்தை பாதுகாத்தார் ஒண்டிவீரன்.

ஆங்கிலேயருக்கு எதிராக 11 மிகப்பெரிய போர்களை நடத்தியுள்ளார் ஒண்டிவீரன்.

வீரத்துடன் போரிட்ட ஒண்டிவீரன் தன் படையை தென்மலை போரில் வெற்றி அடைய வைக்கிறார்.

ஆனால் போர்க் காயங்களால் ஒண்டிவீரன் தென்மலை போர்க்களத்திலேயே மரணம் அடைகிறார்.



Rate this content
Log in

Similar tamil story from Action