நேர்மை எங்கே?
நேர்மை எங்கே?


என்ன வாட்ச்மேன்? இன்னைக்கு நம்ம பள்ளி அமைதியாயிருக்கு! என்றாள் பாட்டி.
ஆமாம்! இன்று காந்தி இறந்த நாள் இல்லையா!
அதுதான் காந்தி சிலைக்கு மாலை போட்டிருக்காங்களா?
ஏதோ அன்னைக்கு மட்டுமாவது காந்திக்கு மரியாதை கொடுக்கிறோம்னு சந்தோஷப்படணும்!
முறுக்குகளை வரிசையாக அடுக்கி வைத்தபடி குழந்தைகளின் வருகைக்காக பாட்டி காத்திருக்கத் தொடங்கினாள்.
நான் படிக்கிற காலத்துல இருக்கிறமாதிரி இருக்கா!
நீங்ககூடத்தான் கருகிப்போன முறுக்கை காசாக்கிடலாம்னு இப்படி ஒண்ணும் தெரியாத பசங்ககிட்டே வித்து காசாக்கிடலாம்னு இருக்கீங்க! அது தப்பா தெரியலையா?
நீகூடத்தான் வாட்சமேன் நைட் மது குடிக்க வர்றவங்களுக்காக பள்ளி வகுப்பறையைத் திறந்து விடறே!
அருகே இருந்த அரசு பள்ளி மாணவன் கிழிந்த சட்டையுடன் நான் இருக்கிறதைப் பார்க்காமல் இப்படி இரண்டு பேரும் ஓவரா பேசுறீங்களே! இது நியாயமா?
உன் வாயை அடைக்க ஏதாவது இலஞ்சம் கொடுத்தா போகுது! பாட்டி அந்த கொடுக்காப்புளி,இலந்தைப்பழம்,மாங்காய் இவனுக்கு பார்சல் கட்டு!
கார் மிக அருகில் வந்து நிற்கவே வாட்ச்மேன் பயந்து எழுந்து நின்று வணககம் சொன்னான்.
சார்! வணக்கம்!
உன் வணக்கமெல்லாம் இருக்கட்டும்! அப்துல்..நீ பதிவு பண்ண மொபைலை என்கிட்டே கொடுத்துட்டு கார்ல ஏறு! இவன் என் பையன். நான்தான் இவனை இங்கே படிக்க அனுப்பி வைத்தேன். நான் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக இருக்கலாம். அதுக்காக என் பையனை பெரிய பள்ளியில் சேர்க்க பிரியப்படலை!
இன்னைக்கு காலையில் இருந்தே அவன் சொல்லிட்டு இருந்தான். பள்ளி வாசல் முழுக்க பாட்டில் இருக்கு..இதைத் தவிர பள்ளி பசங்களுக்கு கண்ட எண்ணெயில் போடற முறுக்குகளை சாப்பிடறதுனால பசங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போகுதுன்னு சொன்னான்.அதைக்கண்டுபிடிக்கத்தான் இப்படி ஒரு செட்டப்...போலிசுல உங்க இரண்டுபேரையும் சொல்லி இருக்கேன். இன்னும் ஐந்து நிமிஷத்துல வண்டி வந்துடும்.இதுல வேற உள்ளே இருக்கிற பசங்களை சாதி பேரைச் சொல்லிவேற திட்டினியாமே! என்றபடி காரைக் கிளப்பினார் பள்ளிக் கல்வித்துறை அதிகாரி.