நாய்வால்
நாய்வால்


இங்கு உனக்கு இனி வேலை கிடையாது.
ஏன்? நான் என்ன தவறு செய்தேன்?
நீ எனது பகைவனிடம் பணி செய்தததற்காக உனக்கு இந்த தண்டனை.
அவர்கள் பெரிய இடத்துக்காரர்கள். அரசியல் செல்வாக்கு உளளவர்கள். அவர்களைப் பகைத்தால் வீடு புகுந்து ஆள்வைத்து அடிப்பார்கள்.
அப்ப அவர்களிடமே வேலைக்குச் செல்வதுதானே!
அடியாள்வேலை எல்லாம் வேண்டாம் . உழைத்து நாலு வாய் நிம்மதியாய் சாப்பிட்டால் போதும்.
அதனால்தான் உங்கள் வீடு இன்னமும் அடுத்தவேளைக்கு அல்லாடிக்கொண்டிருக்கிறது.
படித்திருந்தால் புத்தி இருக்கும்.
நீங்க சொல்லி நான் அதைக் கேட்கணுமா! படிப்புதான் மண்டையில் ஏற மாட்டேங்குதே!
தாய்மொழியில் படிக்கணும்...ஊர்பெருமைக்காக ஆங்கிலத்தில் படித்தால் அவ்வளவுதான்....
வேலை அதுக்குத்தானே கிடைக்குது..காப்பி அடிச்சாவது எழுதிடணும்...இலஞ்சம் கொடுத்தாவது வேலை வாங்கிடணும்...இது போதாதா!
கிராமம் ஏன் முன்னேறவில்லை என இப்போதுதான் எனக்குத் தெரிந்தது.....
நாய் வாலை நிமிர்த்த முடியாது...... நான் வரட்டுமா? என்று கேட்டபடி நகர்ந்தார் காந்தி.