KANNAN NATRAJAN

Abstract

3  

KANNAN NATRAJAN

Abstract

நாட்டுப்பற்று

நாட்டுப்பற்று

2 mins
817


புத்தகப் பரிந்துரை நேரம் பகுதிக்கு நான் கிளம்பணும்…

நீ எங்கேயும் போக வேண்டாம்மா…..

என்னுடன் விளையாடுங்கள்.

போடா! உன் கேரம்போர்டு பிடிக்கலைடா!

நீ ஜெயிச்சாதான் சும்மா இருப்பே!

இல்லைன்னா என்கூட சண்டை போடுவே…

வாழ்நாள் முழுவதும் புத்தகங்களுடன் பேசுவது என முடிவு கட்டிவிட்டீர்களா?

நீ பணிக்காக வெளிநாடோ ,அல்லது வேறெங்காவது போய்டுவே!

அப்ப நான் தனிமையாகத்தான் இருக்கவேண்டி இருக்கும்.

ஆனால் எனது புத்தகங்கள் எனது வாழ்நாளோடு பேசிக்கொண்டே இருக்கும்.

மனித மனங்களைவிட புத்தகங்களின் மனம் ரம்மியமானது தெரியுமா?

அது பணம் நம்மிடம் கேட்காது. நம் பொருட்களைத் தொடாது. நீ இப்படித்தான் செய்யவேண்டும், இங்கு செல்லவேண்டும் எனக் கட்டளை இடாது.

விருதுக்காகப் பரிந்துரை செய்யப்போகிறீர்களா,…..

அதெல்லாம் எனது சொந்த விஷயம். எப்படி சிறு பிள்ளைகளாகிய நீங்கள் இன்று பெரியவர் சொன்னபடி கேட்கவில்லையோ அதுபோல எனது சொந்த விஷயங்களைப் பேசக்கூடாது.

அம்மா ரொம்ப கோபமாக இருக்கிறீர்கள் போலத் தெரிகிறது.

பின்னே என்னடா!

இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கிக்கொடு என்கிறாய்! சரி என்றேன்.

இன்னமும் திருப்தி இல்லாமல் அவன் அங்கு இருக்கிறான்,இவன் இந்த பணி செய்கிறான் எனப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்.

படிக்கும்காலத்தில்தான் மதிப்பெண் எடுக்க விரட்டினீர்கள். இப்போது ஏனம்மா ஓட வேண்டும்?

பணம் இல்லையெனில் பிணம் தெரியுமா?

அதற்காகச் சொத்துகள் இருக்கும்போது கிடைத்த வேலை செய்தால் போதும். வெளிநாடு என்றால் போவேன்.

அதுதான் ஏனென்று கேட்கிறேன். இன்று புத்தகப் பரிந்துரைக்கு நான் பார்த்ததே இந்தமாதிரி கதைதான்.

வெளிநாட்டுமோகம் கொண்ட பையன் பெற்றவர்களை மறந்து செல்கிறான். அங்குள்ள வெளிநாட்டினர் அவனை வேலை செய்யவிடுவது இல்லை. இதனால் அவன் தாய்நாட்டிற்கே திரும்புகிறான். பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது. திரும்ப வந்த அவன் தாய்நாட்டில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அதை முன்னேற்றம் அடையச் செய்கிறான். இதுதானே!

படித்துவிட்டாயா?

அப்போதே படித்துவிட்டேன். வெளிநாட்டில் உள்ள சாலைகள்,சுத்தம்,தொழிற்சாலைகள் இங்கு கிடையாது. அப்புறம் ஏன் இங்கு இருக்கவேண்டும்?

இங்கு நல்ல குடிநீர், பசுமை சார்ந்த தானியங்கள், கனிமங்கள் கிடைக்கிறது.

ஆமா! ஆனால் விவசாயிகளுக்கு ஒன்றுமே சலுகை தர மாட்டார்கள். இப்பவே சாம்பார் வாட்டர்தான். அதைச் சுத்திகரிக்க ஃபாரீன்மாதிரி மிஷின்வேற வந்திருக்கு……..ஃப்ளாட் சிஸ்டம் வந்தால் இப்படித்தான்.

கனிமங்கள் கிடைத்தால் அன்னிய நாட்டினருடன் இலஞ்சம் கொடுத்து கைமாற்றிவிடுவார்கள். நமது பொருட்கள் குறித்து அவர்களுக்கே அக்கறை இல்லாதபோது நாட்டைப்பற்றி நாம் ஏன் அம்மா கவலைப்படவேண்டும்?

இராணுவத்தில் உன்னைச் சேர்க்கவேண்டும் என நான் நினைக்கிறேன். இராணுவவீரனும் மரங்களும் ஒன்றுதான்.

தனது உயிரையும் பொருட்படுத்தாது பனியிலும்,வெயிலிலும் நாட்டிற்காக இருக்கும் மனநிலை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வரவேண்டும்.

இந்த அட்டைப்படப்புத்தகத்தைப்பார்!

நாட்டிற்காக அன்னிய மண்ணில் கால்வைத்த வீரனின் முகத்தை!

ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கவேண்டும் என்பதை உணர்த்தத்தான் இந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

சரி தாயே! நான் வெளிநாடு செல்லவில்லை. இங்கேயே இருக்கிறேன்.

அதுசரி! இது மின் புத்தகமாயிற்றே! விருதுக்கான பரிந்துரை செய்கிறீர்களே!

அது நடைமுறையில் கிடையாதே!

பதினைந்து வருடங்களுக்கு முன் பழைய புத்தகங்களை ஸ்கேன் செய்து வைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. ஆனால் இப்போது மழை,வெள்ளம் என வந்ததால் பல புத்தகங்கள் காணோம்.மறு பதிப்பு பப்ளிஷர்ஸ் செய்ய யோசிக்கிறார்கள். இப்படி இருக்கும்போது நம்ம பக்த்துவீட்டு மாமி ஒரு அமைப்பு நடத்தறாங்க!

சிறந்த மின்புத்தகத்திற்கு விருது தர்றாங்க..இது ஆரம்பம்தானே!



 



Rate this content
Log in

Similar tamil story from Abstract