நானும் தலைவரு தான்
நானும் தலைவரு தான்
ஒரு குடும்பம், அம்மா பேரு லட்சுமி (50) வயசு , அப்பா பேரு ராஜேஷ்(54), முதல் பையன் பேரு பிரவீன் (25), ரெண்டாவது பையன் பேரு ராம்கி(24).
அம்மா, வீட்ட பாத்துக்குறாங்க. அப்பா ஒரு கம்பெனில யூனியன் லீடர் ah இருக்காரு, ரெண்டு மாசம் முன்னாடி அவர் லீடர் ஆனார், சாதாரணமா தன்னடக்கமான ஆளு தான் , ஆனா புதுசா வந்த பதவி இவர எப்படிலாம் ஆட்டி வைக்குதுன்னு பார்ப்போம். முதல் பையன் பிரவின் பெருசா படிக்கல, அவனோட அப்பா கம்பெனிலயே ஒரு சின்ன வேலையில இருக்கான். ராம்கி,வீட்ல சின்னவன், இவன் சாப்ட்வேர் என்ஜினீயர், அவன் என்ன சம்பளம் வாங்குறான்னு கூட வீட்டுக்கு தெரியாது.
ராம்கி அப்பா வீட்டுக்குள்ள நுழையுறாரு
ராம்கி அப்பா to ராம்கி அம்மா : ஏண்டி ஹால்ல, fan லைட் தேவ இல்லாம எரியுது.என் உழைப்ப தாண்டி நீங்க சொரண்டி சாபுடறீங்க
ராம்கி அம்மா : லைட் எறிஞ்சா, off பண்ணுங்க, நீங்க உழைக்குறீங்கனா, நாங்க வீட்ல உழைக்கலயா.
ராம்கி அப்பா, அம்மாவ அரைஞ்சிடுறாரு.
ராம்கி அப்பா : என்ன டி ஓவரா பேசுற, நான் என் கம்பெனி போனனா, எல்லாம் தலைவருன்னு சொல்லி நடங்குவாங்க.
ராம்கி அம்மா : வீட்டுலயும் நடுங்குனுமா
சொல்லிட்டு அழுதுட்டே போறாங்க.
ராம்கி ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு வரான், வீட்ல எல்லாரும் இருக்காங்க. ராம்கி கிட்ட அவங்க அம்மா, அவங்க அப்பா அடிச்சத போன்லயே சொல்லி இருப்பாங்க.
ராம்கி to ராம்கி அப்பா : ஆமா ஒரு சின்ன விஷயத்துக்கு எதுக்கு அம்மாவ அடிச்சீங்க, இன்னொரு தடவ கை வச்சீங்க கைய உடைச்சுடுவன். உங்க தலைவர் பதவி எல்லாம் வீட்டுக்கு வெளில வெச்சுக்கோங்க.
பிரவின் to ராம்கி : அத சொல்ல நீ யாரு டா, பல்ல தட்டிடுவேன்.
ராம்கி : ஒரு அடி கிட்ட வா டா பாக்கலாம்.
ராம்கி அப்பா : சபாஷ் டா பிரவின், ஏண்டி நீ உன் பையன வச்சு மிரட்டுனா, நான் என் பிள்ளைய வச்சு மிரட்டுவேன்.
ராம்கி அம்மா : ரெண்டு புள்ளைங்களையும் சண்ட போடா வச்சு பாக்க போறிங்களா.
ராம்கி அம்மா அழ ஆரமிக்க, வீடு அமைதி ஆச்சு.
ரெண்டு நாளு கழிச்சு எப்பவும் போல குடும்பத்துல எல்லாம் பேசுகிறாங்க.
ஒரு வாரம் கழிச்சு.
ராம்கி அப்பா வீட்டுக்கு மதியம் சாப்பிட வராரு.
ராம்கி அப்பா : என்ன டி இது.
ராம்கி அம்மா : சோத்த பாத்ததே இல்லையா.
ராம்கி அப்பா : திமிரு அதிகம் ஆகிடிச்சு உனக்கு, என்ன வெறும் சாம்பார் கூட்டு.
ராம்கி அம்மா : என்ன அது தானே இவளோ நாளா சாப்டுட்டு இருக்கோம்.
ராம்கி அப்பா : நான் ஆபீஸ்ல தான் ரெண்டு மாசமா லஞ்ச் சாப்புடுறன், எனக்கு கறி மீனு அது இதுனு பல variety ஆனா சாப்பாடு.
ராம்கி அம்மா : அப்போ ஆபீஸ்ல சோறு போடுறவங்களையே கல்யாணம் பண்ணிக்கோங்க.
ராம்கி அப்பா கோபமா சாப்டுட்டு, ஆபீஸ் கிளம்புறாரு.
நைட் ராம்கி வீட்டுக்கு வரான்.
எல்லாரும் வீட்ல சாப்பிட போறாங்க.
ராம்கி to ராம்கி அம்மா : மா , அப்பாக்கு சாப்பாடு வைக்காத, போய் ஆபீஸ்ல சாப்பிடடும், அங்க தான் கறி மீனு போடுவாங்க.
ராம்கி அப்பா : என்ன டா திமிரா, என்னோட கெத்து என்னானு என் கம்பனிக்கு வந்து பாரு.
ராம்கி : நீங்க இங்க பந்தா பண்றதுலயே தெரியுது, உங்க அல்ல கைங்க உங்கள எப்படி தாங்குறாங்கன்னு.
ராம்கி அம்மா : திரும்பவும் சண்டை வேணாம் சாப்பிடுங்க.
அடுத்த நாளு ஞாயிற்று கிழமை.
ராம்கி அம்மா to ராம்கி அப்பா: ஏங்க ஏன் இப்போ எல்லாம் சைக்கிள் ஓட்றதே இல்ல.
ராம்கி அப்பா : நீங்க தலைவர் ஆகிட்ட அப்பறம், சைக்கிள்ல போனீங்கனா நல்லா இருக்காதுன்னு என் கூட வேல செய்றவங்கல்லாம் சொன்னாங்க.
ராம்கி அம்மா : இதெல்லாம் ஓவரா இருக்குங்க, நீங்க என்ன சைக்கிள் எடுத்துட்டு போய் ரேஷன் கடைல, அரிசியா வாங்கிட்டு வர போறீங்க. exercise தான பண்ண போறீங்க
ராம்கி அப்பா : அதெல்லாம் உனக்கு புரியாது டி.
சாயங்காலம் ஆச்சு.
ராம்கி அப்பா வெளிய போய்ட்டு, வீட்டுக்குள்ள வராரு.
ராம்கி அப்பா : சைக்கிள் எங்க காணோம்.
ராம்கி : நீங்க தான் இனி ஓட்டமாட்டேன் சொல்லிட்டீங்கள.
ராம்கி அப்பா : அதுக்கு.
ராம்கி : ஒரு பிச்சைக்காரனுக்கு குடுத்துட்டோம்.
ராம்கி அப்பா : டேய் விளையாடாத.
ராம்கி : first வாங்காமட்டேன்னு தான் சொன்னான், இது தலைவர் ஓட்டுனதுனு சொன்ன உடனே வாங்கி கிட்டேன் பாருங்க.
ராம்கி அம்மா : ஏங்க, அவன் விளையாடுறான், பிரவின் சைக்கிள் எடுத்துட்டு போய் இருக்கான்.
அடுத்த நாள் ராம்கி ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்துடுறான், அவன் அப்பாவும் இருக்காரு வீட்ல.
ராம்கி சட்டைய ஐயன் பண்ணிட்டு இருக்கான்.
ராம்கி அப்பா : காட்டுப்பா நான் ஐயன் பின்னணி தரேன்.
ராம்கி : நீங்க இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டீங்களே.
கொஞ்சம் நேரம் கழிச்சு.
ராம்கி அப்பா to ராம்கி : இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் பா.
ராம்கி : சரி.
ராம்கி அப்பா : ஆபீஸ்ல கேக் வெட்டிட்டேன், வீட்ல கேக் வாங்கிட்டு வந்தா வெட்டிடுவேன்.
ராம்கி : ஓ அதுக்கு தான் ஐயன் பண்ணி தந்திக்கலா, சின்ன வயசுல இருந்து எங்களுக்கு ஒரு பர்த்டே கேக் வெட்டுனது இல்ல, எல்லா பசங்களும் கேக் வெட்டும் போது ஏக்கதோடு பாத்து இருக்கோம், இப்ப இவரு தலைவரு ஆகிட்டாறம் கேக் வெட்டுணுமா. போய் ஆபீஸ்லேயே இன்னொரு தடவ உங்க அடிமைங்க கிட்ட சொல்லி கேக் வெட்டிட்டு வாங்க, நான்லாம் வாங்கிட்டு வர மாட்டேன்.
பிரவின் கேக் வாங்கி, அவங்க அப்பா வீட்ல வெட்டுவாரு. ராம்கி வீட்ல இருக்கமாட்டான்.
அடுத்த நாள்
ராம்கி அம்மா to பிரவின் : டேய் நேத்து என்ன அப்பாவ ஹாப்பி பர்த்டே தலைவரேன்னு சொல்ற.
பிரவின் : இல்ல மா அவர் சந்தோஷ படுவார்னு தான் மா.
ராம்கி அம்மா : அவரே தலைவர் வெறியில ஆடிட்டு இருக்காரு, நீ வேற ஏத்தி விடுறியா.
பிரவின் : இல்ல மா இனி அப்படி கூப்பிடுல.
ராம்கி அப்பா to ராம்கி அம்மா: இன்னைக்கு என்ன நடந்துனு கேளு டி கம்பெனில.
ராம்கி அம்மா : என்ன நடந்துச்சு.
ராம்கி அப்பா : கம்பெனில ரொம்ப நாளா பெட்ரோல் திருடன, அவன் கண்டுபிடிச்சு ரெண்டு அடி விட்டேன், அவன் அழுதுட்டான். இன்னும் அந்த வலு அப்படியே இருக்கு டி arms ah தொட்டு பாரேன் எவ்ளோ ஸ்ட்ரோங் ah இருக்குனு.
ராம்கி அம்மா, ராம்கிய பாத்து சிரிச்சிட்டே இருக்காங்க.
ராம்கி அப்பா, ராம்கியா பேங்க் வரைக்கும் ஒரு வேலைய கூட்டிட்டு போறாரு அவர் பைக்ல வச்சு. போற வழியில பைக் ஒருத்தன் மேல பைக்க மோதிடுறாரு.அவன் bulk ah இருக்கான் பாக்குறதுக்கு. ராம்கி, "அப்பா நீங்க தான் ஆபீஸ்ல ஒருத்தன அடிச்சீங்களே, அதே மாதிரி இந்த ஆளையும் சிங்கள்ஸ் செஞ்சி, உங்க வலுவ காட்டுங்க, நான் போறேன் "ன்னு சொல்லிட்டு கிளம்பிடுவான்.
ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்கு வரான் ராம்கி .
ராம்கி அம்மா to ராம்கி : டேய் நீ பண்ணது உனக்கே ஞாயமா படுதா, உங்க அப்பாவ இப்படி அடிவாங்க வச்சிட்டியே.
ராம்கி : ஹா ஹா அடிவாங்குனாரா. ரொம்பவே வலுவான ஆளுன்னு உன் கிட்ட பீலா உட்டாருல, அவங்க ஆபீஸ்ல ஒருத்தன் இவர் கிட்ட அடிவாங்குனா அது இவருக்கு இருக்க பதவினால வர பயம், இவர் மேல இருக்க பயம்னு தப்பா நினைச்சுகிறாரு, அது நாளா அடி வாங்கி புரிஞ்சிக்கிட்டும் விட்டுட்டு போய்ட்டேன்.
ராம்கி அம்மா : கோபமா இருக்காரு, போய் ரூம்ல தூங்கிடு.
அடுத்த நாள் ராம்கி அப்பா, வீட்டுக்கு ஒரு 15 லட்சம் எடுத்துட்டு வராரு.
ராம்கி அம்மா : ஏதுங்க இவளோ காசு
ராம்கி அப்பா : கம்பெனி ல பெரிய அதிகாரிங்கள தெரியும், அவங்க மூலமா புது ஆளுங்களுக்கு வேல வாங்கி தரேன்னு என் கம்பெனி ஆளுங்க கிட்ட வாங்குன காசு.
ராம்கி அம்மா : கம்பெனி ஆளுங்க கிட்ட வாங்குனீங்களா.
ராம்கி அப்பா : கம்பெனி ஆளுங்களோட சொந்தக்கார பசங்களுக்கு வேல வாங்கி தரேன் டி.
ராம்கி அம்மா : சரி சரி. காச பத்தருமா வைங்க.
அடுத்த நாள், வீட்டுக்கு ராம்கி அப்பாவோட friend வராரு
ராம்கி அப்பா friend to ராம்கி : தம்பி தலைவர் இருக்காராப்பா.
ராம்கி : தலைவருனு பேர்ல இங்க யாரும் இல்ல, பக்கத்து வீட்ல கேட்டு பாருங்க.
அப்பா friend : விளையாடாத தம்பி ராஜேஷ் சார கூப்புடுங்க.
ராம்கி : இப்படி கூப்பிட்டு பழகுங்க, தலைவர் தலைவர்னு ஏத்தி விட்டுட்டு.
ராம்கி அப்பா, ராம்கி பேசுறது எல்லாம் கேட்டு கோபமா ஆகி, ராம்கிய அறஞ்சிடுறாரு, என்ன தலைவர்ன்னு தான் கூப்பிடுவாங்க, இஷ்டம் இருந்த வீட்ல இரு, இல்லனா கிளம்புன்னு சொல்ல, உடனே ராம்கி வீட்ட விட்டுட்டு போய்ட்டான். ராம்கி அம்மா தடுத்து பாத்துட்டு அழ ஆரமிச்சிடுறாங்க.
அடுத்த நாள், இவங்க வீட்டுக்கே ஒரு அதிர்ச்சி காத்துட்டு இருந்தது. பிரவின் சூதாட்டத்தில,20 லட்சம் கடன் அவங்க ஏரியால இருக்கவங்கல சுத்தி வாங்கி இருக்கான். கடன் வாங்குனவங்க எல்லாம் வீட்டுல வந்து கத்த ஆரமிக்குறாங்க. ராம்கி அம்மாவும்,அப்பாவும் பதட்டம் அடையிறாங்க. வேற வழி இல்லாம பணத்தை புரட்டி கடன் அடைச்சிடுறாங்க.
அடுத்த நாள்.
ராம்கி அப்பா கம்பெனில இருக்காங்க.
ராம்கி அப்பா கிட்ட கம்பெனி ஆளு ஒருத்தர் பேசுறாரு.
கம்பெனி ஆளு : தலைவரே, வேல வாங்கி தரேன்னு,1 லட்சம் என் கிட்ட வாங்குனீங்களே, இன்னைக்கு வேல கிடைச்சிடும் சொன்னிங்க, வேல பத்தி எதுமே பேச மாற்றிங்க.
ராம்கி அப்பா : சொதிப்பிகிச்சுயா, வேல வாங்க முடியில யாருக்கும், மேல் அதிகாரி கால வாரிட்டான்.
கம்பனி ஆளு கெட்ட வார்த்தைல திட்டிடுறான், சில அல்ல கைங்க ராம்கி அப்பா பக்கத்துல இருந்தவங்க, அந்த ஆளு கெட்ட வார்த்தை பேசுன உடனே அடிச்சிடுறாங்க.அது பூதாகரமா ஆகி காசு கொடுத்தவங்க எல்லாம் ராம்கி அப்பாவை அடிச்சிடுறாங்க. பெரிய பிரெச்சனை ஆகிடுச்சு.
ராம்கிக்கு இந்த விஷயம் தெரிஞ்சு, காசு கொடுத்தவங்களுக்கு, நான் காச திருப்பி தரேன் வாக்கு கொடுக்குறான்.
4 நாள் கழிச்சு ராம்கி அவன் வீட்டுக்கு போறான்,15 லட்சம் எடுத்து அவங்க அம்மா கிட்ட கொடுக்குறான். அதை கேட்ட ராம்கி அப்பா வெளிய ஓடி வந்து அவன் கைய்ய பிடிச்சிக்கிட்டு அழறாரு.
ராம்கி அப்பா to ராம்கி : ரொம்ப நன்றி பா. என்ன மன்னிச்சுடு இந்த லீடர் பதவி வந்துதுல இருந்து நான் நானாவே இல்ல, உங்கள ரொம்பவே கஷ்ட படித்துட்டேன்.வேலைல கிடைக்கிற மரியாதைய, வீட்ல இனி எதிர் பாக்கமாட்டேன். வீட்ல இருக்கவங்க தான் கஷ்டத்லயும் நம்ம கூட இருப்பாங்க.
ராம்கி : விடு பா.
ராம்கி அப்பா : ஏது பா இவளோ காசு.
ராம்கி : இவளோ நாள் வேல செஞ்ச சேவிங்ஸ்.
ராம்கி அப்பா : மறுபடியும் மன்னிச்சுடு பா.
ராம்கி : விடுங்க.
