நாலு பேருக்கு நன்மை
நாலு பேருக்கு நன்மை
அண்ணா! எனக்கு ஒரு மொபைல் வாங்கித் தர்றீங்களா?
நீ மொபைல் கேட்க மாட்டாயே! எனக் கேட்டுக்கொண்டே பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் ஈஸ்வர்.
ஆமாம்! இப்போது தேவைப்படுகிறது. எனக்கு ஒரு வலைத்தள முகவரி கிடைத்துள்ளது. அதில் பதிவேற்றும் வீடியோக்களுக்கு பரிசு உண்டு.
உன்னிடம் இல்லாத பரிசுகளா?
இது பணம். அது இந்த கொரோனா நேரத்தில் தேவைதானே! லேப்டாப்பில்,மேசைக்கணினியில் ஏற்றக்கூடாதாம். காலத்திற்குத் தகுந்த கோலம். செயலியில் மட்டும்தான் போடணுமாம்.
அப்பதானே நம்ம மொபைல் பற்றி எல்லோருக்கும் தெரியும்.நம்ம பர்சனல் முழுவதும் தெரியற அளவு செயலிகள் வந்தாச்சு. தேவையில்லாமல் மொபைல் பயன்படுத்தாதே!நம்ம வீடியோ எடுக்கிறது நம்ம மனம் சந்தோஷமா இருக்கிறதுக்குத்தான். எல்லா வலைதளங்களும் புகழுக்காக மட்டும் வலைதளங்கள் நடத்துவது கிடையாது. நீங்கள் அப்லோட் செய்யும் ஒவ்வொரு விடியோவும்,புகைப்படமும் விற்கப்படுகின்றன என்பது தெரியுமல்லவா!
நீங்கள் மட்டும் பளு தூக்கும் பயிற்சி எதற்காகச் செய்கிறீர்களாம்? பேப்பரில் ஜெயித்தால் படம் வரும்..பணம்வரும்னுதானே! அப்ப நான் பெண். என்னால் வெளியில் போக முடியாது. அதனால் நெட்டில் போடுகிறேன். பேப்பரில் போட்டு பரிசு வாங்க மட்டும் அந்த போட்டியல்ல! ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக நடத்தப்படும் போட்டி அது.புரிந்ததா! போட்டிகள் நடத்தினால் நாலு பேருக்கு நன்மை செய்யறதா மட்டும் இருக்கணும்.
