Arul Prakash

Romance

4.0  

Arul Prakash

Romance

மூணு நாளில் காதல்

மூணு நாளில் காதல்

8 mins
530


வருண் and மாயா தான் ஹீரோ herione இந்த கதைக்கு. இவங்க ரெண்டு பேரோட common friend கார்த்திக்னு ஒருத்தர், வருணும் மாயாவும் சிங்கிள்ஸா இருக்கறதுநாலவும், அவங்க ரெண்டு பேரு கேரக்டர்க்கும் செட் ஆகும்னு, வருண், மாயாவ மீட் பண்ண சொல்லறாரு கார்த்திக்.முதல்ல ஒரு ஹோட்டல்ல மீட் பன்றாங்க.அவங்க மீட் பண்ணி ஒருத்துற ஒருத்தர் பிடிக்குதான்னு பாப்போம் வாங்க.


மாயா, வருண் காக ரொம்ப நேரம் வெயிட் பண்ரா ஹோட்டல்ல.


வருண் வந்துட்டான்.


மாயா : என்ன இது டிரஸ், மேட்ச் ஆகவே இல்ல.


வருண் : உன் டிரஸ் கூட தான் dark green and yellow. very poor dress selection.


மாயா : பொண்ணுங்க டிரஸ் பத்தியே பேசுறியா.


வருண் : இது என்ன கதையா இருக்கு, நீங்க எங்க டிரஸ் பத்தி பேசலாம், நாங்க உங்க டிரஸ் பத்தி பேச கூடாதா.


மாயா : ஆரம்பமே நம்ம ரெண்டு பேருக்கும் அசத்தலா இருக்கு.


வருண் : சரி எதுனா ஆர்டர் பண்ணுங்க.


மாயா : இதெல்லாம் பசங்க தான் பண்ணனும்.


வருண் : இதுல கூடவா ஆம்பள பொம்பள.


மாயா : பின்ன கௌதம் மேனன் படம் லாம் பாத்தது இல்லையா, பெண்ணுக்காக ஹீரோ கதவ திறந்து விடுவாரு, பொண்ணோட கால தொடுவாரு, குறிப்பா ஹோட்டல்ல சாப்டா ஹீரோ தான் பில்ல கொடுப்பாரு.


வருண் : சாரி நான் டைரக்டர் பாலா fan.


மாயா : விளங்கும்.


ஒரு வழியா சாப்பாட ஆர்டர் பண்ணுறாங்க.


மாயா : நீயெல்லாம் கண்டிப்பா ஒரு பொண்ணு கூட பேசி இருக்க மாட்டியே.


வருண் : பாய்ஸ் ஸ்கூல், பாய்ஸ் காலேஜ், ஆபீஸ்லயும் பொண்ணுங்க இல்ல.


மாயா : நினைச்சேன்.


வருண் : உனக்கு எதுனா லவ் இருந்து இருக்கணுமே.


மாயா : 2 லவ் இருந்தது, ஸ்கூல்ல ஒன்னு, காலேஜ்ல ஒன்னு.


வருண் : ஏன் ஆபீஸ்ல யாரையும் லவ் பண்ணல.


மாயா : எவனும் பாக்க நல்லா இல்ல.


வருண் : ஓ பாக்க நல்லா இருந்தா தான் லவ் ah.


மாயா : ஓ அவளோ நல்லவரா நீங்க, பாக்க நல்லா இல்லனாலும் லவ் பண்ணுவீங்க.

பாக்க நல்லா இருக்க போயி தான், என்னையே மீட் பண்ண ஒத்துக்கிட்ட.


வருண் : எப்படி இருந்தாலும் பரவா இல்லனு தான் ஒத்துக்கிட்டேன்.


மாயா : ஒரு பேச்சுக்காவது, நான் நல்லா இருக்கேன் சொல்றியா, உனக்கு romance சுட்டு போட்டாலும் வராது.


வருண் : சரி நமக்குள்ள செட் ஆகாது போல, எனக்கு உன்ன பிடிக்கல னு கார்த்திக் கிட்ட சொல்லிடுறேன்.


மாயா : ஐ, அது எப்படி, நான் தான் உன்ன reject பண்ணுவேன்.


வருண் : இதுல கூடவா, சரி நீயே reject பண்ணு.


மாயா : இன்னைக்கு ஒரு நாள் full ah உன் கூட டைம் spend பண்ண சொல்லி கார்த்திக் சொல்லி இருக்கான் 


வருண் : சரி அதுக்கு.


மாயா : அதுக்குன்னு உன்கூட ஒரு நாள் எல்லாம் என்னால சுத்த முடியாது. நான் friend கூட சுத்திட்டு வீட்டுக்கு போயிடுறேன் 


வருண் : உன் இஷ்டம்.


மாயாவும் வருணும் ஹோட்டல்ல இருந்து வெளிய வராங்க, ஒருத்தன் மாயவ பாத்து கிட்ட வரான். அது மாயாவோட ex boy friend.


அந்த ex boy friend to மாயா : என்ன வேற ஒருத்தன பிடிச்ட்ட போல இருக்குனு சொல்லிட்டு போயிடுறான்.


மாயா முகம் மாறிடுத்து, வருண் போய் மாயா கிட்ட என்ன ஆச்சினு கேட்குறான். மாயா அழுகுறா.


வருண் போய் அந்த ex boy friend ah அடிச்சுடுறான்.


மாயா முகத்துல இப்ப தான் கொஞ்சம் சிரிப்பு வருது.


மாயா to வருண் : என்ன சண்டை லாம் போடுவியா.


வருண் : எனக்கு பொண்ணு கூட பேசி தான் பழக்கம் இல்ல, பசங்க கூட சண்டை போட்டு பழக்கம் இருக்கு. 


மாயா : நைஸ்.


வருண் : ஓகே bye.


மாயாக்கு வருண இப்ப கொஞ்சம் பிடிக்க ஆரமிக்குது.


மாயா வருண்க்கு கால் பண்ரா


மாயா to வருண் : முதல்ல சாரி, இன்னைக்கு நான் உங்க கிட்ட பேசின விதத்துக்கு.


வருண் : பரவா இல்ல விடுங்க.


மாயா : நம்ம ஏன் ஒரு மூணு நாள் பேசி நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகுதான்னு பார்க்க கூடாது.


வருண் : உன்னோட ex ah அடிச்சது நாள ஹீரோயிசத்துல பீல் ஆகிட்ட போல.


மாயா : அது மட்டும் இல்ல, எனக்கு என்னமோ செட் ஆக வாய்ப்பு இருக்கோனு தோணுது.


வருண் : அப்போ சரி. அடுத்த மூணு நாள் பேசி பாப்போம்.


அடுத்த மூணு நாள்ல இவங்க ரெண்டு பேருக்கும் லவ் வருதான்னு பாப்போம் .


 Day 01: (போதையால் தெரிந்த உண்மை )


வருண் மாயாவ பார்க்க வந்துட்டான், பைக்ல.


மாயா : நான் ஒன்னு சொன்ன தப்பா நினைச்சிக்க மாட்டியே.


வருண் : சொல்லு பா.


மாயா : உனக்கு நிஜமாவே டிரஸ் செலக்ட் பண்ண தெரியல.


வருண் : இப்ப என்ன பண்ணலாம்.


மாயா : நேரா வண்டிய டிரஸ் கடைக்கு விடு.


வருண் : ஓகே.


டிரஸ் செலக்ட் பண்ணி தந்துடுறா மாயா.


மாயா : இப்ப தான் இந்த டிரஸ்ல சூப்பரா இருக்க.


வருண் : தேங்க்ஸ்.


மாயா : நான் எப்படி இருக்கேன்.


வருண் : ஓகே.


மாயா : உனக்கு ரொமான்ஸ் சுட்டு போட்டாலும் வராது. ஒரு பொண்ணு எப்படி இருக்கனு கேட்டா, வர்ணிச்சு தள்ள தேவை இல்லையா.


வருண் : இனிமே பாருங்க மேடம்.


மாயா : பாக்க தானே போறேன். இப்ப எங்க போறோம்.


வருண் : என் நண்பன் விக்ரம மீட் பண்ண போறோம், அவன் ரூம்ல.


மாயா : டன்


ரூம் கதவ தொறந்தா, விக்ரம் தண்ணி அடிச்சிட்டு இருக்கான்.


வருண் to விக்ரம் : டேய் என் friend ah கூட்டிட்டு வரும் போது தானா தண்ணி அடிச்சிட்டு இருப்ப.


விக்ரம் : சாரி மச்சி, சாரி சிஸ்டர்


மாயா : பரவா இல்ல விடு வருண்.


வருண் : என்ன நடக்க போகுதோ, அவன் குடிச்சா உளறுவான்.


மாயா : பரவா இல்ல.


வருண் to விக்ரம் : ஒரு பொண்ணு முன்னாடி சரக்கு அடிச்சிக்கிட்டு, எடுத்து வை டா அத.


மாயா : ஏன் ஒரு பொண்ணு முன்னாடி சரக்கு அடிச்சா என்ன.


விக்ரம் : அதானே.


மாயா : பொண்ணுங்களே சரக்கு அடிக்கற காலம் இது.


விக்ரம் : அதானே.


வருண் to மாயா : நீ சரக்கு அடிப்பியா.


மாயா : ஹ்ம்ம் எப்பயாச்சு.


வருண் ஷாக் ஆகி பாக்குறான்.


மாயா : என்ன ஷாக் ஆகுற, சரக்கு அடிக்க கூடாதா.


வருண் : அடிக்கலாம் மா அடிக்கலாம். நாங்க மிடில் கிளாஸ் இதுலாம் பழகிக்க நேரம் ஆகும், அவ்ளோ தான்.


விக்ரம் : இப்ப ஒரு ரவுண்டு போடுறிங்களா.


மாயா : நோ நோ.


மாயா to விக்ரம் : வருண பத்தி எதாவது சொல்லுங்க.


வருண் : ஹே அவன் குடிச்சி இருக்கான்.


மாயா : அதுனால தான் அவன் கிட்ட கேட்குறேன்.


வருண் : இன்னைக்கு நான் என்ன கதி ஆக போறேனோ.


விக்ரம் to மாயா : வருண் பத்தி என்ன தெரிஞ்சக்கணும்.


மாயா : வருண் ஒரு virgin ah.


விக்ரம் : first ball ஏ சிக்ஸர்.


மாயா : சொல்லுங்க.


விக்ரம் : இல்ல.


மாயா : ஓ மிஸ்டர் வருண், பலே ஆளு தான் நீங்க.


விக்ரம் : யாருனுலாம் கேட்க கூடாது.


மாயா : அது அனாவிஷயம்.


விக்ரம் : அடுத்த கேள்வி.


மாயா : வருண் சரக்கு அடிப்பானா.


விக்ரம் : அவன் teatotaller.


மாயா : ஓகே. இந்த லவ் எதாச்சி இருந்துதா.


விக்ரம் : எஸ் பிரேமானு ஒரு பொண்ணு மேல லவ் இருந்துச்சு, டபுள் சைடு.


மாயா : ஓ நைஸ்.


வருண் to மாயா : போதும் பா இதுக்கு மேல வேணாம்.


வருண் மாயாவ கூட்டிட்டு ரூம் விட்டு வெளிய போயிடுறான்.


வருண் : என்ன பா இப்படி பட்ட கேள்விலாம் கேட்குறீங்க.


மாயா : உன்னோட உண்மைலாம் தெரிஞ்சிடிச்சில.


வருண் : ஆமா virgin இல்ல.


மாயா : அது என் பிரச்சனை இல்ல, லவ் பண்ண விஷயத்தை மறைச்சு இருக்க. பொண்ணு கிட்டயே பேசுனது இல்லனு சொன்னியே டா 


வருண் : நான் லவ் பண்ண பொண்ணு, காசுக்காக ஒரு 50 வயசு ஆள லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டா. இத எப்படி வெளிய சொல்லுவேன்.


வருண் கண் கலங்கிடுறான் 


மாயா : ஓகே பீல் பண்ணாத. நீ எதுனா சொல்லணும்ன்னு நினைச்சு ஓபனா சொல்லு.


வருண் : ஓகே தேங்க்ஸ்.


     Day 02 : பாட்டியின் லூட்டி.


வருணும் மாயாவும் அன்னைக்கு நாள ஸ்டார்ட் பன்றாங்க. மாயாவுக்கு அவங்க பாட்டி கிட்ட இருந்து கால் வருது.


மாயா : பாட்டிக்கு உடம்பு சரி இல்ல.நம்ம போய் அவங்கள பாக்கலாம்.


வருண் : சரி போலாம்.


மாயா : சாரி நம்மளோட ரெண்டாவது நாள், என்னால சொதப்பல்.


வருண் : பரவா இல்ல, போலாம்.


மாயாவும் வருணும், பாட்டி வீட்டுக்கு போய்ட்டாங்க.


மாயா to பாட்டி வீட்டு வேலைக்காரமா: என்ன மா பாட்டிக்கு உடம்பு சரி இல்லையாமே.


வேலைக்காரமா : அதெல்லாம் ஒன்னும் இல்ல மா. உங்கள பாக்க தான், அப்படி ஒரு நாடகம்.


மாயா : ஓ சரி நான் பாத்துக்கிறேன்.


மாயா to வருண் : பாட்டிக்கு கண்ணு தெரியாது, இந்த வேலைக்காரங்க தான் அவங்கள பாத்துப்பாங்க. பாட்டி என்ன வர வைக்க, பொய் சொல்லி இருக்கு.


வருண் : பரவலா விடு.


மாயா : பாட்டி எப்படியும் என் கல்யாணம் பத்தி தான் பேசும், நீ இருக்கறது சொல்ல வேணாம் surprise ah இருக்கட்டும் பாட்டிக்கு லேட்டா சொல்றேன்.


வருண் : ஓகே பா.


மாயா to பாட்டி : பாட்டி எப்படி இருக்க.


பாட்டி : எனக்கு கால் தான் வலிக்குது மா.


மாயா : எங்க பார்ப்போம் (கொஞ்சம் நேரம் கால அமுக்கி பாக்குறா ). உனக்கு கால் வலியும் இல்ல, ஒன்னும் இல்ல,நீ என்ன பாக்க தான் பொய் சொல்லி இருக்க.


பாட்டி : ஆமா டி பொய் தான் சொன்னேன், உன்ன பாக்க தான். அப்பறம் ரெண்டு நாள் முன்னாடி எதோ பையன புடிச்சிருக்குனு போன் பண்ணியே.


வருண் ஷாக்கா பாக்குறான் 


மாயா : பாட்டி சும்மா இரு.


பாட்டி : எதோ பேரு வருண்னு தான சொன்ன.


வருண் முகத்துல சந்தோஷம்.


மாயா : பாட்டி கொஞ்சம் நிறுத்து. என் friend கூட வந்து இருக்காரு.


வருண் : பாட்டி நான் வருண்.


பாட்டி : ஓ ரெண்டு பேரும் செட் ஆகிட்டீங்களா.


மாயா : பாட்டி நாங்க friends தான்.


பாட்டி : ஓ அப்படியா, ஓகே ஓகே.


பாட்டி to மாயா : அந்த சரக்க எடுத்துட்டு வாடி.


வருண் : பாட்டி நீங்க சரக்கு அடிப்பீங்களா.


பாட்டி : ஏன் வயசு பொண்ணு குடிச்சாலும் ஜட்ஜ் பண்றிங்க, வயசானவ குடிச்சாலும் ஜட்ஜ் பண்றீங்க, நான் தூக்கம் வரதுகாக குடிக்கிறேன். வயசானவ இல்ல.


வருண் : சரி பாட்டி.


பாட்டி : ஏண்டி மாயா, நீ ஒன்னும் குடிக்கறது இல்லையே.


மாயா : நோ பாட்டி, நம்ம குடும்பத்துல, வயசு பொண்ணுங்க எப்போ குடிச்சு இருக்கோம், உன் வயசு ஆகறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் குடிக்கறதுக்கு.


வருண் மாயவ பாத்து சிரிக்கிறான்.


பாட்டி : சரி டி நீங்க பாத்து வீட்டுக்கு கிளம்புங்க.


வருணும் மாயாவும் வீட்டுக்குள்ள நடந்து வராங்க.


மாயா : சாரி பா, பாட்டியால இன்னைக்கு உன்ன இங்க டைம் spend பண்ண வச்சுட்டேன்.


வருண் : எனக்கு வந்ததுல லாபம் தான்.


மாயா : என்ன லாபம்.


வருண் :மூணு நாளுல தெரியவேண்டியது, இன்னைக்கே, தெரிஞ்சிடிச்சி.


மாயா :ஓ பாட்டி சொன்னதா. எனக்கு இன்னும் உன்ன பிடிக்கல.


வருண் : நம்பிட்டேன்.


மாயாவும் வருணும் ஒருத்தர ஒருத்தர் பாத்து சின்னதா சிரிச்சுகிறாங்க.


மாயா : நாளைக்கு எத்தனை மணிக்கு ரெடியா இருக்கட்டும்.


வருண் : ஷார்ப் நைன்.


மாயா : டன் 


        Day 03 : கடைசி நாள்


வருண் to his friend விக்ரம் : மச்சி நான் லவ் propose பண்ணலாம் னு இருக்கேன் மாயா கிட்ட.


விக்ரம் : அவளுக்கு தான் உன்ன புடிச்சிருக்கு இல்ல, அவளே சொல்லட்டும் டா.


வருண் : இதுல என்ன இருக்கு, நான் சொன்னா என்ன, அவ சொன்னா என்ன.


விக்ரம் : ஓகே டா ஆல் தி பெஸ்ட்.


மாயா to her friend ரம்யா : நான் என் லவ் ah வருண் கிட்ட சொல்ல போறேன் இன்னைக்கு.


ரம்யா : congrats டி.


வருணும் மாயாவும் ஒருத்தர ஒருத்தர் propose பண்ணிக்க ஒரு ஹோட்டல்ல மீட் பன்றாங்க.


வருண் : இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு 


மாயா : தேங்க்ஸ் டா, இன்னைக்காவது சொல்லணும்னு தோணுச்சே.


வருண் : எனக்கு ஒன்னு சொல்லணும்.


மாயா : எனக்கும் ஒன்னு சொல்லணும்.


வருண்க்கு கால் வருது. வருண் அம்மா call பன்றாங்க.


வருண் to வருண் அம்மா : சொல்லு மா கிளம்பிட்டியா, பாத்து போ,மாத்திரைலாம் எடுத்து கிட்டியா, ஜாக்கிரதை.


மாயா to வருண் : யாரு போன்ல.


வருண் : அம்மா பா.


மாயா : இன்னைக்கு உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.


திரும்பவும் வருண் அம்மா கிட்ட இருந்து call வருது


வருண்: சரி மா, நீ பாத்து போ. sweater லாம் எடுத்து கிட்டியா.


போன் கட் பண்ணிடுறான் வருண்.


வருண் to மாயா : சொல்லு, எதோ சொல்ல வந்தியே.


மாயா : என்ன உங்க அம்மா அடிக்கடி போன் பண்ணிட்டே இருக்காங்க.


வருண் : ஆமா பா, ஊட்டிக்கு போறாங்க.


மாயா : ஊட்டிக்கு தான.


வருண் : முதல் தடவ தனியா போறாங்க.


மாயா : ரொம்ப பாத்து போக சொல்லி சொல்ற, சரியான அம்மா புள்ளையா இருப்ப போல.


வருண் : அம்மா புள்ளைனா.


மாயா : இந்த அம்மா பேச்சை மட்டும் கேட்குற பசங்க. பொண்டாட்டிய,அம்மா பேச்சு கேட்டு கொடும படுத்துற பசங்களா இருப்பாங்க 


வருண் : பொண்டாட்டியும் அம்மாவையும் balance பண்ண தெரியும் எனக்கு 


மாயா : ஐயோ ரெண்டு தடவ கல்யாணம் ஆணவ மாதிரி பேசுற.


வருண் : நீ கூட தான் நாலு தடவ கல்யாணம் ஆனா மாதிரி பேசுற.


மாயா : கல்யாணம் ஆன பிறகு அம்மா சைடா , பொண்டாட்டி சைடா.


வருண் : அம்மா சைடு தான் first, இவளோ நாள் வளத்தவங்கள விட்டுட்டு என்னால வர முடியாது.


மாயா : கல்யாணம் ஆனா அது தான் உன்னோட பேமிலி.


வருண் : அப்படி நினைக்கிற மாதிரி பொண்ணு எனக்கு வேணாம் டி, உண்ணலாம் கல்யாணம் பண்ணுருவன் வாழ்க்கையே போச்சு. இப்பவே குடும்பத்தை பிரிக்க பாக்குற,குடிக்காரி, உங்க அப்பன் உன்னாலேயே வீட்டு விட்டு ஓடி பொய் இருப்பான்.


மாயா : இன்னும் ஒரு வார்த்தை பேசுன அறஞ்சிடுவேன்.


மாயா propose பண்ண கொண்ட வந்த gift ah தூக்கி போட்டுட்டு போறா.


நைட் 8 மணிக்கு வருண் அம்மா, மாயாக்கு போன் பன்றாங்க


வருண் அம்மா to மாயா : நான் வருண் அம்மா பேசுறன் மா.


மாயா : மா சொல்லுங்க.


வருண் அம்மா : வருண் உங்களுக்கு ரெண்டு பேரோட சண்டையை பத்தி சொன்னா.


மாயா : மா எதோ கேட்க போய் எங்கயோ போய் முடிஞ்சுது, எங்க அக்கா மாமியார் கொடுமைல சிக்குனா, அதுனால நான் உஷாரா இருக்கறதா நினைச்சு இப்படி பேசிட்டேன். என்ன தப்பா நினைக்காதீங்க.


வருண் அம்மா : நீயும் என் பொண்ணு போல தான், வருண் கிட்ட பேசு.அவன் ரொம்ப வருத்தமா இருக்கான். அவன் இன்னைக்கு உன்கிட்ட propose பண்ண தான் வந்தான்.


மாயா : நானும் அவன்கிட்ட propose பண்ண தான் வந்தேன்.


வருண் அம்மா : அத அவன் கிட்டயே சொல்லுமா, அவனும் conference கால்ல தான் இருக்கான்.


மாயா : ஐயோ மா என்ன இப்படி பண்ணிட்டீங்க, அவன் இருக்கானா.


வருண் அம்மா : நான் கட் பண்ணிடுறேன் நீங்க ரெண்டு பேரும் கால் பண்ணி பேசிக்கோங்க.


மாயா : ஓகே மா.


வருண் மாயாக்கு கால் பன்றான்.


வருண் to மாயா : ஹலோ.


மாயா பேசாம இருக்கா.


வருண் : சாரி சாரி.


மாயா : நான் குடிகாரி பா, எங்க அப்பா என்ன பாத்து தான் ஓடி போய்ட்டாரு, என்கிட்ட ஏன் பேசுற.


வருண் : சாரி சாரி. சரி என் proposal gift எங்க.


மாயா : அத எங்கையோ தூக்கி அடிச்சுட்டேன்.


வருண் : உன்னது சீப்பான gift அதுனால தூக்கி அடிச்சிட்ட. நான் அப்படி அடிக்க முடியாது.


மாயா : நாங்க சீப்பான gift வச்சி இருக்கோம், நீங்க காஸ்லியான gift வச்சி இருக்கீங்க.


வருண் : ஐயோ திரும்பவும் சண்டையை ஆரமிக்காத, நான் உன் போட்டோ எல்லாம் collage மாதிரி பண்ணி ஒரு gift வச்சி இருந்தேன், அதுனால காஸ்லி gift சொன்னேன்.


மாயா : ஓ நைஸ். இப்போ சொல்லு அந்த மூணு வார்த்தைய.


வருண் : ஐ லவ் யூ


மாயா : மீ டூ, மீ டூ.


--------------------------The End ---------------






Rate this content
Log in

Similar tamil story from Romance