Saravanan P

Abstract Drama Inspirational

4.5  

Saravanan P

Abstract Drama Inspirational

மூன்று ஹீரோக்கள்

மூன்று ஹீரோக்கள்

1 min
302


ஐடியில் வேலை செய்யும் ஜிவா தினமும் காலை வாக்கிங் தனது ஏரியாவில் உள்ள பார்க்கில் செல்வான்.


அப்பொழுது ஜிவாவிற்கு விக்ரமன் எனும் வயதான நபர் பார்க்கில் வாக்கிங் செல்லும் போது பரிச்சியமானவர்.


இருவரும் காலை சிறிது நேரம் பேசிக்கொள்வார்கள்,ஒரு தெரிந்த முகம் என்றும் சொல்லாம்.


அன்று விக்ரமன் வாக்கிங் வந்தார்,இதயத்தின் பக்கம் வலிப்பதை கவனிக்காமல் நடந்து கொண்டிருந்தார்.


திடீரென நடைபாதையில் விக்ரமன் மயங்கி விழுந்தார்.


கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது அவருக்கு காற்று வேண்டும் என அவர்கள் உணரவில்லை.


அப்பொழுது வாக்கிங் வந்த ஜீவா கூட்டத்தை பார்த்து அந்த பக்கம் சென்று விக்ரமன் மயங்கி கிடந்ததை உணர்ந்து முதலுதவி செய்ய தொடங்கினான்.


ஏற்கனவே ஒரு நபர் ஆம்புலன்ஸ்ஸிற்கு போன் செய்ததாக கூற, பக்கத்தில் தான் ஆஸ்பத்திரி என ஒருவர் கூறி ஆட்டோ ஒன்றை நிறுத்தி நிலைமையை கூற அந்த ஆட்டோ டிரைவர் ஒப்புக்கொண்டார்.


அந்த ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவர் கரண் தனது அம்மா இதய அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நலகுறைவால் இறந்த செய்தி கேட்டு இடிந்து போய் உட்கார்ந்து இருந்தார்.


அப்பொழுது விக்ரமன் ஆஸ்பத்திரி உள்ளே கொண்டு வரப்பட ஜீவா ஆட்டோவிற்கு பணம் குடுக்க செல்ல அவர் பணம் வேண்டாம் என சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.


நர்ஸ் மருத்துவர் கரணிடம் எமர்ஜென்ஸி என கூற அவர் உடனே விக்ரமனை பரிசோதித்து டிரிட்மெண்ட் பின்பு சர்ஜரியை ஜீவாவின் கையெழுத்து பெற்று ஸ்டார்ட் செய்தார்.


பின்பு ஜீவா விக்ரமனின் மொபைலில் அவர் குடும்பத்தாரின் அழைப்புக்கு நடந்ததை கூற அவர்கள் ஜீவாவிற்கு நன்றி கூறினர்.


கரண் வீட்டிற்கு வந்து அவரின் அம்மா காலில் தலையை வைத்து கதறி அழுதபடி அன்று தான் செய்த சர்ஜரியை பற்றி கூறிக் கொண்டே அழுது கொண்டிருந்தார்.


"ஒருவருக்கு நம்மால் முடிந்த உதவியை எவருக்கும் கவலை படாமல்,நம் முழு மன உறுதியுடன் செய்தால் நீங்களும் ஹீரோ தான்"


Rate this content
Log in

Similar tamil story from Abstract