முதியோர்
முதியோர்


அம்மா! அப்பா இல்லாமல் எங்களை வளர்த்து ஆளாக்கிட்டீங்க!இப்ப உங்களை விட்டு தள்ளி நாலு ஊர் போனாலும் நீங்க என்ன செய்வீங்களோன்னுதான் தோணும்.
அப்ப உன் மனைவிகிட்டே சொல்லி என்கூடவே இருக்கச் செய்திருக்கணும் என தொண்டைவரை எக்கி வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டாள் வேதா.
சமையல் வேலை செய்து கையெல்லாம் காப்பு காய்த்திருந்ததைத் தடவியபடி ரங்கன் அம்மா! ஒண்ணு செய்றீங்களா!
இரண்டு தெரு தள்ளி முதியோர் இல்லம் ஒண்ணு இருக்கு! வர்றீங்களா!
உன்மாமனார்,மாமியாருக்கு நீ சம்பாதிக்கிறதை எல்லாம் வாரி உன் மனைவி வழங்கிட்டு வர்றா! ஏதோ இருக்கிற பாத்திரம்,பண்டம் இவற்றையும் உங்கப்பா பென்ஷனையும் வச்சு காலந்தள்ளுறேன்.
உங்களால் இந்த வீட்டை பராமரிக்க முடியலை!
ஆமா வாஸ்தவந்தான்….அதுக்காக இதை வித்துட்டு முதியோர் இல்லம் போகணும்னு என்ன கட்டாயம்?
வசந்தியும் அதாம்மா நினைக்கிறா!
இதோ பார்றா! அவ சம்பாதிக்கிறதைத்தான் அவங்க அம்மா அப்பாக்கு தரணுமே தவிர நீ சம்பாதிக்கிறதை அவங்களுக்குத் தரணும்னு எந்த சட்டத்துலயும் எழுதலை…
கோபப்படாதேம்மா!
அவங்க அம்மா,அப்பாவுக்கு சோறு போட்டு பணம் தர்றதுக்குத்தான் உன்னைப் படிக்க வைத்தேனா?
எனக்கே சோறு போட மாட்டா நானே ஹோட்டல்தான்.
அப்ப எதுக்குடா இங்கவந்து வீடுபத்தி பேசுறே?
சன்னலை ஒட்டி நித்யாவிற்கு பாட்டிவேதா பேசிக்கொண்டிருந்தது இலேசாகக் காதில் விழுந்தது.
ரேடியோவில் முதியோர் நலம் குறித்துப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த நித்யா தான் உருவாக்கிய முதியோர் ஹெல்ப் ரோபாட்டை வேகமாக விற்பனைக்கு எடுத்துச் செல்லக் கிளம்பினாள்.