saravanan Periannan

Drama Inspirational

4.7  

saravanan Periannan

Drama Inspirational

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

2 mins
193


அந்த பள்ளியில் காலை நேரத்தில் கொடியேற்றம் நடந்தது.

ஆனால் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க‌ விடப்பட்டது.

அந்த பள்ளியின் ஆசிரியர் அருள்மொழி தீயணைப்பு வீரர்களின் வீர மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேசிய கொடி இவ்வாறு ஏற்றப்பட்டது என கூறினார்.


பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு வந்த அருள்மொழி தனது ஆசிரியரை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

அருள்மொழியின் ஆசிரியர் தனது மகள் மது குடித்து விட்டு வகுப்புக்கு சென்றதால் சஸ்பென்ட் செய்தனர் என கூறி அழுதார்.

அருள்மொழி ஆசிரியரிடம் சார் உங்க பொண்ணு எங்க என கேட்டான்.


ஆசிரியர் நான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன் அருள்,யாரு கூடேயும் ஒரு வார்த்தை பேசல, எனக்கு பயமா இருக்கு அருள் என கூறினார். அருள் அந்த பெண்ணை பார்க்க சென்றான் பிறகு "பாப்பா,ஏ மா குடிச்சு உடம்ப வீணாக்கிற,பொண்ணுங்க குடிக்கிறது தப்பு மா அதுக்கு பசங்க குடிக்கிறது சரின்னு சொல்லல ,பொண்ணுங்க போராடி வாங்குன சுதந்திரத்தை உங்க வளர்ச்சிக்கு பயன்படுத்துங்க சரியா ,பாப்பா வெள்ளைக்காரன் வாழ குடிக்கிறான் ஆனா நாம குடிக்க வாழ்றோம் அப்புறம் எப்படி இந்தியா வல்லரசு ஆகும்".


அருள்மொழி அந்த கிராமத்தில் புரட்சியை உண்டாக்கியவன்.

முதன் முதலில் தனது கிராமத்தில் படித்து முடித்து விட்டு அங்கு உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தான்.


முதல் போராட்டம்:

சரியான கழிப்பறை வசதி இல்லை என்பதால் ,காடு மற்றும் கரையில் தான்‌ காலை கடனை கழிக்க வேண்டும்.

அப்பொழுது விஷ பூச்சி கடித்து சில குழந்தைகள் மயக்கம் போட்டு ‌விழுந்தனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அறிந்த தகவல் சரியான நிதி கிராம சபை வந்து சேர வில்லை. 

உடனே போராட ஆரம்பித்தனர்.


அந்த அதிகாரியை சந்தித்த அருள்மொழி "ஏன் சார் ,மக்கள்

பணத்தில் ஊழல் பண்றீங்க ,நீங்க தடுக்கிறது அந்த மக்களோட வளர்ச்சி மட்டும் இல்ல

இந்த நாட்டோட வளர்ச்சியும் தான்".

உங்க மேல புகார் குடுத்தாச்சு,நன்றி சார்.

பிறகு அந்த பணத்தை பெற்று கழிப்பறைகள் கட்டப்பட்டன.


இரண்டாம் போராட்டம்:

கிராமத்தில் தண்டோரா மூலம் அரசு இங்குள்ள விவசாய நிலங்களில்

இருக்கும் கனிமங்களை எடுக்க தங்கள் நிலம் கையகப்படுத்த படும் என அறிவிக்கப்பட்டது.

அருள்மொழி தலைமையில் இரண்டாவது போராட்டம் ஆரம்பமானது.

விவசாயம் தான் முக்கியம் என பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது நீதிமன்றத்தில் மற்றும் அந்த திட்டத்தை தற்காலிகமாகவும் நிறுத்த மனு போடப்பட்டது‌.


அந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்க பல வருடங்கள் ஆனது.

அந்த போராட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அவன் கூறிய கருத்து

"கேள்வி கேளுங்க அப்ப தான்‌ நீங்க இந்த சமுகத்தில் விழிப்புடன் இருக்கீங்க அப்புறம் எந்த விஷயத்தையும் பத்தி கேள்வி கேளுங்க எனா அது உங்க அடிப்படை உரிமை".



Rate this content
Log in

Similar tamil story from Drama