மனமும் அதில் உறுதியும்
மனமும் அதில் உறுதியும்
டேய் குட்டி காலையில சாப்பிடாம என்னடா அப்படி தூக்கம்.
கவினின் அம்மா காலை உணவு செய்தபடி கத்திக் கொண்டிருந்தார்.
கவின் மெல்ல எழுந்து சோம்பல் முறித்தான்.
கட்டிலின் அடியில் வைத்த மொபைல் உள்ளே தள்ளி இருந்தது.
குனிந்து எடுக்க கவினால் முடியவில்லை அவனின் தொப்பை சிரமம் கொடுத்தது.
கவின் தனது உடம்பை பற்றி அக்கறை எடுத்து பல வருடங்கள் ஆகியது.
அவன் அப்பா வாக்கிங் அழைத்தும் போக மாட்டான்.
அம்மா காலை தினமும் சாப்பிட சொல்லியும் சாப்பிடமான்.
ஆரோக்கியமற்ற உணவினால் மட்டும் தொப்பை வராது.
உணவை நேரத்திற்கு சாப்பிடாமல் அதுவும் காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது கேடு தான்,கெட்ட நீர் சுரந்து நாம் அடுத்த வேளை அதீத பசியினால் சாப்பிட்டு உடல் பருமன் அதிகமாகிறது.
வாழ்க்கையில் அனைவரும் ஒரு தருணம் நம் மனதுடன் பேசி இருப்போம்,அதன் சொல் மழை பார்க்க வரண்ட நிலம் இழுக்கும் முதல் மழை நீர் போல் சட்டென்று உள் இழுக்கப்படும்.
கவின் தனது உடல் பருமனை பற்றி கவலை பட ஆரம்பித்து அவன் மனம் சொல்லி தான்,அவனுக்கு அந்த உடல் பருமனால் வந்த பிரச்சினைகள் அவன் அதை களைய வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது.
இரண்டாவது காரணம், அவனின் திருமண பேச்சை வீட்டில் எடுத்தது தான்.
தனது உடல் பருமனை குறைக்க கவின் முடிவு எடுத்தான்.
வாக்கிங்,யோகா,கட்டுப்பாடான சத்தான உணவு.
மூன்று மாதத்தில் சிறு பலன் கிடைத்தது.
விடாது முயற்சி செய்த கவின் ஒரு வருடத்தில் தனது ஆரோக்கியமான உடலை மீட்டெடுத்தான்.
