மாயையின் வழி
மாயையின் வழி
ருத்திரன் மற்றும் ப்ரதீப் இருவரும் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு இருந்தனர்.
இருவரின் மாய சக்தியும் சுற்றி இருந்த அந்த காட்டை அழித்து கொண்டிருந்தது.
ப்ரதீப் தனது பலம் வாய்ந்த கரியா மந்திரம் மூலம் ருத்திரனை சாம்பலாக்கி விடுகிறான்.
பின்பு அந்த சாம்பல் மண்ணொடு மண்ணாக கலந்து விடுகிறது.
ப்ரதீப் அந்த இடத்தில் நின்று அதை உற்று கவனித்து கொண்டிருந்தான்.
தீடீரென ஒரு பெரும் மண் புழுதி உண்டாகியது.
அது அந்த இருவரும் சண்டை போட காரணமாயிருந்த மந்திர கோலை அங்கு இருந்து தூர எடுத்து சென்றது.
ப்ரதீப் தனதே சக்தியை எவ்வளவு உபயோகபடுத்தியும் அதை தடுக்க இயலாமல் துவண்டு விழ அந்த மண் புழுதி அந்த கோலை மண்ணுக்குள் புதைத்து விட்டு ப்ரதீபை நோக்கி சென்று அவனை சுற்றி ஒரே மண் புற்றாக உருவாகி விடுகிறது.
ப்ரதீபின் அவன் சக்தியை அந்த புற்றை உடைக்க பயன்படுத்த பயன்படுத்த அந்த புற்று பலம் பெற்று வந்தது.
ப்ரதீப் தனது மாய சக்தி மூலம் அதில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான்.
தனது சக்தியை ப்ரதீப் பலம் படுத்த தொடங்கினான்.
20 வருடங்கள் கடந்து சென்றது,
புற்றை உடைத்து வெளி வந்த ப்ரதீப் தன்னை சுற்றி இருந்த புற்று மண்ணை ஒரு பாத்திரத்தில் அடைத்து தன்னுடன் எடுத்து கொண்டு அந்த மந்திர கோலை எடுக்க சென்றான்.
ப்ரதீப்,ருத்திரன் இரு தலை சிறந்த வார்த்தை மந்திரங்களை கற்று தேர்ந்தவர்கள்.
இருவரும் காட்டில் வேட்டையாட சென்ற பொழுது ஒரு மான் தனது சக்தியால் ஒரு சிங்கத்தை அந்திரத்தில் தூக்கி நிறுத்தியது.
தீடீரென ருத்திரன் அதை நெருங்க அது ஒரு மந்திர கோலாக மாறியது.
ருத்திரன் அவனுக்கு தெரிந்த ஒரு மந்திரத்தால் அதன் சக்தியை கிரகிக்க ஆரம்பிக்க சிறிது சக்தி அவனை அடைகிறது.
ப்ரதீப் அவனை தடுக்க இருவரும் சண்டையிட ஆரம்பித்து ருத்திரன் அழிக்க படுகிறான்.
ஆனால் ருத்திரன் கிரகித்த சக்தி அவனை இறந்தும் மண்ணை கட்டுபடுத்த உதவியது.
ருத்திரன் இதனால் ப்ரதீபை சிறை வைத்தான்.
தற்பொழுது வெளி வந்த ப்ரதீப் அந்த மந்திர கோலை தேடி செல்ல வேண்டிய வழிமுறைகளை செய்ய ஆரம்பித்தான்.
