குடும்பத்தில் நாலு சகுனிகள் 05
குடும்பத்தில் நாலு சகுனிகள் 05
வீட்ல இருக்க கிழவிக்கு, உடம்பு சரி இல்லை, கிழவி நேத்துல இருந்து படுத்த படுக்கியா இருக்கு, முதுகு வலி , கால் வலி ரொம்ப இருக்கறதுனால, எழுந்து நிக்க முடியல.
இப்போ, ஆதித்யா, அசோக், ரகு, விசு எல்லாம் உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க.
ரகு to ஆதித்யா : வா டா. நம்ம எல்லாரும் உட்கார்ந்து பேசி எவ்ளோ நாள் ஆச்சு.
ஆதித்யா : ஆமாம் டா. உனக்கு நெத்தி ஏறுது போல, முடிய காணோம்.
ரகு : சிந்தனைவாதிக்கு எல்லாம் முடி கொட்டும், முடி இருக்காது டா.
ஆதித்யா : என்ன சிந்தனை, எந்த மாட்டுக்கு என்ன புண்ணாக்கு வைக்கலாம்னா.
ரகு : ஆமா பா நாங்க விவசாயி, நீ மெட்ராஸ்ல பெரிய அபீஸ்ர்.
ஆதித்யா : நீ விவசாயியா இருக்கலாம், நான் பெரிய ஆஃபீஸ்ர்ன்னு சொன்னா ஊரே சிரிக்கும்.
ரகு : ஊர்ல இருக்கும் போது ஒழுங்கா மாட்ட மேய்க்க கூட மாட்ட. அங்க வேலை லாம் எப்படி டா ஈசி ah.
ஆதித்யா : ஊர்ல எப்படி வேலை செய்வனோ அதே மாதிரி தான் அங்கையும் வேலை செய்வேன்.
ரகு : டேய் ஒழுங்கா வேலை செய்லனா, வேலைய விட்டு தூக்கிட போறாங்க.
ஆதித்யா : வேலை போன முடியே போச்சுன்னு, ஊருக்கு வந்து விவசாயம் பண்ண வேண்டியது தான். விவசாயம் கொஞ்சம் டச் விட்டு இருக்கு, நீ சொல்லி தர மாட்டியா.
ரகு : உனக்கு சொல்லி தராம யாருக்கு சொல்லி தரப்போறேன். அப்பறம் அசோக் ஏன் அமைதியாவே இருக்கான்.
அசோக் : நான் நீங்க பேசுற அழக ரசிச்சிட்டு இருந்தேன் டா.
ரகு : நீங்க ரசிச்சது போதும் , நாங்க உங்க பேச்சை ரசிக்குறோம், நீர் பேசும்.
அசோக் : வள்ளினு ஒரு பொண்ண பாத்துட்டு இருப்பியே, அது என்னாச்சு டா.
ரகு : அவ வள்ளி இல்ல டா குள்ளி.
அசோக் : சொல்லிட்டாரு டா அமிதாப் பச்சன்.
ரகு : டேய் அந்த பொண்ணு வேற பையன பாத்துட்டு போயிடிச்சு டா.
அசோக் : இது நம்ம குடும்பத்துக்கு அசிங்கம் இல்லையா.
ரகு : நம்ம குடும்பத்துல எவனுக்கு டா பொண்ணு செட் ஆகி இருக்கு.
அசோக் : நம்ம ஆதித்யாக்கு.
ரகு : டேய் அப்பிடியா.
ஆதித்யா : ஆமா டா ஊரு full ah சொல்லு.
ரகு : எங்க கிட்ட சொன்னா என்ன டா.பொண்ணு என்ன ஜாதி டா
ஆதித்யா : ஆரமிச்சிட்டீங்களா.
ரகு : நம்ம வீட்டு பெரியவங்க கேட்பாங்கனு சொல்ல வந்தேன்.
ஆதித்யா : அப்பறம் பேசலாம் டா இத பத்தி. நேரம் வரட்டும்.
ரகு : விசு நீ எதுனா பேசு டா.
விசு : கெழவி வேற படுத்த படுக்கையா இருக்கு, நம்ம இங்க ஜாலியா பேசிட்டு இருக்கோம்.
ரகு : நம்ம பேசறதே எப்பயாவது, இதெல்லாம் பாத்துட்டு இருக்க முடியுமா.
விசு : அசோக் நீ என்ன, பிஸ்னஸ் பண்ணனும்னு சொன்ன இன்னும் வேலையே செஞ்சிட்டு இருக்க.
அசோக் : பிஸ்னஸ் பண்ணுவேன் கொஞ்சம் நாள்ல அதுக்கு தான் பிளான் போட்டு இருக்கேன்.
விசு : இந்த சொத்தை பிரிச்சா, நீ பிஸ்னஸ் பண்ண காசு கிடைக்கும்ல.
அசோக் : கிடைக்கும் தான் ஆனா நான் சொத்தை பிரிக்க சொல்லலபா.
விசு : சின்ன வயசுல இருந்த மாதிரியே இருக்க டா, மனசுல இருந்து பேச மாட்டுரியே.
அசோக் : இந்த விஷயத்துல எவனும் வாய்ய தொறக்க மாட்டான், சொத்தை பிரிக்க ஆசை படுறாங்கனு பேரு ஆயிடுமல. நீ வேணா ஆதித்யாவ கேளு.
ஆதித்யா : நல்லா தான போய்ட்டு இருந்துது, என்ன ஏன் இழுக்குறீங்க இந்த விஷயத்துல.
ரகு : அப்போ எல்லாம் தெளிவா இருக்கீங்க பேர கெடுத்துக்க கூடாதுனு.
நாலு பேரும் பேசி முடிக்குறாங்க.
விசுவோட அப்பாவும்(இவரு வீட்டோட மாப்பிள்ளை தான் ), இன்னொரு வீட்டோட மாப்பிள்ளையும் பேசிக்குறாங்க.
விசு அப்பா : என்ன பா வீட்ல எதோ நாத்தம் அடிக்கற மாதிரி இல்ல.
வீட்டோட மாப்பிள்ளை : நீ எதுனா சாக்கடை சுத்தம் பண்ணி இருப்ப.
விசு அப்பா : அது ரெண்டு வாரம் முன்னாடி பண்ணதுயா.
வீட்டோட மாப்பிளை : ரெண்டு வாரம் முன்னாடி பண்ணது இப்ப வரைக்கும் நாருதா.
விசு அப்பா : யோவ் கலாட்டா பண்ணாதயா.
வீட்டோட மாப்பிள்ளை : ஆனா நிஜமாவே எங்கயோ வீட்ல நாத்தம் அடிக்குது.
விசு அப்பா : எலி எதுனா செத்து கிடக்கும்.
வீட்டோட மாப்பிள்ளை : சரி பா எங்கன்னு தேடி பார்ப்போம்.
ரகுவும் விசவும் பேசிக்குறாங்க.
ரகு : டேய் எதோ வீட்ல நாத்தம் அடிக்குது டா.
விசு : ஆமா டா நீ சின்ன வயிசுல ஸ்கூல்ல டிரௌசர்லேயே ஆய் போய்ட்டியே
அது மாதிரி எதுனா பண்ணிட்டியா.
ரகு : டேய் அது சின்ன வயசு டா.
விசு : எனக்கு ஒரு டவுட் டா.
ரகு : ஒரு நாள் குளிக்கலனா இவளோ நாறுமா என்ன.
விசு : டேய் குளிக்கயா நீ.
.
ரகு : அப்போ கூட குளிக்கலனா இவளோ நாராது.வேற எங்க இருந்து நாத்தம் வருது.
விசு : எவனோ கால்ல அசிங்கத்தை மிதிச்சிட்டு வந்து இருக்கான், அந்த நாத்தம் போல தான் தெரியுது.
ஆதித்யா அம்மாவும், அசோக் அம்மாவும் பேசிக்குறாங்க.
ஆதித்யா அம்மா : உன் மேல ரொம்ப நாத்தம் அடிக்கிற மாதிரி தெரியுது டி.
அசோக் அம்மா : ஐயோ அக்கா நான் உங்க மேல இருந்து தான் அந்த நாத்தம் வருதுனு நினைச்சிட்டு இருந்தேன்.
ஆதித்யா அம்மா கிட்ட போய் அசோக் அம்மாவை மோந்து பாக்குறாங்க
ஆதித்யா அம்மா : உன் மேல இல்ல டி நாத்தம். வேற எங்கயோ இருந்து வருது.
அசோக் அம்மா : வீட்ட சுத்தி பாத்தா கண்டுபிடிச்சிடலாம்.
எல்லாரும் வீட்ட சுத்தி நாத்தம் எங்க வருதுன்னு தேடிட்டு இருக்காங்க.
கெழவியோட முதல் பொண்ணோட பொண்ணு, பேரு கீதா, கெழவியோட ரெண்டாவது பொண்ணோட பொண்ணு விஜயா.
கீதாவும் விஜயாவும் கிழவி ரூம்ல இருந்து வராங்க.
கீதா : எல்லாரும் வாங்க இங்க, பாட்டி ரூம்ல இருந்து தான் நாத்தம் வருது, கிழவி படுக்கையிலே two பாத்ரூம் போயிடிச்சி.
விசு அப்பா : two பாத்ரூம்னா.
வீட்டோட மாப்பிள்ளை : யோவ் கிழவி கக்கூஸ் போய்டிச்சியா படுக்கியில.
விசு அப்பா : பாவம் கிழவியால எழுந்துக்க முடியல.
கீதா : சரி இப்போ யாரு அத சுத்த படுத்தரது.
விசு அப்பா : கண்டிப்பா ஆம்பளைங்க பண்ண முடியாது, பொண்ணுங்க தான் பண்ணும்.
கீதா : பெண்கள் யாருன்னா முன்வந்து செஞ்சு ஆகணும்.
ஆதித்யா அம்மா : பாட்டி பெத்த பொண்ணுங்க ரெண்டு பேரு வீட்ல இருக்காங்க அவங்க தான் சுத்தம் பண்ணனும்.
விசு அம்மா : நீங்களும் பொண்ணு மாதிரி பொண்ணு மாதிரின்னு சொல்லி, எவளோ காரியத்தை சாதிச்சு இருக்கீங்க, நீங்க போய் சுத்தம் பண்ணுங்க.
ஆதித்யா அம்மா : இதுவே என் அம்மாவா இருந்தா நான் இப்படி பேசிட்டு நிக்கமாட்டேன்.
கீதா : நீங்க ஏன் சண்டை போட்டுக்கிறீங்க, எல்லாம் பொம்பளைங்க பேரும் எழுதி குளுக்கி போடுவோம், யாரு பேரு வருதோ அவங்களே சுத்தம் பண்ணட்டும்.
ஆதித்யா அம்மா : இதுக்கு நான் ஒத்துக்கல.
விசு அம்மா : இது வீட்டோட தீர்மானம், நீங்க அத கேட்டுத்தான் ஆகணும்.
கீதாவும் விஜயாவும் எல்லா பொம்பளைங்க பேரையும் எழுதி குலுக்கி போடுறாங்க.
ஒரு சீட்ட எடுக்க போற டைம்ல. ஆதித்யா அப்பா வந்துடுறாரு.
ஆதித்யா அப்பா : எதுக்கு சீட்டு எல்லாம் போடுறீங்க , ஒரு ஆளுக்கு காசு கொடுத்து சுத்தம் பண்ண சொல்லலாம்.
ஆதித்யா அம்மா பேரு மூச்சி விடுறாங்க, கிட்ட தட்ட எல்லா பொம்பளைங்களுக்கும் அதே மன நிலை தான்.
விருது வழங்கும் நேரம் வந்துவிட்டது. இந்த வாரம் சிறந்த பணியாளர் விருது யாருக்குனு பார்ப்போம். கிழவி உடும்பு சரி இல்லைனாலும், கெழவியால பேச முடியும். அதனால கிழவியும், ஆதித்யா அப்பாவும் தான் விருது யாருக்குனு முடிவு பண்றாங்க.
விசு அப்பாவும், விஜயா அப்பாவும் பேசிக்கிறாங்க, வீட்டோட மாப்பிள்ளைங்கள தான் இனி இப்படி கூப்பிட போறோம்.
விசு அப்பா : யோவ் உனக்கு எப்படியா கல்யாணம் ஆன புதுசுல விருது கொடுத்தாங்க, இந்த வீட்ல அவ்ளோ சீக்கிரம் விருது எல்லாம் கொடுக்க மாட்டாங்களே.
விஜயா அப்பா : அதுவா அது நம்ம மாமனார் உயிரோட இருந்த டைம், ஒருநாள் அவரோட ராசியான கோமணத்த காணோம், அவர் எங்க முக்கியமான வேலைக்கு போனாலும் அந்த கோமணத்த தான் கட்டுவாரு, வீடு full ah தேடிட்டாரு கிடைக்கல, வீடே பதட்டமா இருக்கு, அன்னைக்கு நம்ம கிழவிக்கு ஒரு அடி கூட விழந்தது.
விசு அப்பா : அப்பறம் நீ தான் அந்த கோமணத்த கண்டுபிடிச்சு கொடுத்து இருப்ப.
விஜயா அப்பா : இல்ல நான் தான் அந்த கோமணத்த துவைச்சு, ஐயன் பண்ணி கொண்டு போய் கொடுத்தேன்.
விசு அப்பா : த்து.போயும் போயும் மாமனார் கோமணத்தயா துவைப்பாங்க, இத வேற வெளிய தைரியமா சொல்ற.
விஜயா அப்பா : சரி அத விடு.இந்த வாட்டி எனக்கு தான் விருது கிடைக்கும்.
விசு அப்பா : இந்த வாட்டி யாரு கோமணத்த துவைச்ச.
விஜயா அப்பா : யோவ். இந்த வாட்டி மாட்ட கழுவுனது யாரு.
விசு அப்பா : நீயா, அதுக்கு தான் வேலை ஆளுங்க இருக்காகங்களேன்.
விஜயா அப்பா : அவங்க ரெண்டு நாள் லீவு.
விசு அப்பா : அப்போ கூட உனக்கு இந்த விருது சத்தியமா கிடைக்காது.
விஜயா அப்பா : பார்ப்போம்.
எப்பவும் இல்லாத ஆச்சர்யமா, இந்த வாட்டி விருது ரகு அம்மாக்கு போகுது, எல்லாரும் ஷாக் ஆகிட்டாங்க.
ரகு அம்மா, அந்த விருது எனக்கு வேணாம்னு சொல்லிட்டு விருத திருப்பி கொடுத்துட்டு போயிடுறாங்க. ரகு அப்பா கை தட்டுறாரு.
