கடவுள்
கடவுள்


சிங்கம் பெரிதாகக் கர்ஜனை செய்தது. இந்த காட்டிற்கு நான்தான் இராஜா! என்னை வணங்காது கடவுளைப்போய் கும்பிடுகிறாளே மயிலக்கா! கூப்பிடு அவளை என்றது.
நரி அமைச்சரே! மது தேறல் ஜாடியை எடுத்து வையுங்கள்.இவளை யாரென்று பார்ப்போம் என்றது.
வேண்டாம் மன்னா! அவள் கடவுள் அனைவரையும் விடாது வணங்குபவர்கள். கடவுள் இல்லை என்பது உங்கள் கொள்கை.ஆனால் கடவுள் என்பது நம்முடன் வாழ்ந்து மடிந்தவர்கள் ஆன்மாவாக நம்முடன் இருப்பவர்
கள்.மனசாட்சிப்படி வாழும்போது தெய்வங்கள் அவர்கள் பின் செல்லும் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் படித்த உமக்குத் தெரியாதா? எதற்காக இந்த வீணான பசப்பு நாடகம்?!
நரி! காட்டில் ஒரு பயல் நம்ம சொன்ன பேச்சு கேட்கமாட்டேங்கிறான். அவனவன் வேலையைப் பார்க்கப் போயிடறான்.பக்கத்து காட்டில் தேர்தல் வருதாம். அதுல நின்னு ஜெயிக்கணும். அதுக்கு மக்கள் ஓட்டு வேணும். எல்லாம் தோத்துடுவோம்னு பயம்தான்.
அதான் பில்டப் வுட்டுப் பார்க்கிறேன்.
அதுக்க மயிலாள்தான் கிடைத்தாளா மன்னா!
நானும் எப்பதான் பெரியாளா ஆவுறது!!!