கருடபுராணம்
கருடபுராணம்


உலகம் முழுவதும் சுற்றி வந்தியே புறா! என்ன தெரிந்துகொண்டாய்?
மனிதர்கள் சுயநலமாய் இருப்பதைப் பார்த்து சில விலங்கினங்களும் அதைப்போல வாழப் பழகியுள்ளன.
எங்கள் இனத்தைப் பார்த்தாயா?
பார்த்தேன் நெல்லி மரமே! மரங்கள் அனைத்துமே சுயநலமில்லாமல்தான் வாழ்ந்து வருகின்றன.
சொர்க்கலோகத்திற்குப் போனாயா?
போனேன். ஆனால் வாயில்காப்போன் இங்கு பிறவி முடிந்தபின்தான்வரவேண்டும் எனச் சொல்லிவிட்டான்.
அருகில்தானே எமலோகம்..நீ அங்கு போனாயா?
ஐய்யய்யோ! அங்கு யார் போவார். நான் சற்று தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோதே நம்ம மனிதர்களில் அதான் எப்ப பார்த்தாலும் அடுத்தவர் பொருளுக்கும்,இலஞ்சத்துக்கும் ஆசைப்பட்டு காடை,கௌதாரியிலிருந்து அத்தனையும் தின்னுட்டு கண்டபெண்களுடன் ஊர் சுற்றித் திரிந்தானே ஒரு அரசியல்வாதி..பெயர் சட்டுன்னு ஞாபகம் வரமாட்டேங்குது……போஸ்டரில்தான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அவனை அரக்கர்கள் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தனர்.
சினிமாவில் நல்ல வேடத்தில் வருவதுபோல பத்துபடம் பண்ணவேண்டியது. மக்களுக்கு அவர்களைப்போல நல்லவர் இல்லை என்பதுபோல அவர்கள் பிறந்தநாள்,நல்லநாளின்போது நாய்க்கு எலும்புத்துண்டு வீசி எறிவதுபோல ஐந்தோ,பத்தோ அள்ளி வீச வேண்டியது..அப்புறம் எலக்ஷனில் நின்னு ஜெயிச்சு மக்கள்சொத்தை அமுக்கவேண்டியது..இதுதானே நடந்து வருது!
ஏன் நீ உன் கிளைக் கைகளை வைத்து உன்மேல் கொடி கட்டும்போது கழுத்தை இறுக்கிக் கொன்றுவிடவேண்டியதுதானே!
எனக்கு ஏன் இந்த வேலை?
கடவுள் பார்த்துப்பார். நீ பார்த்துட்டு வந்தியே! அந்த உலகத்தை அவங்களுக்கு காட்டப்போறார். வாழ்க்கையின் இரகசியமே கருடபுராணம்தானே!
இது நமக்குப் புரியுது! பாவம் செய்துகொண்டிருக்கிற மக்களுக்கு ஏன் புரியமாட்டேங்குது என்றபடி புறா தனது சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியது.