anuradha nazeer

Horror

4.6  

anuradha nazeer

Horror

கொரோனா

கொரோனா

1 min
11.5K


கொரோனா வைரசை சீனா பரப்பியதா என விசாரணை நடப்பதால் சுத்தமாக இருங்கள் என அமெரிக்கா சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.


வாஷிங்டன்


சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா குடும்பத்தைச் சார்ந்த கோவிட் 19 வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது எனினும், உகானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து விஞ்ஞானிகள் கவனக்குறைவால் கொரோனா உலகிற்குப் பரவியது என்ற செய்திகளும் அடிபட்டன.


அமெரிக்காவின் அறிவியலாளர் ஸ்டீவன் மாஷர், கொரோனா பரவியதாக கூறப்படும் மார்கெட்டுக்கும், வைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கும் 10 மைல் தொலைவுதான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். கவனக்குறைவால் அல்ல; வேண்டுமென்றே வைரஸ் பரப்பப்பட்டது என்ற தகவல்களும் உண்டு. 


அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வருகின்றன. இது குறித்த விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மிக் பாம்பியோ சீனா இந்த விஷயத்தில் உண்மையை மறைப்பதாகவும், நடந்ததை உலகிற்கு கூற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மிக் பாம்பியோ மேலும் கூறியதாவது:-


இந்த வைரஸ் சீனாவின் உகானில் தோன்றியது என்பது எங்களுக்குத் தெரியும்.ஈரமான சந்தை இருந்த இடத்திலிருந்து ஒரு சில மைல் தொலைவில் உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க அமெரிக்க அரசு விடாமுயற்சியுடன் செயல்படுகிறது.


உகான் பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட வவ்வால்கள் அருகில் உள்ள சந்தையில் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வவ்வால்களை சந்தையில் விற்பதில்லை. மேலும் உணவு விடுதிகளில் சமைப்பதும் இல்லை என புதிய தகவல்கள் கூறின. இது தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் 


சீனா, அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க கொரோனா வைரஸை பரப்பவில்லை என்றாலும் வேறு ஒரு காரணம் உள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகளைக் காட்டிலும் சீன விஞ்ஞானிகள் வைரஸ் சோதனையில் தலைசிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள மடத்தனமாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்களது அஜாக்கிரதையால் வைரஸ் வெளியே கசிந்துள்ளது” என பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். 


ஆனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்து உள்ளது


Rate this content
Log in

Similar tamil story from Horror